ஐரோப்பாவில் விற்பனையாகும் ஆட்டு இறைச்சியில் நாய், பூனைக்கறி கலப்படம்
ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த இந்திய ஆட்டு இறைச்சியில் நாய் மற்றும் பூனைக்கறி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இறைச்சியுடன் கழுதைக் கறியும், குதிரை கறியும் கலந்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டு இறைச்சியுடன் ஏதோ ஒரு விலங்கின் கறி கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றிய டாகுமெண்டரி படம் ‘பி.பி.சி’ டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேட்டி அளித்த நிபுணர். இந்திய ஆட்டு இறைச்சியை பரிசோதித்து பார்த்ததில் அதில் எந்த மிருகத்தின் கறி கலப்படம் செய்யப்பட்டுள்ளது என தெரிய வில்லை.
அநேகமாக அதில், நாய் அல்லது பூனையின் இறைச்சி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். அது ஆட்டிறைச்சியுடன் ஒத்து போகிறது என தெரிவித்தார். இதே கருத்தை தான் அந்த ‘ஷோ’வின் செய்தி தொடர்பாளரும் கூறியுள்ளார். இருந்தாலும் இந்திய ஆட்டிறைச்சியுடன் கலப்படம் செய்யப்பட்டிருப்பது எந்த மிருகத்தின் இறைச்சி என மிக தெளிவான பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Thats the reason Muslims are recommending halal certificate but this balu sena still want to eat dirty food.
ReplyDelete