பெற்கேணி-பண்டாரவெளி பிரதான கொங்கிரிட் வீதியின் தற்போதைய அவலநிலை
(எஸ்.எச்.எம்.வாஜித்)
மன்னார் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு செந்தமான பெற்கேணியில் இருந்து பண்டாரவெளிக்கும்இமணற்குளத்திற்குமஇவெளிமலை மற்றும் அரிப்பு ஆகிய மீள்குடியேற்ற கிராமங்கஞக்கு செல்லும் கொங்கிரிட் அப் பிரதான வீதி தற்போது பொது மக்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.றஸ்மின் தெரிவிக்கையில்,
இப்பாதை சுமாராக 8 மாதகாலமாக குண்றும் குளியுமாக காணப்படுகின்றது.தற்போது மன்னார்-முசலியில் மழைகாலம் என்பதனால் பாடசாலை மாணவர்கள்இவயோதிபர்இகர்ப்பிணிதாய்மார்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பல மாதகாலமாக பல்வோறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர.
இப்பாதை இரண்டு கட்டங்களாக செய்யப்பட்டது.முதல் கட்டமாக செய்யப்பட்ட பாதை உடையாமல் நல்ல நிலையில் உள்ளது பின்பு இரண்டாம் கட்டமாக செய்யப்பட்ட கொங்கிரிட் பாதைதான் உடைந்து காணப்படுகின்றது.இரண்டாம் கட்டமாக பாதையினை செய்த ஓப்பந்தகாரர்கஞக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப் பிரதான பாதையில் தான் முசலி பிரதேச சபையின் உப அலுவலகம் அமையப்பெற்றுள்ளன.இப்பதையின் ஊடாக பாரியலவிலான வாகனங்கள்லான டிப்பர் மண்மை ஏற்றி செல்வதனால்தான் அப்பாதைகள் உடைகின்றது. எனவே மக்களின் நலனினை கருத்தில் கொண்டு அப்பிரதேச பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் மக்கஞம் ஒன்றாக சேர்ந்து பாரியலவிலான வாகனங்கள் வருவதனை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அத்துடன் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பகளர் அவர்கஞம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேண்டிகொள்கின்றேன்.
Post a Comment