தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணியின் துண்டுப்பிரசுரம்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் வரை 'தெயட்ட கிருள' நிகழ்வினை பகிஷ்கரிப்போம்-மட்டக்களப்பில் வெளிடப்பட்டுள்ள 'சூடு போடும் அரசில் ஒட்டியிருக்கும் சுரணை கெட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே விழித்தெழுவது எப்போது??' துண்டுப்பிரசுரத்தில் கோரிக்கை
'சூடு போடும் அரசில் ஒட்டியிருக்கும் சுரணை கெட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே விழித்தெழுவது எப்போது??' எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி என பெயர் தாங்கிய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தொன்று தொட்டு மிக கண்ணியமாக வாழும் நாம் அண்மைக்காலமாக எமது மார்க்கம் மற்றும் கலாசார ரீதியான பல அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நச்சுக்கருத்து;களுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றது.
கடந்த ஜெனீவா பிரேரனையின் போது எமது முஸ்லிம் பிரதிந்pதிகள் முஸ்லிம் நாடுகளிடம் கேட்ட வாழ்வுப் பிச்சையின் காரணமாக அந்தப் பிரேரணையில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
ஆனால் இன்று எமது நிலை என்ன?அரசாங்கத்தினாலும் பேரினவாதிகளாலும் தலையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய நாங்கள் காலின் கீழ் போட்டு மிதிக்க எத்தனிக்கப்படுவதுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கின்றது.
இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியுமாக இருந்தும் எமது சமூகத்தில் இருக்கும் எட்டப்பர்களான முஸ்லிம் அரசியல் தலைவர்களின் செயல்களும் சிலரின் ஆழ்ந்த மௌனங்களும்தான் எம்மை எங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
'16 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன' 'இந்நாட்டின் இழி பிறவிகள் பன்றி உருவில் இறைவன் பெயரை எழுதி பவனி வந்தார்கள்' 'ஹலால் எனும் மார்க்கச் சட்டம் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது' 'ஹிஜாப் உடையும் காழி நீதிமன்றமும் குறிவைக்கப்பட்டுள்ளது' 'வீடு புகந்து தாக்கும் அளவிற்கு நடுவீதியில் வைத்து நமது பெண்ணின் ஹிஜாபை கழற்ற முயற்சிக்கும் அளவுக்கு நிலமை மோசமடைகின்றது' உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டு இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
'அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தால்தான் நமக்கு பாதுகாப்பு'என மேடைகளில் முழங்கிய அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களே!இ 'எனக்கு தந்திருக்கும் பொருளாதார பிரதியமைச்சு இந்நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்த கௌரவம்' எனச் சொன்ன பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே!இநோன்பு காலத்தில் கஞ்சிப் பானைக்குள் சண்டை காட்டிய அமைச்சர் அதாவுல்லா அவர்களே!இமட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் முஸ்லிம் முழு மந்திரி பஷீர் சேகுதாவூத் அவர்களே!இமுஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என வீறாப்புப் பேசிய அகில இலங்கை முஸ்pம் காங்கிரஸை நிறுவிய அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களே!
நீங்கள் ஒரு முஸ்லிம் தாயின் வயிற்றில் பிறந்து கலிமாச் சொன்ன மறுமை பற்றிய பயம் கொண்ட முஸ்லிம்களாக இருப்பீர்களேயானால் பிர்அவுன் முன்னிலையில் தைரியமாக பேசிய மூஸா நபியை பாதுகாத்த அல்லாஹ் நம்மையும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்
'தற்காலிகமாகவேனும் இந்த அரசை விட்டு வெளியேற்றுங்கள்' 'உங்கள் அமானிதம் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்' 'கிழக்கு மாகாண சபையிலும் உங்கள் ஆதரவினை விலக்கிக் கொள்ளுங்கள்' 'அல்லாஹ்வை முன்னிருத்தி தைரியமாக சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுங்கள்' 'பாராளுமன்றத்தில் பேசுவதற்கு வாயைத் திறங்கள்' 'தலைவர் இறுதியாக எழுதிய புத்தகத்தை கொஞ்சம் தூசுதட்டிப் பாருங்கள்' உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது தலைவர்கள் திருந்துவார்கள் என என்ற பகல் கணவுகளை கலைத்து விட்டு நாமும் சில நடவடிக்ககளை முன்னெடுக்க வேண்டும்.ஏனெனில் பாராளுமன்றத்திற்கு நேரடியாகச் செல்லவில்லை.நாம்தான் அவர்களை அனுப்பி வைத்தோம்.அவர்கள் அம்பு எய்தவர்கள் நாங்கள்.
பொறுத்திருந்து பாறுங்கள்.22, 23ம் திகதிகளில் ஜனாதிபதி மட்டக்களப்பு வருகிறார்.இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பாக அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் கோரிக்கைகளையும் மனுக்களையும் சில இராஜதந்திர எச்சரிக்கைகளையும் மேற்கொள்வதற்கு பதிலாக ஊரை அலங்கரித்து ஒலிபெருக்கிகளில் புகழாரம் பாடுவதுடன் பள்ளிவாயல்களில் துஆப்பிரார்த்தணை செய்தல்இஅரேபிய முறையில் பகல் போசனம் வழங்குதல் போன்ற இராஜ விசுவாச நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
மக்களாகிய நாம் எல்லாவற்றையும் மறந்து விட்டு வீதியின் இரு மருங்கிலும் ஆண்களும் பெண்களுமாக கூடி நின்று வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் ஜனாதிபதியின் புன்னகைப்புக்கும் கையமைப்பிற்கும் மந்தைகள் போல் தலையாட்டுவோம்.
ஆகவே நாட்டின் சிறுபான்மையினராக இருக்கும் நாம் நமக்கெதிராக் கிளர்ந்தெழுந்துள்ள ஒரு சிறிய வன்முறைக் கூட்டத்தின் பிற்போக்கு கொள்கைகளை அரசின் உதவியுடன் ஜனநாயக ரீதியில் முறியடிக்க வேண்டும்.
'தெயட்ட கிருள'தேசத்துக்கு மகுடம் நிகழ்வினை முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் வரை பகிஷ்கரிப்போம் எனவும் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
dear brother unkaludaya thundu pirasurem.
ReplyDeleteWord file gmail panna mudinthal.
Pls send me: rajoon88@gmail.com
முஸ்லிம் அரசியல் வாதிகள் ஏற்றுக்கொள்வார்களா?
ReplyDeleteare we happy at this moment in this country of ours? No. So do not go to any of the meetings. do not spend money on unnecessary things. spend on education. to learn languages, and life skills.
ReplyDeletemuslimaha erunthal atrukkolwarhal
ReplyDelete