Header Ads



ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும் தவறாக எடைபோடுவது தவறு..!


 (ஜுனைட் நளீமி)

அன்மையில் ஒரு தேவைக்காக கொழும்பிற்கு சென்றிருந்தேன். பஸ்ஸில் பயனித்த நான் கொழும்பு புகையிரத பஸ்தரிப்பில் இறங்க வேண்டிய நிலை. அவசரமாக இறங்கும் போது என்னுடன் வந்திருந்த உறவினர் தனது தங்க கைப்பட்டியை தவறவிட்டு விட்டு இறங்கினார். அப்போது பஸ்ஸிலிருந்து ஒரு சிங்கள சகோதரர் எழுந்து வந்து எமது ஆசனத்தில் தவறவிடப்பட்ட கைப்பட்டியை எம்மிடம் கொடுத்தார். 

நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகின்றது என்று ஒருபுறம் முஸ்லிம்கள் மத்தியில் ஒட்டு மொத்த சிங்கள சமூகத்தையும் இனவாதிகளாகவும் குரோத உணர்வுடனும் பார்க்க தூண்டும் அண்மைக்கால சிலரது நடவடிக்கைகள் போலியான பிரச்சாரங்களுக்குள்ளும் எமது மக்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றார்களோ என என்னத்தோன்றியது. 

பொது பல சேனா என்ற அடிப்படைகளற்ற அடிப்படைவாத அமைப்பு சிங்கள சகோதர சமூகத்தை பிழையாக வழி நடாத்த முற்படுகையில் எமது சமூகமும்  பிழையாக வழிநடாத்தப்பட்டு விடுவோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இஸ்லாம் போதிக்கும் அன்பு கருணை சமாதான என்ற கருப்பொருள்கள் எம்மை விட்டும் தூரமாகிவிடுமோ என கவலையளிக்கின்றது. மனிதனை நேசிக்கும் போதுதான் உண்மையான இஸ்லாத்தை நாம் அடுத்தவர்களுக்கு புரியவைக்க முடியும். தாயிப் வாசிகளைவிட கொடூரமானவர்களாக இலங்கை சிங்கள சகோதர இனத்தை நான் கானமுடியவில்லை. 

இன்று இருக்கின்ற பிரச்சிணை இலங்கையை ஒரு முதலாளித்துவ பௌத்த நாடாகவோ அல்லது நீண்டகாலத்தில் ஒரு கிரிஸ்த்தவ நாடாகவோ தக்கவைத்துக்கொள்வதில் மேற்கு காய் நகர்த்தல்களை அழகாக மேற்கொள்கின்றது என்பது மட்டும் உண்மை. இதில் முதல் குறிப்பிட்ட முதலாளித்துவ பௌத்த நாடு  என்ற எண்ணக்கருவினை சாதிப்பதற்காக ஜப்பானை மையப்படுத்தியதான இலங்கையின் தங்கிவாழும் தன்மையை மேற்கு அழகாக ஏறடுத்தியுள்ளது. ஜனாதிபதியவர்களின் ஜப்பானிய விஜயத்தையடுத்து இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்கா நழுவிச்சென்றமை இன்னும் இதற்கு வழுவூட்டுவதாக அமைகின்றது. 

மேற்கைப்பொருத்தவரை பௌத்த கொள்கையானது நேற்குக்கு சவாலாக எப்போதும் அமையப்போவதில்லை. பௌத்த தத்துவத்தில் பெருளியல் தொடர்பான கொள்கை வகுப்புக்கள் இல்லாமையும் இதற்கு காரணமாக அமைகின்றது. அத்தோடு பௌத்தம் எப்போதும் அதனை கட்டாயம் பறப்பவேண்டும் என்று கட்டளை இடாமையும் இவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டிருக்கின்றது. சோஷலிஸ முகாமில் கறைந்து போக கூடாது என்பதற்காக அங்ஷான் ஷூகியை மேற்கு கவனமாக வழிநடாத்தி மியன்மாரில் பௌத்தம் என்ற பெயரில் ஒரு புரட்சியினை முஸ்லிம்களுக்கெதிராக திசை திருப்பி  கதாநாயகியாக நோபல் பரிசும் கொடுத்து முதலாளித்துவ பௌத்த நாடாக மாற்றுவதில் மேற்கு வெற்றி பெற்றுள்ளதை எவருமுன்னிப்பாக அவதானித்து புரிந்து கொள்ளலாம். 

இதேவேளை இஸ்ரேல் இப்பிரச்சிணைகளுக்கு பின்னனியாக செயற்படுவது குறித்தும் பேசப்பட்டாயிற்று. மேற்கின் கொள்கை வகுப்பாளர்களாக யூதர்களே கானப்படுகின்றனர். இந்த இனம் தம்மை எப்போதும் Super Power  ொன்ட இனமாக கருதுவதுடன் ளுரிநசழைசவைல Superiority Complex கொன்ட இனமாகவே தம்மை தலைக்கனப்படுத்தி வந்துள்ளது. யூத சமூகத்தின் வழிபாட்டு முறைகளும் இந்து, பௌத்த வழிபாட்டு முறைகளும் பெரும்பாலும் ஒத்தவையாக காணப்படுவதுடன் இன ரீதியான தொடர்பும் வரலாற்று நெடுகிலும் இருந்துவந்துள்ளது. எனவே முஸ்லிம்களுக்கெதிரான உணர்வு எப்போது இரத்தத்தில் ஊரியதாகவே கானப்படுவது ஒன்றும் புதிதான விடயமல்ல. இந்தவகையில்தான் இந்திய சிவ சேன அமைப்பு இஸ்ரேலின் வழிநடாத்தளுக்குல் ஆட்பட்டிருக்கின்றது. இதற்கு வழுச்சேர்ப்பதாக அண்மையில் இந்தியாவின் ஒரு பிரதேசத்தில் யூத பரம்பரையின் வாரிசுகள் கண்டரியப்பட்டு அவர்களை இஸ்ரேலுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த பின்னனிகளுக்கூடாகத்தான் பொதுபல சேனாவையும் நோக்க வேண்டியுள்ளது. நாட்டில் கொடூர யுத்தம் நடந்துகொன்டிருந்த போது இராணுவத்திற்காக ஆட்சேர்ப்பு ஊக்குவிப்பு பனியில் கூடுதல் பயன்படுத்தப்பட்ட இந்த குழு இன்று பிழையானவர்களின் கைகளில் சிக்கி வழிநடாத்தப்படுவது ஆபத்தான ஒன்றாகும்.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர யுத்தத்தில் மக்கள் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக கவனக்களைப்பை மேற்கொள்ளவும் முஸ்லிம்கள் மீதான கவனயீர்ப்பை பெரும்பானமை சமூகம் குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்றுமதி இலாபத்திற்காக ஹலால் சான்றிதழை முண்டியடித்து பெற்றுக்கொள்ளும் பாறிய பணமுதலைகளின் விடயம் பெரும்பான்மை சமூகத்தின் கண்களுக்கு பூதாகரமாக காட்டப்பட்டு சத்தமின்றி பல்மடங்காக அதிகரித்துச்செல்லும் வாழ்க்கைச்செலவினை எடுத்துப்பேச ஆளில்லாத அவலநிலையில் சிவில் சமூகம் தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கின்றது. 

பொது பல சேனா சிங்கள சமூகத்தின் ஹீரோக்கலாக சித்தரிக்க முற்படுவது ஒன்றும் கவலைக்குறியவிடயமல்ல. ஒவ்வொரு மதமும் இனமும் தத்தமது கொள்கைகளையும் இனத்தினையும் பாதுகாத்துக்கொள்ள செயற்படுவது ஜனநயகத்தன்மையின் வெளிப்பாடாகும். ஆனால் இங்கு இருக்கின்ற பிரச்சிணை தமது இனக்குழுமத்தை பாதுகாக்கும் தோரணையில் மற்றுமொரு சமூகத்தை அழிக்க நினைப்பதும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கெதிராக செயற்படுவதும் சட்டவிரோதமானதே. நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் ஏன் அதனை நிரூபிக்க நீதிமன்றங்களை நாடி இருக்கலாமே. அவ்வாரு முடியாதெனில் நாட்டின் நீதித்துறையில் குளருபடி இருப்பதாக பொது பல சேனா கருதுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. நாட்டில் தற்போது அரசுக்கெதிராக சிறுபான்மையினரின் எண்ணங்களை தூண்டி விடுவதும், சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்ற ரீதியில் பொது பல சேனாவை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை இருக்கின்றது. அஸ்கிரிய பீட நாயக்க தேரர்கள் குறிப்பிடுவது போன்று முறையாக பௌத்த தர்மத்தை கற்காத கரவாகு பௌத்த தேரர்களின் அட்டகாசங்கள் மலைநாட்டு பௌத்தர்களையும், பௌத்த சமயத்தை ஆண்டாண்டு காலம் பாதுகாத்துவருகின்ற அஷ்கிரிய பீடங்களையும் கேள்விக்குள்ளாக்கி பலம் குன்றச்செய்து பௌத்த தீர்மானம் எட்டும் சக்தியாக கரவாகு சிங்கள சமூகத்தை மாற்றியமைக்கும் வேலைத்திட்டமும் இங்கு நோக்கத்தக்கது.  

என்வே முஸ்லிம்களாகிய எஙகளுக்கு முன்னால் இருக்கின்ற ஒரே தெரிவு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்ற முயற்சி செய்யும் அதேவேளையில் இஸ்லாத்தை அடுத்த சமூகங்களுக்கு சொல்ல வேண்டிய காலத்தேவையில் உள்ளோம். 

நான் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தேசிய வானொளியின் நிகழ்ச்சி ஒன்றின் ஒளிப்பதிவிற்காக சென்றிருந்தேன். அப்போது என்னிடம் செவ்வி செய்த சகோதரர், நாட்டில் தற்போது தஃவா நிலை எவ்வாறு உள்ளது என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலாக இந்த நாட்டில் தஃவா & க்கும் குறைவாகவே கானப்படுகின்றது என்று கூறினேன். தஃவா என்பதற்கும் இஸ்லாஹ் என்பதற்கும் விளக்கத்தையும் கொடுத்தேன்.  சில நாட்களின் பின்னர் அந்த ஒளிப்பதிவை ஒளிபரப்ப முடியாதென்றும் வேறு ஒரு தலைப்பில் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்ய வருமாறும் அழைத்தார். நான் அதற்கு மறுப்பும் தெரிவித்தேன்.

 விடயம் என்னவென்றால் தஃவா பற்றிய தெளிவின்மையும் இஸ்லாத்தை மற்ற மத சகோதரர்களுக்கு சொல்ல வாய்ப்பளிக்காமல் போய்விட்டதென நினைக்கின்றேன். அதன் விளைவுகளை இன்று அநுபவிக்கவேண்டி உள்ளது என கருதுகின்றேன். எனவே இன்று அனைவரையும் இஸ்லாத்திற்குல் உள்ளீர்த்துவிட வேண்டும் என்பதற்காக தஃவா பற்றி நான் குறிப்பிடவில்லை. குறைந்தது இஸ்லாம் பற்றிய தெளிவுடன் எதிரிகளை நண்பர்களாக கையாள முடியுமென்ற கருத்தினையே சொல்ல முனைகின்றேன். நமக்குள் எழுதி, நமக்குள் பேசி விவாதித்து சண்டை பிடித்துக்கொண்ட காலங்களைக்கடந்து புதிய தொணியில் மாற்று சமூகங்களை கவனத்திற்கொண்டு தஃவா பற்றி சிந்தித்தால் செயற்பட்டால் தற்போதய பிரச்சிணைகள் எதிர்காலத்திலும் மீண்டுவராமல் பாதுகாக்க முடியும் என்று கருதுகின்றேன்.


No comments

Powered by Blogger.