யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களின் மேம்பாட்டுக்காக நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ்
யாழ்.முஸ்லிம் வர்த்தகர்களினது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் 02-03-2013 முஸ்லிம் வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்பகுதியில் நிரந்தர வாழ்விடத்தை கொண்டவர்களுக்கும் இங்குள்ள வர்த்தகர்களுக்கும் முன்னுரிமையடிப்படையில் வர்த்தக நிலையங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் உங்களுக்கும் நகரில் அமைந்துள்ள சந்தை உட்புறப் பகுதியில் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பகுதி முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வந்த நிலையில் தற்போதைய அமைதிச் சூழலில் மீளவும் குடியமர்ந்துள்ள வருகின்றனர்.
இந்நிலையில் யாழ்.முஸ்லிம் வர்த்தகர்களினது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 22 கடைகளைக் உள்ளடக்கி கடைத்தொகுதி சந்தையின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், இதன்போது துஸ்பிரயோகங்களுக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஒன்றுபட்ட சமூகமாக இம்மாவட்டத்தின் அபிவிருத்தியின் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்தார்.
Post a Comment