Header Ads



தான் பிரந்த தேசத்தையே பெளத்த நாடாக பிரகடனப்படுத்தாத கெளதம புத்தர்


(மௌலவி அப்துல் ஹசன்)

பிக்குகளே! பரிபூரண ஞானமடையுமுன் பிறப்புக்கும் நோய்களுக்கும் மரணத்துக்கும் துக்கத்துக்கும் அழுகுதலுக்கும் உள்ளாகினேன். பிறப்புக்கும், மூப்படைதலுக்கும் நோய்களுக்கும், மரணத்திற்கும் துக்கத்திற்கும், அழுகுதலுக்கும் காரணத்தைத் தேடினேன்.

பின்னர் நான் அவதானித்தேன். 'நான் ஏன் பிறப்புக்குக் காரணமாக அமைய வேண்டும்? அழுகுதலுக்கு காரணமாக அமைய வேண்டும். பிறப்பின் காரணமாயிருப்பேனேயானால் பிறப்பின் காரணத்தின் ஆபத்தை விளங்கிக் கொண்டவனாக பிறப்பற்ற பற்றற்ற உன்னத பாதுகாப்பான நிர்வாண நிலையையே தேடுகின்றேன். மூப்புக்கும் நோய்களுக்கும் மரணத்துக்கும் துக்கங்களுக்கும் அழுகுதலுக்கும் உள்ளாகக்கூடிய நான் மூப்பற்ற நோயற்ற மரணமற்ற துக்கமற்ற அழுகுதலற்ற நிர்வாண நிலையான அந்த பற்றற்ற பாதுகாப்பையே தேடுகிறேன் – மஜ்ஜிம நிகாய (நூல்: புத்தபகவானும் அவரது போதனைகளும். ஆங்கலத்தில்  The Buddha And His Damma By American monk ven. Bikku Bodis

புத்தர் அவர்கள் வனாந்திரத்திற்குச் செல்லும் வரை சித்தார்த்த என தனது பெற்றோரால் (பெற்றோர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் தகப்பனார் ஒரு சிற்றாட்சி அரசனாக இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது) வைக்கப்பட்ட பெயரில்தான் அரச வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார். ஓர் இளவரசர் எவ்வாறு சுகமாக வாழமுடியுமோ அவ்வாறெல்லாம் வாழ்கிறார். அவருக்கு வெளியுலகமோ அங்கு என்ன நடக்கிறது என்றோ தெரியவில்லை.
ஒரு நாள் தான் வசிக்கும் பிரதேசத்தை சுற்றிப்பார்க்கவென வெளியில் வந்த வேளைதான் பல காட்சிகளைக் காண்கிறார்.

கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும் காட்சிகளையல்ல.!!!!

அவ்வளவும் துன்பம் நிறைந்த காட்சிகள். தான் கண்டிராத துன்பங்கள்.

அதன் பிறகுதான் உணர்கிறார். முதுமை நோய் மரணம் எனும் துன்பம் எல்லோருக்கும் வந்தே தீரும். எனவே எத்துன்பத்தையும் மனிதன் அனுபவிக்கக் கூடாது என்றுதான் தான் இருந்த அனைத்து சுகபோகங்களையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரு துண்டுத்துணியுடன் தனது மாளிகையை விட்டு வெளியேறுகிறார். துன்பங்கள் ஏற்படாது பரிநிர்வாணநிலையடைய வேண்டும் என்று தியானத்தில் ஈடுபடுகிறார். இறுதியில் (பொளத்த மதம் கூறுவது போல்) ஞானம் பெற்றவராக மாறுகிறார். இதற்குத்தான் புத்தர் என்று சொல்லப்படுகிறது. இப்போது புத்தர் எனும் பெயரையே உபயோகிக்கின்றனர்.

இவர் ஞானம் பெற்றதன் பின் தான் உணர்ந்தவைகளை மக்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள் என்று தன்னுள்ளேயே வைத்துக்கொள்ள விரும்புகிறாரே தவிர தன்னை மக்கள் வணங்கவேண்டும் என்றோ தன்னால் ஒரு மதம் உருவாக வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை.

பின்பு தேவ தூதர் ஒருவர் (அவர்களின் எண்ணப்படி 'ஆயிரம் உலகங்களின் அதிபதியான பிரஹ்மா ஸஹம்தி எனப்படுபவர்) 'மாய இருளில் சிக்கித் தவிக்கும் சிலருக்காக போதனை செய்யும் படி வேண்டி நின்றார்' (The Buddha And His Damma)

இதன் பிறகுதான் தான் உணர்ந்ததை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும் அவர்களும் துன்பத்திலிருந்து நிர்வாணமடைய வேண்டும் என்று பாடுபடுகிறார்.

துன்பங்கள் ஏற்படாதிருக்க என்ன வழி எனத் தேடியவர் மற்றவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள் என தன்னுள்ளேயே பூட்டிவைக்க முனைந்தவர் துன்பத்தினால் இருளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக போதனை செய்யுங்கள் என்ற தேவதூதரின் வேண்டுதலுக்கிணங்க பிரச்சாரத்தில் ஈடுபடும் ஒருவர் மக்களுக்கு துன்பம் தரவும் விரும்பமாட்டார் துன்பத்திற்கு ஆளாக்குவோர்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டார் எனும் யதார்த்தத்தை நன்குணர முடிகின்றது.

அந்த நேரத்தில் அன்னவரது கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதனை ஆதரித்தவர்களும் பலர் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

பிறருக்கு அநியாயம் செய்து துன்பத்தை உண்டு பண்ணியிருந்தாலோ உண்டு பண்ணும்படி போதனை செய்திருந்தாலோ மற்றவர்கள் அன்னாரை விரும்பியிருப்பார்களா? அக்கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பார்களா? அல்லது ஆதரித்துத்தானிப்பார்களா?

பிக்கு சமுதாயமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்!!!

இனமதம் பாராது தான் பரிநிர்வாண நிலையடைந்தது போன்று எல்லோரும் அடைய வேண்டும் என பாடுபட்டவருடைய போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியவர்கள் தாங்களும் துன்பத்திற்கு ஆளாகி மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்கிறார்கள் என்றால் இவர்கள் மகான் புத்தரை மதிக்கிறார்களா? மிதிக்கிறார்களா?

மகான் புத்தரை கௌரவிக்கிறோம் என்று சொல்லி அன்னாரது சிலையை காணும் இடங்களிலெல்லாம் வைத்து மற்ற மக்களை புன்படுத்துவதை அன்னவர் விரும்புவாரா?

அமைதி வேண்டும் என தேடியவர் ஏனைய மதங்களை பகிஸ்கரிக்குமுகமாக ஆர்ப்பாட்டங்கள் கீழ்த்தரமான பதாதைகள் ஆவேச கோசங்கள் எழுப்பப்பட்டு இனவாதச் செயல்கள் தலையோங்குவதை ஆமோதிப்பாரா? சிந்திக்க வேண்டாமா?

தேவதூதருடைய தேடுதலுக்குப் பின் தன்னுடைய போதனை உலகம் முழவதும் சென்றடைய வேண்டும் என இரவு பகலாக தன்னை இரையாக்கிக் கொண்டு பிக்குகளை வளர்த்துவிட்டவர் அப்பிக்குகள் செய்வதை பொருந்திக்கொள்வாரா?

மகான் புத்தரின் போதனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமன்றி ஆதரித்தவர்களும் உண்டு என சொல்லப்படுகிறது. அப்படியாயின் அவரது கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மட்டுமல்ல ஆதரிக்காதவர்கள் அவர் பிறந்த நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் அவரோடு அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள். தனது கொள்கையை ஆதரிக்காதவர்கள் இருக்கக்கூடாது என தன்னோடு சேர்ந்தவர்களை வைத்து யுத்தத்திற்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ தயாரானாரா?

ஏன், தான் பிறந்தது அரச குடும்பத்தில் தனது தந்தை அல்லது தனது குடும்பத்தில் உள்ளவர்கள்தான் அரசனாக இருக்கிறார். அந்நாடு மொத்தமே தனது கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் எவரும் இருக்கக்கூடாது என முழக்கமிட்டாரா? எனவே அவர் காட்டிய பாதை விரும்பியோர் ஏற்றுக்கொள்ளட்டும் துன்பத்திலிருந்து விடுபடட்டும். விரும்பாதோர் எப்படியோ வாழ்ந்து அனுபவிக்கட்டும் என விட்டுவிட்டார். இந்தியாவில் வாழ்ந்ததாக சொல்லப்படும் மன்னர் அசோகா என்பவர்  பெளத்தத்தைத் தழுவியிருந்தார் . தான் நினைத்திருந்தால் தனது நாட்டிலுள்ள மக்களை பௌத்தர்களாகவே மாற்றியிருக்க முடியும். ஆனால். அவர் மகான் புத்தரின் போதனைகளை அடியோடு பின்பற்றியதால், இலங்கையில் உள்ள மக்களும் அவரை ஏற்றுக் கொள்கின்றனர்.

சிந்தியுங்கள். பௌத்தர்கள் என்று பெயர் அளவில் சொல்வதில் எவ்வித பயனுமில்லை.

பெளத்தன் என்று சொல்லிக்கொண்டு புத்தபகவானின் போதனைகளை உதரித்தள்ளிவிட்டு, கடும் போக்காளர்களாக இருந்தால், புத்தரை விரும்பி அடியோடு எடுத்து நடப்பவர்கள் மட்டுமின்றி ஆதரிப்போர் கூட உதரித்தள்ளிவிடுவார்கள்.

புத்தரின் போதனைகள் மீது ஏறி மிதித்துக் கொண்டு, பெளத்த கொள்கைகளை வளர்க்க வேண்டும் என்று பிரசிங்கிப்பத்தில் என்ன இருக்கிறது?

உண்மையான பெளத்தனாக இருந்தால் அல்குர்ஆனில் பிழை தேடுவதைவிட்டுவிட்டு புத்தர் வழி நடங்கள்!! புத்தரின் போதனைகளை மக்களுக்கு உண்மைக்கு உண்மையாக எடுத்துவையுங்கள்!

பெளத்த மதம் வளர மாற்று சமுதாயத்தை வஞ்சிக்கவேண்டியதில்லை, திட்டதேவையில்லை, பழிசுமத்த வேண்டியதில்லை. அது தானாக வளரும். ஏனென்றால் புத்தரின் போதானகளை நேசிப்பவர்கள் அதிகம். அன்னவரை மதிக்கிறோம் என்று மிதிக்காதீர்கள்!!

1 comment:

  1. Good points and needs to be direct translated. "Sabba thaththa bahavanthu sukithaththa" Let all the living being live peacefully.

    ReplyDelete

Powered by Blogger.