முஸ்லிம்களின் நிதானம் தொடரட்டும்..!
(அபூ றிஜா)
பேரின சமூகம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது மூன்று பரிமானங்களை அடிபடையாக வைத்து பார்க்கின்றனர். இதற்கு அன்மைகாலங்களிலே நடைபெற்ற சம்பவங்கள் இதனை உணர்துகின்றன. இவை அனைத்துக்குமே மூலகாரணமாக விளங்குவது இலங்கையின் அரசியலாகும். இது இன்று நேற்று உருவானது அல்ல. கால காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்ற உபாயங்களாகும்.
அந்த பரிணாமங்களாவன,
1. சமூக பரிமாணம்.
2. அரசியல் பரிமாணம்.
3. வியாபார பரிமாணம்.
இந்த மூன்று பரினாமங்களும் தூர நோக்கோடு செயற்படுத்தப்படுகின்றன. துரதிஸ்டம் என்னவென்றால் இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்கள் என்றுமே இந்த நாட்டின் ஆட்சியிலே பங்குகேட்கவில்லை. தனிஈழம் கேட்கவில்லை. இந்த இலங்கை திருநாட்டை அழகுபடுத்துவதில் முக வெற்றிலையாக இருந்து வந்திருக்கின்றனர். ஆனால் சில அரசியல் தலைவர்கள் அரசியல் இலாபத்திற்காக இந்த மூன்று பரிமானங்களின் அடிப்படையில் மக்களைத்தூண்டி தங்களது இலக்கை அடைய முனைகின்றனர். இது எல்லா சிங்கள மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள் மற்றும் பொது மக்களுக்கும் தெரியும். ஆனால் தூண்டி விடப்பட்டடிருப்பது தூவேசம் ஆதலால் இவர்கள் பக்குவமாக கையாள எத்தனிக்கின்றனர்.
அரசியல் வாதிகள் தாங்கள் இழந்து போகின்ற வாக்கு பலத்தை உயர்த்துவதற்காக மேற் கொள்கின்ற முயற்சியது. அரசியல் ஒழுக்கம் பேணப்படல் வேண்டும். இல்லையேல் இவ்வாறான ஒழுக்கமற்ற அரசியல் வாதிகளால் துவேசங்கள் வளர்க்கப்பட்டு எமது நாடு மென் மேலும் அழிவுகளை சந்திக்க நேரிடும்.
இலங்கை ஐனநாயக்க சோசலிக குடியரசின் சட்டத்துக்கு அமைவாக மத சுதந்திரம் பேணப்படல் வேண்டும். இதற்கான ஒழுங்கை பலமான அரசு மேற்கொள்ள வேண்டும். அண்மைகாலமாகக் சட்ட ஒழுங்கு மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றது என கூறலாம் காரணம்.
1. புனித ரமழான் காலத்தில் கிறீஸ் மனிதன் விவகாரம்.
2. புனித பள்ளி வாசல்கள் உடைப்பு விவகாரம்.
3. ஹலால் உணவு தொடர்பான விவகாரம்.
இந்த மூன்று பிரச்சினைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த வேளைகளில் எல்லா முஸ்லிம்களும் பக்குவமாய் நிதானமாக சிந்தித்து செயல்பட்டு வந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் அமைதியாக இருப்பதை இட்டு பலயினமாக நினைத்து விடக் கூடாது. முஸ்லிகளுடைய ஆயுதம் 'துஆ' அதுவே ஆகுமானதாகும். இறைவனின் தண்டனைக்கு அப்பாவிப் பொதுமக்கள் ஆளாகக் கூடாது என்பதற்காகவே பொறுமை காக்கின்றனர்.
எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கையே பெறுமதியானது. இந்த நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களின் உணவு,உடை,கலாச்சாரம் மற்றும் இஸ்லாம் மீது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வுகான முன்வர வேண்டும் என்பதே அனைத்து முஸ்லிம்களதும் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை அரசுக்கு முஸ்லிம்கள் என்றுமே பலமாக இருந்திருக்கின்றார்கள்;. அதே நேரம் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரனையில் எட்டு முஸ்லிம் நாடுகள் ஆதரவை வெளிக்காட்டியிருக்கின்றது. இந்த வேளையில் முஸ்லிம்களுக்கு இவ்வாறான சூழ் நிலை கண்டு முஸ்லிம் நாடுகள் தனது அதிருப்திகளை அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது. இந்த நிகழ்வு முஸ்லிம்களாகிய எங்கள் மனதுக்கு கஷடமாக இருக்கின்றது என பல அரசியல் தலைவர்களும், உலமாக்களும் கூறுவதை காணக்கூடியதாக உள்ளது.
எனவேதான் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஐந்து வேளை தொழுகைலில் 'துஆ' செய்து கொள்ளுமாறும் எமது ஈமான் பலமாக இருக்கும் வரை இறைவன் கைவிட மாட்டன் என்பதனை ஞாபகபடுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சகல அரசியல் தலைவர்களும், கல்விமான்களும், உலமாகக்களும் ஒன்று பட்டு முஸ்லிம்களின் நாளைய விடியலுக்காக உழைக்க வேண்டும் என்பதுடன் அதே நேரம் ஏற்படுத்தப் போகின்ற ஒற்றுமை நிலைக்க வேண்டுமென இறைவனைப் வேண்டுகின்றோம்.
'அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' (அல் ஹதீஸ்)
Post a Comment