பௌத்த தேரர்களினதும், சிங்கள சகோதரர்களினதும் பெருந்தன்மை..!
(அபூ ஸஹ்லா)
பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகள், முஸ்லிம்கள் பற்றி தவறான கருத்துகளை பரப்பி, இன துவேசத்தை கக்கிய போதிலும், பெரும்பான்மை சிங்கள மக்களில் இதனை ஆதரிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமொன்று, நேற்று முன்தினமிரவு 24-03-2013 இடம்பெற்றது.
கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து இரவு 09.30 க்கு கண்டி நோக்கி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று புறப்படவிருந்தது. பஸ் வண்டி பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, பயணிகள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்து கொண்டனர். கண்டி நோக்கி செல்வதற்கு, சுமார் 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பஸ் வண்டியில் ஆசனங்களில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்ட முன் ஆசனங்களில் இருவர் அமர்ந்திருந்தனர். அதற்கு அடுத்த ஆசனத்தில் முஸ்லிம் ஒருவரும் பக்கத்தில் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரும் அமர்ந்திருந்தார். பஸ் வண்டியில் சகல ஆசனங்களும் நிரம்பிவிட்டன. சற்று நேரத்தில் இரண்டு பிக்குமார் பஸ்ஸில் ஏறியபோது, முன் ஆசனத்திலிருந்த இருவரும், எழுந்துவிட்டனர். பிக்குகள் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து சற்றுநேரத்தில் மற்றொரு பிக்கு பஸ்ஸில் ஏறினார். இரண்டாவது ஆசனத்தில் இருந்த பெரும்பான்மையினத்தவர், அருகில் இருந்த முஸ்லிமானவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஜன்னல் பக்கம் அவர் இருப்பதனால், அவரால் எழுந்துநிற்பதை விட, மறுபுறம் இருப்பவர் எழுந்து செல்வது இலகுவாக இருந்த போதிலும், பெரும்பான்மை இனத்தவர் முணுமுணுத்தவாறு எழுந்து பக்கத்தில் நின்றுகொண்டார்.
பஸ் வண்டி இரவு 09.30 க்கு கண்டி நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. பிரயாணிகள், நடத்துனரிடம் டிக்கட்டுக்களை வாங்கிக்கொண்டனர். மதகுரு அமர்ந்த ஆசனத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர், கண்டி நோக்கி செல்வதற்கான டிக்கட்டை வாங்கிக்கொண்டார்.
பஸ் ஓடிக்கொண்டிருக்கும் அதேநேரம், குறித்த நபர், முஸ்லிம்களை திட்ட ஆரம்பித்தார். இந்த நாடு பௌத்த நாடு என்றும், எங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென்றும், நாங்கள் நின்றுகொண்டு செல்லும்போது, இவர்கள் அமர்ந்து செல்வது எவ்வாறு என்றும், வாயில் வந்தவாறு பேச ஆரம்பித்தார். தானும் அக்குறனையை சேர்ந்தவர் என்றவர் என்றும், மிளகு கோப்பி வாங்க எமது பக்கம் வந்தால், உங்கள் கால்களை வெட்டிவிடுவோமென்றும், அச்சுறுத்தியது மட்டுமன்றி, தூசன வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் இவர் பயன்படுத்தினார்.
அமர்ந்திருந்த அனைத்த முஸ்லிம்களும் மிக பொறுமையாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, பஸ் வண்டியில் நின்று பயணம் செய்த மற்றொரு பெரும்பான்மை இனத்தவர் ஒருவர், இவ்வாறு முஸ்லிம்களை திட்டியவரின் தோள்களால் பிடித்து, இந்த நாட்டை குட்டிச்சுவராக்கும் உங்களை போன்ற கயவர்களுக்கு இடமளிக்க முடியாது என்றும், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து வந்த நெருக்கமான உறவை, உங்களை போன்ற காடையர்களே சீர்குலைத்துவிட்டதாகவும் கூறி, அவரை எச்சரித்தது மட்டுமன்றி, உடனடியாக பஸ்ஸிலிருந்து இறங்குமாறும் எச்சரித்தார்.
பஸ் நிறுத்தப்பட்டது, குறித்த நபருடன் மேலும் பல பெரும்பான்மை இனத்தவர்கள் சேர்ந்து, முஸ்லிம்களை அச்சுறுத்திய நபரை, கடவத்தையில் பஸ் தரிப்பிடமொன்று கூட இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு, பயணத்தை தொடருமாறு, சாரதிக்கு உத்தரவிட்டனர்.
இதனை அங்கீகரிக்கும் வகையில் அங்கிருந்த மூன்று பௌத்த பிக்குகளின் செய்கைகளும் அமைந்திருந்தமை, குறிப்பிடத்தக்கதாகும். இரவு 10.00 மணியளவில் முஸ்லிம்களை தூசித்த அந்த நபர், பஸ் தரிப்பிடமொன்று கூட இல்லாத இடத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பெரும்பான்மை இன மக்களும், இருக்கின்றார்கள் என்பது, இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகின்றது.
குறித்த பஸ் வண்டியில் பின் ஆசனத்தில் நான் அமர்ந்திருந்தேன்... கொழும்பிலிருந்து வரகாபொலை நோக்கி பயணம் செய்தபோதே, இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சிங்களவர்கள் முஸ்லிம்கள் தங்களை சந்தேக கண்ணோடு பார்க தொடங்கிவிட்டனர் என்பது அந்த பெரும்பான்மை இனத்தவரின் துவேசம் பேசிவருக்கு கொடுத்த பதில்களில் இருந்து விளங்குகிறது? இருந்தாலும் நம் முஸ்லிம் சகோதரர்கள் அவர் தரிப்பிடம் இல்லாத இடத்தில் இறக்கபடுவதை தடுத்து இருக்கலாம்? அவருக்கு மேலும் துவேசம் வளர நாம் இடமளிப்பதா நமது மௌனத்தால்?
ReplyDeleteநல்ல செய்திதான் சஹோதரரே, ஆனால் நீங்கள் இன்னொரு பொன்னான வாய்ப்பை தவரவிட்டீர்கள் .நீங்களோ அல்லது நம்மில் ஒருவரோ எழுந்து அவரை மன்னித்து இருக்க இடம் கொடுத்திருந்தால் இன்னமும் உயர்வாக இருந்திருக்கும் என்பது எனது பணிவான எண்ணம்
ReplyDeleteஇதே போன்ற நிலைமை நாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில், சிங்கள சகோதரர் ஒருவருக்கு ஏற்பட்டால் நாம் எவ்வாறு நடந்து கொள்வோம் என்பது பற்றியும் சிந்திப்போம்....?
ReplyDeleteSRTI LANKA JAYEWEWA
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். இலங்கையில் இன்னும் மனித நேயம் முற்று முழுதாக மரணித்துவிடவில்லை.
ReplyDeleteஎல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
ReplyDeleteநாட்டை குட்டி சுவராககும் ஒரு சில துவேசக்காறர்களாள் நல்லவர்களுக்கும் கெட்ட பெயர்
ReplyDeleteகுறைகளையே கண்டுபிடித்துகொண்டே இருப்பது சிலர் பழக்கம்,குறித்த சூழல் பற்றிய தகுந்த அறிவில்லாமலேயே !!
ReplyDeletegood
ReplyDelete