Header Ads



கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் உதுமாலெப்பை விளக்கம்



(ரீ.கே.றஹ்மத்துல்லா)

கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி அமைச்சினூடாக இவ்வாண்டில் 12,634 மில்லியன் ரூபா செலவில் 682 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்பட்டுவருவதாகவும், எதிர்வரும் தயட்டகிருள அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு இதில் 353 கிலோமீற்றர் நீளமான வீதிகள் விரைவில் மக்களிடம் கையளித்து வைக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் மற்றும் கிராமிய மின்சாரம், வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினூடாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை அகிய மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (20)அம்பாறை மொண்டி விடுதியின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களதின் மாகாணப்பணிப்பாளர் வி. கருனைநாதன், கல்முனைப் பிராந்திய சிரேஷ்ட பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, மற்றும் ஜெய்கா திட்டத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உதுமாலெப்பை அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். கடந்த முப்பது வருடகாலம் இருந்து வந்த கொடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான துரித அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதியின் ஆலோசனையுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் கிழ் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள் மேறகொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்த காலத்தின் போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வீதிகளையும், மக்களின் தேவைப்பாட்டை முன்னிறுத்தியும் முன்னுரிமை அடிப்படையில் இன, மத, பிரதேச, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் நின்று சேவையாற்றி வருகின்றோம். இதற்காக ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா திட்டத்தின் மூலமும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன கூடுதலான நிதிகளை வழங்கி உதவி வருகின்றது. இதற்காக அந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மக்கள் பிரதி நிதி என்ற வகையில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பணிகளை சிறப்பாக மேற் கொள்வதற்கு சிரமம் பாராது அவர்களின் பணிகளுக்கபால் நின்று உதவி வரும் மாகாணப்பணிப்பாளர், பிரதம பொறியியாளர்கள் மற்றும் அதிகளுக்கும் நன்றியினை தெரிவித்தக் கொள்கின்றேன் என்றார்.



No comments

Powered by Blogger.