Header Ads



கிழக்கு மாகாணத்தில் பரீட்சைகள் ஒத்திவைப்பு - பெற்றோர்கள் விசனம்


(Samad) கிழக்கு மாகாண பாடசாலைகளில் நடைபெற்று  வந்த பாடசாலை முதலாம் தவணைப் பரீட்சைகள் திடீரென பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் பெற்றோர் விசனம் தெரிவிகின்றனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நடைபெற்று வரும் முதலாம் தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைகளம் மாகாணத்திலுள்ள சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது. 

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தவணைப் பரீட்சைகள் ஒரு தினம் மாத்திரமே நடைபெற்றது. ஆரம்பிக்கப்பட்ட இத்தவைணக் பரீட்சைகள் திடீரென பிற்போடப்பட்டுள்ளதால் பரீட்சைக்குத் தயார்படுத்திக்கொண்டிருந்த பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கையில் எணணச் சிதறல்கள் ஏற்பட்டுள்ளது. பரீட்சைக்கான தயார் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொறுப்பற்ற விதத்தில் பரீட்சைகள் திடீரென  பிற்போடப்பட்டதன் காரணத்தை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அழுத்தங்களுக்கு  அடிபணிந்து மாணவர்களின் கல்வி வாழ்க்கையில் விளையாடாது பொறுப்புடன் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர் வேண்டுகோள் விடுகின்றனர்.  

3 comments:

  1. என்னடா தம்பி இதுவும் விளங்கல்லயா? நம்ம போட்ட ஹர்த்தால் அந்த பல சேன பாட்டிக்கு நல்லா எங்கயோ இடிச்சிட்டு. அதுமட்டுமா நம்மட பொண்டுகள் யாரும் ஹாடியில நடக்கிற ஹொறளயப் பாக்கக் போறாகல்லயாம். அதுக்குத்தான் பாடசாலய மூடிப்போட்டு எல்லாரும் அங்க வரனுமாம். நல்லா இரிக்கிடா தம்பி உன்ட சனநாயகம்.

    ReplyDelete
  2. muslim petrorkale!
    Ungalathu kulanthaikalai (deyata kirulla) paarka anuppa venam.
    Anku islaththitku ethirana pala anaachchaarangal nadaiperukintrena.

    ReplyDelete
  3. கிழக்கு கல்விப்பணிப்பாளர் தீர்மானமா? அல்லது அரசியல் வாதிகளின் தீர்மானத்திற்கு உட்பட்டா.

    ReplyDelete

Powered by Blogger.