Header Ads



பிக்குகள் தாக்கப்படுவதற்கு அஸ்வர் கண்டனம் - ஜெனீவாவிலும் விவாதிக்க வேண்டுகோள்


தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்டதனை வன்மையாகக் கண்டித்த ஆளும் கட்சி  எம்.பி ஏ.எச்.எம் அஸ்வர் அரந்தலாவையில் பிக்குகள் கொல்லப்பட்டதனை ஜெனீவாவில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் துறைமுக,விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுத் திருத்தச் சட்டமூலம், பொருளாதாரச் சேவை விதிப்பனவு திருத்தச் சட்டமூலம் மதுவரி திருத்தச் சட்ட மூலம்,தொலைத் தொடர்பு அறவீட்டுத் திருத்த சட்ட மூலம் ஆகியன மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

தமிழ் நாட்டில் மாணவர்கள் மத்தியில் நஞ்சை ஊட்டுகின்றனர். அங்கு கலைஞரானாலும் கலைச் செல்வியாக இருந்தாலும் சரி அரசியலுக்காக மாணவர்கள் மத்தியில் நஞ்சை ஊட்ட வேண்டாமென கேட்டுக் கொள்கின்றேன். இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழ் நாட்டிலிருந்து பலர் வந்து செல்கின்றனர். ஆனால்  இங்கு எவர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் தமிழ் நாட்டில் இலங்கையிலிருந்து சென்ற பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாம் இந்த தாக்குதலை கண்டிக்கின்றோம்.

இதே வேளை நாட்டைப் பிரிப்பதற்கென சம்பந்தன்,சுரேஷ் ஆகியோர் ஜெனீவா செல்கின்றார்கள். நாட்டில் அன்று நடந்த போராட்டம்  தமிழர்களுக்காகவல்ல ஆயுதம் தாங்கியவர்களுக்காக. இந்நிலையில் பிரபாகரனின் மகன் தொடர்பாக கதைக்கின்றனர். ஆனால் அன்று காத்தான்குடியில் தொழுகையின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக கதைப்பதில்லை. இது தொடர்பாகவும் கதைக்க வேண்டும். அத்தோடு அரந்தலாவையில் கொல்லப்பட்ட பிக்குகள் தொடர்பாக ஜெனீவாவில் கதைக்க வேண்டும்.

17 comments:

  1. அஸ்வர் அவர்களே முஸ்லிம்களின் பிரச்சனைக்கு வாய் திறக்காத உமக்கு எங்கிருந்து தேரர்களின் பிரச்சினைக்காக வாய் திறக்க முடிந்தது.இன்னும் அவர்களை தாக்கினால் கடவுளை போன்றவர்களை தாக்காதீர்கள் என்று சொல்வீர்கள் போல.

    ReplyDelete
  2. Mr. Azwer, good to see you shouting on this issue, but we are confused to see your deafening silence when Islam and Muslims come under attack by BBS in our own country. Really whose dutiful servant are you?

    ReplyDelete
  3. You should tell this to Srilanka first and then to India, you are the worst human being,where were yiu hiding before.

    ReplyDelete
  4. wow, open his mouth,dear minister,what about the problems are facing by muslims in our mother land? it doesn't matter,

    you will talk anything to safe your post only..

    ReplyDelete
  5. சென கொட்ட அரசியல் வாதிகள் தாங்கள் சார்ந்த பள்ளிகள் இடிக்கப்பட்டு தங்கள் வணங்கும் இறைவனை பின்பற்றும் இழைதுதரை இழிவபடுத்தப்படுவதை பற்றி வாய்திரக்க திராணியற்றவர்கள் பிக்குகள் தாக்கப்படுவதை ஜெனீவாவில் விவாதிக்க கோருகின்றார்கள்
    வெட்கம்!!!!

    ReplyDelete
  6. please stop publishing this man's article on jaffnamuslim

    ReplyDelete
  7. oh my God After a long time, அட நாட்டில்தான் இருக்கிறீங்களா, மத குருக்களை தாக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடு அது நல்ல விடயம்.
    முஸ்லிம் சமூகம் எவ்வளவு பிரச்சினைகள முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, அதுக்கு எய்தவது வாயை திறந்து சில வார்த்தைகள சொல்லமுடியல்ல , வந்திடாறு வரிஞ்சி கட்டிக்கிட்டு.
    நீங்களல்லாம் இறைவனிடத்தில் பதில் சொல்லியாகனும். முஸ்லிம் மக்கள் இதை உணர்த்து கொள்வார்களா?.

    ReplyDelete
  8. Dear Muslim Brothers please note how sooner how quicker how strongly criticize the inside we also against such behavior for any sri lankan but Mr. Azver never never open his mouth all theses days see what a strong faith in his Religion

    ReplyDelete
  9. உங்களுடைய இந்த வீர முழக்கம் 'ஹலால்' விடயத்தில் எங்கே போனது? உங்களைவிட பச்சோந்தி மேல்!

    ReplyDelete
  10. ஆஹா, என்னமா பொத்துக்கிட்டு வருது, முஸ்லிம்கள் விடயத்தில் மட்டும் ஏன் பாராமுகமோ!! கூரு கெட்டதிகாள்.

    ReplyDelete
  11. பெளத்த பிக்கு தாக்கப்பட்டதை சாதரண பொதுமகனும் கண்டிக்கிறான்,என்றாலும் நீங்கள் இதற்காக தள்ளாத வயதில் வரிந்து கட்டி பாராளுமன்றில் குரல் கொடுப்பது போன்று முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் செயல்ப்பாட்டுக்கு எதிராகவும் குரல் ஒலிக்க முடியாததன் மர்மம் செஞ்சோற்று கடன் தீர்ப்பது தானே.....????

    ReplyDelete
  12. இப்ப தான் தூங்கி எழும்பி இருக்கிறார். அவருக்கு Short memory நோயாம். பழையது எல்லாம் மறந்தாம்.

    ReplyDelete
  13. What heis trying to say that don't worry I m always with u

    ReplyDelete
  14. iwanukku naraham than ready panni erukku

    ReplyDelete
  15. பௌத்த பிக்குகள் தாக்கப் பட்டதை கண்டிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதே போல ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள அமைச்சு மாற்றத்தில் அஸ்வர் MP கு "புத்த சாசன அமைச்சை" கொடுத்தால் சரியாகச் செய்வார் என்பதிலும் சந்தேகமில்லை.

    ReplyDelete
  16. he is the Dangerous BLACKSHEEP in our muslim community..may Allah save us from this kind of human shaitans

    ReplyDelete

Powered by Blogger.