'முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை முறியடிக்க ஒற்றுமை அவசியமானது'
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால சமகால சவால்கள் தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிடும் நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் 21.03.2013 வியாழக்கிழமை இரவு 08.15 மணியளவில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையக காரியாலயத்தில் நடைபெற்றது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் மௌலவி எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி)தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுறாசபை ஊறுப்பினர்களும் காத்தான்குடி நகரசபை எதிர்கட்சி உறுப்பினர்களுமான மௌலவி ஏ.எல்.எம்.சபீல் (நளீமி)இஎம்.எச்.எம்.நஸீர் மற்றும் ஊடகவியலாளர்கள் சூறாசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அண்மைக்காலமாக இனவாத அமைப்புக்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விஸமத்தனமான நடவடிக்கைகளை தனிப்பட்ட ரீதியில் சுட்டிக்காட்டி வெளியிடுவதை விட கூட்டாக தேசிய ஒற்றுமையுடன் செயற்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதேவேளை தற்கால அசாதாரண சூழ்நிலையில் இன்று காத்தான்குடி நகரசபை மாதாந்த அமர்வின் போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குறித்த விடயங்களை கண்டித்து நகரசபையினால் கண்டன அறிக்கை வெளியிடுவோம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுறாசபை ஊறுப்பினர்களும் காத்தான்குடி நகரசபை எதிர்கட்சி உறுப்பினர்களுமான மௌலவி ஏ.எல்.எம்.சபீல்(நளீமி)இஎம்.எச்.எம்.நஸீர் ஆகிய இருவரும் முன்வைத்தும் அதை காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் முற்று முழுதாக நிராகரித்துள்ளார் எனவும் ஆளுங்கட்சி தரப்பினர்களில் சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் அதை எதேச்சதிகாரத்துடன் நகர சபைத் தவிசாளர் தட்டிவிட்டுச் சென்றுள்ளார் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் மௌலவி எம்.பீ.எம்.பிர்தௌஸ்(நளீமி) தெரிவத்தார்.
Post a Comment