Header Ads



இலங்கை தத்தளிப்பில்...!


(அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலிருந்து ஹபீபுல்லா பைஸ்)

இலங்கை என்ற நாடு இலங்கையில் பிறந்த ஒவ்வருவருக்கும் சொந்தமானது. மாறாக அது ஒரு இனத்துக்கோ, அல்லது ஒரு மொழிக்கோ, அல்லது ஒரு இயக்கத்துக்கோ, அல்லது ஆளும் கட்சிக்கோ, அல்லது ஒரு சாராருக்கோ சொந்தமான ஒன்றல்ல. எனவே இலங்கை எமக்கு சொந்தமானது நாம் இலங்கைக்கு சொந்தமானவர்கள். அதனால் இலங்கையை சகல வித பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வரு இலங்கை குடிமகனுக்கும் இருக்கிறது.

ஆனால் இன்று இலங்கை நடுக்கடலில்  கடும் புயலில், உயர் அலையில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கிறது. பல பிரச்சினைகளும் இலங்கையை சூழ்ந்து கவ்விக்கொண்டு இருக்கிறது. என்னன்னா பிரச்சினைகள் இருக்கிறது என்று தேடிப்பார்த்தால் பின்வரும் ஒரு சில முக்கியமான பிரச்சினைகளை பட்டியல் படுத்த முடியும்.

1. உலக நாடுகளின் கையில் மனித உரிமை மீறல் என்ற குற்றத்தின் அடிப்படையில் நாலா பக்கமும் சிக்கி பூனையின் கையில் மாட்டிய எலியை போல மீள முடியாமல் இலங்கை சிக்கி தவித்து கொண்டிருக்கிறது .

2. பொதுபல சேனா என்ற பௌத்த தீவிரவாத போக்கு கொண்ட ஒரு இயக்கத்தின் மூலம் மீண்டும் இலங்கையில் ஒரு இண கலவரத்துக்கான அத்திவாரம் இடப்பட்டு கொண்டு இருக்கிறது.

3. பொருள் விலை உயர்வால் சகல வித மக்களும் சகல விதங்களிலும் பாதிக்கப்பட்டு குற்றவியல் அதிகரிப்பு என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு நாட்டின் சகல வித நடவடிக்கைகளுக்கும் கேடு விளவித்தவண்ணம் உள்ளனர்

4. நாட்டின் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றத்தால் நாட்டின் பொருளாதாரம் பலவகையிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் விவசாய அழிவு, கால் நடைகள் இறத்தல், தானிய வகை சேதப்படுத்தல் போன்ற வற்றை குறிப்பிட முடியும்.

5. அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு இருக்கும் பாரிய விரோத போக்கு காரணமாக நலவும் கெடுதியும் சேர்த்து விமர்சிக்கப்பட்டு இலங்கை நலன் அழிந்து கொண்டு செல்கிறது. குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் உள்ள விரோத போக்கு முஸ்லிம்களை இலங்கை அரசியல் அடையாளத்தை இழக்க செய்து வருகிறது.

இது போன்ற இன்னும் பல பிரச்சினைகளால் இலங்கை இன்று பொருளாதார, இன, சூழல், பௌதீக அமைப்பு , மற்றும் சகல விதத்திலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதை எழுதிக்கொண்டு இருக்கும் போது அல்லாஹ்வின் ஒரு வசனம் என் கண் முன் நிழலாடுகிறது. ஏனோ அந்த வசனம் குறிப்பாக இலங்கைக்கு என்று இறங்கியதை போலவே எண்ணத்தோன்றுகிறது . அது தான் சூரத்துல் பகராவின் 155 வது வசனமாகும் .அதில் இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்,

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَموَالِ وَالأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ 155

(ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல் பகரா -155)

இந்த வசனத்தில் இறைவன் ஒரு சமூகத்தை சோதிக்க நாடினால் அந்த சமூகத்தை அச்ச சூழ்நிலை , பசி , பொருள் சேதம் , இயற்கை அழிவு இது போன்ற காரணங்களினால் சோதிப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இன்று இலங்கை வாழ் மக்களும் இந்த முறைமையில் தான் கஷ்டத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் . நான் மேலே கூறிய இலங்கை மக்கள் எதிர் கொண்டு இருக்கும் ஒரு சில காரணங்களோடு இந்த இறை சோதிப்பும் ஒத்து போவதை சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது. எனவே இலங்கை முஸ்லிம்கள் இறை கட்டளைக்கு கட்டு பட்டு இதற்கு இறைவன் கூறும் மாற்றீடு பற்றி சிந்திக்க வேண்டும் .இதன் தொடரில் அல்லாஹ் இதற்கான மற்றீடையும் சொல்லி தருகிறான் .அது தான்,

(தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே  திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். 156 )

எனவே இறை சோதனையை உரிய முறையில் நாம் எதிர் கொள்ள தயாராக வேண்டும் . அதற்கு முதலில் ஈமானிய உறுதி எமக்கு வேண்டும் . அதற்காக நடக்கும் பிரச்சினையை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க சொல்லவில்லை மாறாக அதை நாம் நம் ஈமானிய உறுதியுடன் எதிர் கொள்ள தயாராக வேண்டும் . ஒவ்வரு பிரச்சினையும் அதற்குரிய தீர்வுடன் இஸ்லாத்தை விட்டு கொடுக்காமல் தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான் இறை உதவியும் எமக்கு கிடைக்கும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் சகல வித கஷ்டத்திலிருந்தும் பாதுகாத்திடுவனாக .

No comments

Powered by Blogger.