Header Ads



ஈரான் மீது தாக்குதல் நடாத்த பரிசீலிக்கிறோம் - அமெரிக்கா



ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்று விடுவதை (தயாரிப்பதை) அனுமதிக்கக் கூடாது என்பதே எங்கள் எச்சரிக்கையாகும். ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், இஸ்ரேலுக்கும், அந்தப் பிராந்தியத்துக்கும், அணு ஆயதப் பரவல் தடைக்கும், உலகத்துக்கும் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். 

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான அத்தனை வழிகளையும் கையாள்வோம் என அதிபர் ஒபாமா தெளிவாகக் கூறியுள்ளார். அதற்காக, அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது உள்பட அனைத்து வாய்ப்புகலையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த விவகாரத்தை அமைதியான முறையில் தீர்ப்பது என்பது விரும்பத்தக்கதுதான். அணுசக்தித் திட்டம் என்பது அமைதி சார்ந்த நடவடிக்கைகளுக்காகவே என்று ஈரானிடம் இருந்து உத்தரவாதம் பெற முடிந்தால், ராஜீய வழியிலான அந்த நடவடிக்கை நிரந்தரத் தீர்வாக இருக்கும். இப்பிரச்னையை அமைதியாகத் தீர்க்க வாய்ப்பு இருப்பதாகவே ஒபாமா நிர்வாகம் நம்புகிறது.

ஈரான் மீது கடுமையான தடைகளை விதிப்பதில் உலக நாடுகளை நாம் ஒருங்கிணைத்தோம். இப்போது, ஈரானியர்களின் அணு சக்தித் திட்டம் குறித்து அவர்களுடன் விவாதித்து வருகிறோம். இந்த விவகாரத்தை அமைதி வழியில் தீர்த்துக்கொள்ள முன்வருமாறு ஈரான் அரசு மீது நெருக்கடி அளித்து வருகிறோம் என்றார் பென் ரோட்ஸ்.

2 comments:

  1. Irakla neuclar irukku endru oru inspector madayan sonnthinalla war saithu antha natta nasam panniyathu America.Engnand France ect. Kadaisiyil sonnathu sorry Intha Nayigal mela war kutram edukka ella ippa Iran mela ithu Alivukkuthan

    ReplyDelete

Powered by Blogger.