Header Ads



எகிப்து அல்அஸ்ஹர் பல்கழைக்கழகத்தில் இலங்கை மாணவி உமைரா சாதனை

(எம்.ஸித்தீக் ஹனீபா)

எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவி உமைரா சாதனை படைத்துள்ளார். 

அல் அஸ்ஹர் பல்கலைக்கழக இலங்கை மாணவ, மாணவிகளது 60 வருட கால வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளை பெற்று, உமைரா நூருள் ஹம்ஸா சாதனை படைத்துள்ளார். 93 சதவீத புள்ளிகளை பெற்று, ஹதீஸ் துறையில் பி.ஏ. பட்டப்படிப்பை உமைரா பூர்த்தி செய்துள்ளார்.

இலங்கை மாணவ, மாணவிகளுள் மும்தாஸ் தரப்பில் 93 சதவீத புள்ளிகளை பெற்று, சித்தியடைந்த முதலாமவராக உமைரா திகழ்கின்றார். 

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல தொகுதியின் உடுகொட கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கண்டி வீதி திஹாரியவில் வசித்து வருகிறார். உடுகொட அறபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பெற்ற இவர், கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபு கல்லூரியில் இணைந்து, சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றி, சிறப்பாக சித்தியடைந்துள்ளார். 

புனித குர்ஆனின் 23 ஜூஸூக்களை இதுவரை மனனம் செய்துள்ள உமைரா, எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் 4 ஆண்டுகால கற்கை நெறியை ஈராண்டுகளில் பூர்த்தி செய்தும் சாதனை படைத்துள்ளார். 

உமைரா இலங்கையின் முதல் தர உலமாக்களுள் ஒருவரான அல் ஆலிம் நூருள் ஹம்ஸா அவர்களின் புதல்வியாவார். அவர்களும் றியாத் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துறையில் பி.ஏ. கௌரவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது. தற்போது மாவனெல்லை ஸலபிய்யா அரபு கலாசாலையில் முதல்வராக அவர் பணியாற்றுகின்றா. 


7 comments:

  1. ماشاء الله بارك الله

    ReplyDelete
  2. Alhamdulillah mashaAllah Allf mabrook i pray for her more and more successful AAmeen.

    ReplyDelete
  3. Alhamdulillah mashaAllah Allf mabrook i pray for her more and more successful AAmeen.

    ReplyDelete
  4. May Allah bless her and utilize for the social and religious empowerment.

    ReplyDelete
  5. alhamthulillah!!!
    innum memmaylum allah arul purivanahe!!!!!

    ReplyDelete
  6. masha allah...
    Sister, rly proud of you...

    ReplyDelete
  7. ஜப்னா முஸ்லிமுக்கும் சகோதரர் எம்.ஸித்தீக் ஹனீபாவுக்கும் நன்றிகள் "ஜஸாகுமுல்லாஹு ஹைரன்"

    http://www.facebook.com/groups/346291342097308/495515733841534/?ref=notif&notif_t=group_activity#

    ReplyDelete

Powered by Blogger.