எது வரை எமது மௌனம்...?
(Abu Saudh-Riyadh)
இஸ்லாமிய நெஞ்சங்களே!
17ஆம் திகதி கண்டி மாநகரத்தில் நடைபெற்ற பொது பல சேனாவின் அராஜகக் கூட்டத்தில் இந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள், அரசியல் வாதிகள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் எதிராக ''டீஸன்ட்'' எனும் மரியாதை துளியும் இல்லாமல் தம் உள்ளக் குமுரல்களை அள்ளிக் கொட்டியுள்ளனர். மகா சங்கத்தினர் எக்காரணம் கொண்டும் அசிங்க வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியருக்க வேண்டும். அப்படியிருந்தும், ''மகா சங்கத்தினரிடம் என்னை மன்னிக்கும் படி கூறுகிறேன், இப்படித்தான் இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்'' என்று பல முறை கூறிக் கூறி தீய இழி வார்த்தைகளால் சாடியுள்ளனர்.
பரவாயில்லை. நாய் வாளை நேராக்க முடியாது என்று நினைத்து அவற்றை விட்டுவிடுவோம்.
ஆனால், நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட்ட அக்கூட்டத்தை பல்லாயிரம் மக்கள் செவிமடுத்துக் கொண்டிருந்த வேளையில் ''பௌத்த மக்களே! முஸ்லிம் கடைகளில் உணவருந்த வேண்டாம், ஏனெனில், அந்நிய மதத்தினருக்கு உணவு வழங்கும்போது 3 முறை துப்பிவிட்டுக் கொடுக்கும் படி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது'' என நா கூசாமல் சுத்தப் பொய்யை கட்டவிழ்த்தும் நாம் அதைப் பற்றி மௌனமாக இருப்பது, அவன் சொல்லும் கருத்து குர்ஆனில் உள்ளதோ என நடுநிலையிலுள்ளவர்களையும் சந்தேகிக்கத் தூண்டுமல்லவா?
இவ்வாறான சந்தர்ப்பத்தில்
''பௌத்த சகோதரர்களே! நாம் பகிரங்க சவால் விடுகிறோம். இவன் சொல்லும் இக்கருத்து உண்மையாக இருந்தால், இவனிடமுள்ள குர்ஆனில் எத்தனையாம் பக்கத்தில் உள்ளது என்று எடுத்துக் காட்டட்டும்''
''பௌத்த சகோதரர்களே! உலகில் அதிகமாக சுத்தத்தை விரும்புபவர்களே முஸ்லிம்கள். அப்படியிருக்க நாம் மாற்று மதத்தவர்களுக்கு வழங்கும் உணவுகளில் துப்புவதாக அறிந்து கொண்டே பொது பல சேன பொய்யொன்றைக் கட்டவிழ்த்துள்ளது எமக்கெதிராக நியாயமான குற்றச் சாட்டுகள் இல்லாமைக்காகவா???''
''பௌத்த சகோதரர்களே! எமது பெண்களின் மரியாதைக்குரிய ஆடையே புர்கா. அதை அணிகின்ற பெண்கள் தாமாக விரும்பியே அணிகின்றனர், அதனை எதிர்ப்பதால் பொது பல சேனா அடையும் பயனென்ன?''
''பௌத்த சகோதரர்களே! ஹலால் முத்திரை அகற்றப்பட்டுவிட்டது, பரவாயில்லை. உடம்பைப் பாதிக்கும் அசுத்தமான கலவைகள் அடங்கிய உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டாமல் நீங்களாகவே தவிர்ந்து கொள்ளுங்கள்.''
''பௌத்த சகோதரர்களே! எமது திட்டங்கள் அது, இது என உளரித் தள்ளும் பொது பல சேனா தமது கூற்றுக்கு ஒரே ஒரு சான்றையாவது முன்வைக்குமா???''
''பௌத்த சகோதரர்களே! நான்கு திருமணங்கள் சட்டத்தை எதிர்க்கும் இவர்களால் இந்நாட்டு மொத்த முஸ்லிம்களில் ஆயிரத்துக்கு ஒரு வீதமாவது அவ்வாறு திருமணம் முடித்துள்ளதைக் காட்ட முடியுமா??''
இவை எதிர் தரப்பினரையும் சிந்திக்கத் தூண்டும் சில உதாரண வரிகள்.
இவை போன்ற கசப்புணர்வுகளைத் தூண்டாத வண்ணம் சில வார்த்தைகளை சிங்கள, ஆங்கில மொழிகளில் எழுதி துண்டுப்பிரசுரங்களாக அச்சிட்டு கொழும்பு, கண்டி, குருநாகல், காலி உட்பட பல பகுதிகளுக்கும் விநியோகிப்பதும் வரும் 25 ஆம் திகதியோ, வெள்ளிக்கிழமையோ சுலோகங்களை ஏந்தி எம்மைப் பற்றிய தெளிவை வழங்குவதும் இன்றைய சூழலில் மிக அவசியமாகும்.
இவ்வாறான நடவடிக்கைகளே பொது பல சேனாவை வீழ்த்துவதற்கும், பதில் தர முடியாமல் அவர்களின் முதுகெலும்பு முறிவதற்கும் துணைபோகுமே தவிர பேஸ்புக், டிவிட்டர், ஈமைல் போன்ற வலையமைப்புக்களில் மாத்திரம் வெளியிடப்படும் தகவல்கள் அவர்களில் அதிகமானவர்களைச் சென்றடையப்போவதில்லை.
மௌனமே எமது ஆயுதம் என்று வாய் மூடி இருந்துவிட்டு பொது பல சேனாவின் விசக் கருத்துகளுக்கு அரசாங்கமும் அங்கீகாரம் வழங்கிய பின் மேலும், கீழும் பார்க்க வேண்டியது தான் எஞ்சும்.
இதனை அமுல்படுத்த யாரும் முன்வருவார்களா? இறைவனின் அருள் என்றும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளட்டும்.
Well said. Responsible person/s should do this on behalf of our community & for the sake of Almighty Allah. Plssssssss....."
ReplyDeletePoruttu irundazu podu avarkaludaya karuttukkal pli yai irundal mattru karuttukkalai oda nadiyaha veli idaom
ReplyDeletemuslim amippukal onrinidu
NOTE :Aaridhu Onrinidu
சகோதரரே இவர்கள் செய்யும் சட்ட விரோதக்களுக்கு வழக்கு தாக்கள் செய்ய முடியாதா இன்னும் சட்டப்படி கலியாணம் முடிக்காமல் அவர்களை போல் கள்ள தொடர்பு வைப்பது நீச்சல் உடைய்ல் ரோட் இல் திரிவது மட்டும் நாட்டில் நடக்கும் கேவலமான சீர்கேடுகள் இவர்கள் கணங்களை குருடாக்கி விட்டதே
ReplyDeleteதயவு செய்து 25ம் திகதியோ அல்லது வெள்ளிக்கிழமையோ தனவந்தர்கள், கொழும்பு, கண்டி, காலி, குருநாகல் மற்றும் நாட்டில் அனைத்துப்பகுதிகளுக்கும் சகோதரர் அபூஸவுத் அவர்களின் கூற்றுப்படி பொது பல சேனா சொல்லும் பொய்களைக் கேள்விகளாக்கி அவர்களிடமே ஆதாரம் கேட்டு ஆகக்குறைந்தது துண்டுப்பிரசுரமாவது அச்சிட்டு வெளியிடுங்கள். நிச்சயம் அல்லாஹ் இதன் மூலமும் அப்பாவி மக்களுக்கு தெளிவைக்கொடுக்கலாம்.
ReplyDeleteதாமதம் அல்லாஹ்வின் நின்றுமுள்ளது. விரைவு ஷைத்தானின்பண்பாகும்..என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.பொது வழக்கில் :பொறுத்தார் அரசாள்வார் பொங்கியோர் காடேறுவார்.இது அல்லாஹ்வின் சட்டங்கள் .அதிலேதான் இந்தக்கயவர்கள் கை வைத்துள்ளனர்.நம்மைவிட அவர்களைத்தண்டிப்பதற்கு அவனே உரித்துடையவன்.இதை (அல்குர் ஆனை)னாமே இறக்கி வைத்தோம் ,இதனை நாமே பது காப்போம்.(அல்குர் ஆன் அன் -நஹ்ல்11)
ReplyDeletegoverment already accept pothubala sena as they did not invoite muslims to open new airport.
ReplyDeleteஉங்கள் அழைப்பை ஏற்கும் முதல் நபராக என்னை இணைத்துக்கொள்ளுங்கள்
ReplyDeleteநாம் உங்களுடன் உடன் படுகின்றேம் சகோதரரே ஆனால் எங்களுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட தலைமைத்துவம் உல்லது ACJU தயவுசெய்து இக்கருத்துக்களை அவர்கலளுடன் பகிர்ந்து கொள்ளுஙள். இதனால் சிரந்ததொரு விலைவை எம்மால் ஏற்படுத்த முடியும். அவவாரில்லாமல் தனித்தனியாக செயற்படுமிடத்து அதன் விலைவு சாதகமாக அமையாது.
ReplyDeleteசகோதரர் முன்வைத்த கருத்தினை வரவேற்கின்றேன் அவர் ACJU உடன் இனைந்து இதனை செயற்படுத்த தன்னாளான அனைத்து முயற்சிகலையும் ஏடுப்பார் என்ற நம்பிக்கையுடன்.(from out of Sri Lanka)
masha Allah, very effective ideas. I dont know how to and where to start. If a capable person or an authority initiates the process we can follow ..
ReplyDeleteQuranil iruppathaka poy kurum inthe vidayaththai atharaththudan ulagengum ulla Islamiya nadugalukku anuppi veyththu punitha Quranai Kevalappadiththimaikaka Islamiya nadukalin kadum echcharikkai (warning) moolamaga intha balasenavai nammal oliththuketta mudiyatha. Mukkiyamaga Iran nattin kadumayana echcharikkaye intha balasenavai oliththuketta podhumanathu. Ithai atharaththudan Islamiya nadugalukku anuppuvatharku thayriyasaligal/balasaligal engalil yaarum illaya?????
ReplyDelete