Header Ads



பஸ்வண்டி சீராக இயங்காமையினால் மக்கள் பெரிதும் அவதி


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் காத்தான்குடி பாலமுனையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை காத்தான்குடிச் சாலைக்குச் சொந்தமான பயணிகள் பஸ் வண்டி சரிவர இயங்குவதில்லை என பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாலமுனை,கர்பலா,புதிய காத்தான்குடி நூறாணியா வீதிகளுடாக பயணிக்கும் குறித்த பஸ் வண்டி சரிவர நேரசூசிக்கேற்ப இயங்காமையினாலும் சில நாட்களில் சேவையில் ஈடுபடாததினாலும் மக்கள் பெரிதும் அவதிப்படுத்துவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு குறித்த பஸ் வண்டி சீராக இயங்காமையினால் அப்பகுதியில் வைத்தியசாலைக்கு செல்வதற்காக காத்திருக்கும் நோயாளிகள்,வயோதிபர்கள்,பெண்களே பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் குறித்த பஸ் வண்டி முழுமையாக இயங்குவதில்லை எனவும் ஏனைய நாட்களில் பகுதியளவில் இயங்குவதில்லை எனவும் அவ்வாறு இயங்கினாலும் இடையில் கோளாறு ஏற்பட்டு பஸ் வண்டி பாதையின் நடுவில் நிறுத்தப்பட்டு காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனமெடுத்து இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டுமென சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



1 comment:

  1. ஹிஸ்புல்லாஹ் MP ஹர்த்தால் அன்று கொடுத்த புதிய பஸ் வண்டி எங்கே? அதிலும் மோசடியோ தெரியவில்லை!!!

    ReplyDelete

Powered by Blogger.