தேசத்திற்கு மகுடம் காணச்செல்லும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் - பொலிஸ்மா அதிபர்
அம்பாறையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காண வரும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
இன்று (27) விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை காணச் செல்லும் முஸ்லிம்களை ஒரு குழு அச்சுறுத்தி வருவதாகவும் அது குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இடம்பெறும் பூமியில் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதென பொலிஸ் மா அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே அச்சமின்றி தேசத்திற்கு மகுடம் காண வருமாறு அவர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆக... தேசத்திற்கு மகுடம் கண்காட்சி பார்க்க மட்டும் பாதுகாப்ப பத்தி பேசுவிங்க, ஆனால் தினந்தோறும் முஸ்லிம் பெண்களுக்கும் வியாபாரிகளுக்கும் நடக்கும் அனியாயத்திற்கு எதிராக எந்த எதுவும் பண்ண மாட்டிங்க
ReplyDeleteYes Sir Mr. Ilangon,
ReplyDeleteBut we can not believe you. You and your government do fully corporattion with BBS and there are no Halal food in Ampara now to eat also. so sorry sir. And we know about your protection sir.