Header Ads



சவூதியில் சிறுமியை கொன்ற குற்றச்சாட்டில் இந்தோனேஷிய பெண்ணுக்கு மரணதண்டனை


(தினகரன்நான்கு வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்ற குற்றச் சாட்டில் இந்தோனேஷிய பணிப்பெண் ஒருவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தன்மீதான குற்றச்சாட்டை அந்த பணிப்பெண் ஏற்றுக்கொண்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பெற்றோர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் தூங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை மேற்படி பணிப்பெண் கொடூரமானமுறையில் கத்தியால் குத்தி கொன்றுள்ளதாக குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தலால் அல் ஷஹ்ரி என்ற சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். எனினும் மேற்படி பணிப்பெண்ணின் வழக்கறிஞர் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்திருப்பதாக சவூதி கஸ்ஸட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதியின் செங்கடல் நகரான யன்புவில் கடந்த செப்டெம்பர் மாதம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கி இரத்த பணத்தை பெற மறுத்துள்ளனர். தம்மை மோசமாக நடத்தியதற்கு பழிவாங்கவே சிறுமியை கொன்றதாக அந்த பணிப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண் தற்கொலை செய்ய முயற்சித்ததற்காக 8 மாத சிறைத் தண்டனையையும் 200 கசையடி களையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

சவூதியில் 25 இந்தோனேஷிய பணிப்பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாகவும் 22 பேர் மன்னிப்பு பெற்று நாடு திரும்பியிருப்பதாகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேஷிய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2011 ஜூன் மாதம் தன் வேலை வழங்குநரை கொன்ற குற்றத்திற்காக 54 வயது இந்தோனேஷிய பணிப்பெண் மீது சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்தோனேஷியா தனது சவூதி நாட்டுக்கான தூதுவரை மீள அழைத்தது.

2 comments:

  1. இதனால் யாறுக்கு இலாபம் தட்கொலை செய்ய முயட்சி செய்ததட்கும் தண்டனை பின்னர் அதே ஆலை அவர்களே கொலையும் செய்கின்றனர் நல்ல உலகம் ஏன் அந்த பெண் தட்கொலை செய்யவிட்டிருந்தால் சவுதிக்கி என்ன நஷ்டம்???

    ReplyDelete
  2. அந்தப் பெண் முஸ்லிமோ இல்லையோ தெரியாது. ஆனால் தற்கொலை குப்ரில் விட்டு விடும். முஸ்லிம் இல்லாவிட்டாலும் தற்கொலை பாவமே. பெற்றோர் இந்தப் பெண்ணை நடத்திய விதமும் தப்பு தான் (உண்மையாக இருந்திருந்தால்) அதற்கு இப்பெண் செய்ததும் பாவமே (உண்மையாக இருந்திருந்தால்). சட்டம் என்று வரும் போது உள் வீட்டுப் பிரச்சினை போல அணுக முடியாது. அது சமுதாயப் பிரச்சினை. அதற்காக வேலைக்காரர்களாக பனிப் பெண்களை தனிமையில் அனுமதிக்கும் சவுதி சட்டத்தை நான் காப்பாற்றுவதாய் நினைக்க வேண்டாம். சரியானதை ஆதரிக்க வேண்டும். அவ்வளவு தான்.

    ReplyDelete

Powered by Blogger.