செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்ட அறிகுறிகள் - நாசா விண்வெளி மையம்
செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து சுமார் 57 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. நாசா அனுப்பிய விண்கலங்கள் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடும் பனிப்பொழிவு, மழை காரணமாக மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகம் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் தோற்றமளித்துள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கு ஏற்படுத்திய பேரழிவு, நீர் அரிப்பு போன்றவற்றின் தடங்கள் இப்போதும் காணப்படுகின்றன. தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மூலம் நீரியல்துறையில் நிலவும் சந்தேகங்களுக்கு விடை காண முடியும். செவ்வாய் கிரகத்தில் நீரோடைகளும் கடல்களும் இருந்ததற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
பூமியைப் போலவே வளிமண்டலக் கூறுகளைக் கொண்ட ஒரே சூரிய குடும்ப கிரகம் செவ்வாய். அதன் துருவங்களில் வெண்மையான பகுதி காணப்படுகிறது. கோடைக் காலத்தில் செந்நிறமாகவும் மழைக் காலத்தில் நீலமாகவும் காட்சியளிக்கிறது. அதற்குக் காரணம் செவ்வாய் கிரகத்தில் அடிக்கடி ஏற்படும் புழுதிப் புயல்தான் என நாசா தெரிவித்துள்ளது.
Post a Comment