பால் மாவில் கலப்படம் - வழக்கு விசாரணைகள் நீடிக்கிறது
(ஜெஸார்)
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அன்கர் ரத்தி நெஸ்ப்ரே லக்ஸ்ப்ரே மெலிபன் என பல்வேறு பெயர்களில் இலங்கையில் விற்பனை செய்யப்படும் பால் மாவில் உண்மையான பால் போசனை நீக்கப்பட்டு இலங்கை தர நிர்ணய நிபந்தனைகளிலிருந்து தப்பிக்கொள்வதற்காக வேறு மிருகங்களின் அல்லது மூலிகை எண்ணைகளைச் சேர்த்துள்ளனர் என்ற ஆய்வு முடிவினை உறுதிப்படுத்தி மவ்பிம லங்கா மன்றம் 2009 ஆம் ஆண்டில் பகிரங்கப்படுத்தியமைக்கு எதிராக பென்டரா மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணை கடந்த (28.02.2013) நடைபெற்றபோது இருதரப்பினையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பால் மா நிறுவனங்கள் மவ்பிம லங்கா அமைப்பு தமது பரிசோதனை முடிவை அம்பலப்படுத்தல்ää அது தொடர்பாக கருத்துத் தெரிவித்தல்ää வெளியி;ல் முதலியவற்றை தடைசெய்யும் வகையில் கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே வெளிட்ட கண்டுபிடிப்பு அறிக்கைகள் தமது நிறுவனத்துக்கு அவமானமானதாக அமைந்தமையினால் அற்காக ரூ. 100 மில்;லியன் நஸ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
மவ்பிம லங்கா அமைப்பிற்கு எதிராக நெஸ்லே மற்றும் பொன்டரா நிறுவனங்கள் இரண்டு வழக்குகளையும் இந்த அறிக்கையை வெளியிட்டமைக்காக ஹெலதிவ என்ற பத்திரிகைக்கு எதிராக இரண்டு வழக்குககளுமாக மொத்தம் நான்கு வழக்குகளை பதிவுசெய்துள்ளது.
கடந்த 28ம் திகதி இந்த நான்கு வழக்குகளும் கொழும்பு மாவட்ட பிரதான நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்குப் பிறகு இந்த விடய உள்ளடக்கம் தொடர்பாக நிறுவனங்களை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் அம்பலப்படுத்துவதை நிறுத்தும் உடன்பாட்டுக்கு எழுத்து மூலம் இணங்கும் பட்சத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை தாம் ரத்துச்செய்வதாக பால் மா நிறுவனங்களின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மொமேஸ் த சில்வா மற்றும் சட்டத்தரணி பிரியலால் விஜேவீர மற்றும் சட்டத்தரணி கபில கமகே ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனினும் இந்த வழக்குகளில் விடய உள்ளடக்கம் “பால் மாவின் தரத்தினைக் குறைத்தல்” என்பதனால் அதனை யார் எப்போது செய்தாலும் அதனை நாட்டு மக்களின் நலன்கருதி தாம் பகிரங்கப்படுத்த சுயாதீனமான தடையை ஏற்படுத்திக்கொள்ள தமத அமைப்பு உடன்படவில்லை என மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தாம் அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ள இந்த கண்டுபிடிப்பு நூற்றுக்கு நூறு உண்மை என்றும் அதன் உண்மைத்தன்மையை தேசிய சர்வதேச ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனைக் கூடங்கiளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த மவ்பின லங்கா அமைபினர் அது தொடர்பாக துறைசார் வல்லுணர்களை சாட்சிகளாக அழைத்துவர முடியும் என்றும் தெரிவித்தனர்.
அவ்வாறே ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்த பொன்டரா மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் தமக்கு எதிராக தொடுத்துள்ள வழக்குகளை எந்தவித நிபந்தனைகளும் இன்றி வாபஸ் வாங்குவது தொடர்பாக தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமது சேவைநாடியான பால்மா நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்க சிறுது காலம் தேவை என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.
முஸ்லிம்களே! இந்தக்கம்பனியின் தயாரிப்புகளில் இருந்து வந்த சந்தேகம் தெளிவானது என்பதை இச்செய்தி கோடிட்டு காட்டுகிறது, இது போன்றவர்களின் பண உதவியும் ஹலால் எதிர்ப்பாளர்களுக்கு கிடைக்கலாம் என்பதும் என் ஊகம்.
ReplyDelete