Header Ads



ஒஸாமா பின்லேடனின் மருமகன் கைது



அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்த். அல்கொய்தா இயக்கத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தார்.  கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் விமானம் மூலம் தாக்கி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்பு உள்ளது. 

இதை தொடர்ந்து பின்லேடனும், சுலைமான் அபு கெய்த்தும் தலைமறைவாக இருந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதை தொடர்ந்து சுலைமான் அபு கெயித்தை அமெரிக்கா தீவிரமாக தேடி வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் ஜோர்டான் நாட்டில் பதுங்கியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார். 

இந்த தகவலை ஜோர்டான் எம்.பி. பீட்டர் கிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, இது அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான மிக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என வர்ணித்தார். 

கைது செய்யப்பட்ட அபு கெய்த் கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தகவலை ஜோர்டான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து அபுகெய்த் நியூயார்க் கோர்ட்டில் விரைவில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அல்கொய்தாகளின் மூத்த தலைவர் ஒருவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற இருப்பது இதுவே முதல் முறையாகும்.

2 comments:

  1. I think now jordan king very happy to corperete with america.

    ReplyDelete
  2. Hi, King Abdullah is a Muslim and he lives by Qua-ran and Hadhis..he will not commit to such crimes which are religiously forbidden like all other Muslims living all over the world. Can you show a single muslim who does harm and commits to crime in this world..but, only American, European,idol worshipers and fire worshipers commit to wrong doings.

    ReplyDelete

Powered by Blogger.