Header Ads



இளைஞர்கள் சிங்கள சந்ததிகளை உருவாக்க வேண்டும் - அமைச்சர் குமார வெல்கம


இலங்கையில் சிங்களவர்கள் குறைந்து வருவவதாகவும் இதனால்  சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழில் செய்யும் அதேவளை திருமணம் செய்து பிள்ளைகளையும் அதிகளவில் பெற்றெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.  கொழும்பில் நடைபெற்ற போக்குவரத்துச் சபைக்கான புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனத் தொகையில், சிங்களவர்கள் குறைந்து கொண்டு வரும் நிலையில், இளைஞர்கள் தொழில் புரிந்து கொண்டு, எதிர்கால சிங்கள சந்ததிகளை உருவாக்க வேண்டும்.  முன்னர் ஒரு குடும்பத்தில் 8 முதல் 10 பிள்ளைகள் இருந்தனர். எனினும் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அமைச்சர் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. hallo eddu yaruda pudusa oruttar klmpeddar yooooooo

    ReplyDelete
  2. ivarukku pulla pekka mudiumama?

    ReplyDelete
  3. அட மக்குப்பிள்ளைகளா! முதலில் சாராயத்தை நிறுத்து சந்ததி தானாக பெருகும்!

    ReplyDelete
  4. அதை நீ நின்று பார்த்து உறுதி செய்யணும். ஏற்கனவே சனம் பட்டிணியால் வாடுது. 8, 10ஐப் பெத்து உன் தலைலை போடுறதா.

    ReplyDelete

Powered by Blogger.