Header Ads



ஹலால் சான்றிதழ் வாபஸ் பெறப்படவில்லை - உலமா சபை அடியோடு மறுப்பு


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழை வாபஸ் பெறப்பேவதாக கூறப்படுவதில் எத்தகைய உண்மையும் இல்லையென அதன் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

இவர் இதுதொடர்பில் மேலும் கூறுகையில்,

சில ஊடகங்கள் ஹலால் சான்றிதழ் வாபஸ் பெறப்பட்டு விட்டதெனவும், மற்றும் சில ஊடகங்கள் வாபஸ் பெறப்படவிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளன. இது உண்மையல்ல. எதிர்வரும் திங்கட்கிழம இதுதொடர்பில் வர்த்தக சம்மேளனத்துடன் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இதுவரை எத்தகைய இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

No comments

Powered by Blogger.