Header Ads



கொழும்பில் 'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' நூல் வெளியீட்டு விழா


றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு – 10 டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையிலுள்ள முஸ்லிம் பெண்கள் கல்வி வட்டத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி) சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்த நூல் அறிமுகத்தினை சட்டத்தரணி எஸ்.என்.எம்.மர்சூம் மௌலான மேற்கொள்ளவுள்ளதுடன் முதற்பிரதி புரவலர் ஹாஷிம் உமருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த வெளியீடுகளின் மூலம் கிடைக்கும் நிதி றிஸானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளிடப்பட்ட இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 1ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்றது.


2 comments:

  1. WHO IS RISANA NAFEEK THIS REALLY STUPID PROGRAM WHAT SHE HAS DONE, SHE MURDERED THE BABY AND HANG, WHY FOR HER SUCH PROGRAM, BCOS DONE BY SAUDI THAT IS THE MAIN REASON, IF YOU WILLING TO DO IGNORE ALL SAUDI THINGS EVEN DONATE MONEY ALSO.CAN YOU 95% IN YOUR MOUTH SAUDI MONEY AND TAKING ACTION AGAINST SAUDI, WHAT SAME??

    ReplyDelete
  2. உண்மையிலே இது ஒரு அரசியல் மற்றும் சுய இலாபம் கலந்த சிரிப்பூட்டும் வேடிக்கையாகும்...

    இது உண்மையிலேயே, ஷரியாவுக்கும், இஸ்லாமிய நாடான சவுதி மற்றும் முஸ்லிம்களுக்கும் எதிராக எடுக்கப்பட்ட ஒரு விசமட்செயல்... இதில் நம்மவர்களின் பங்களிப்பு வேறு...

    உண்மையிலேயே மர்ஹூமா ரிசானா, நாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் ஆற்றிய பங்குதானென்ன? அவரின் இந்த மரணம் குறித்து, தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு பணமாகவோ, பொருளாகவோ உதவலாமே தவிர, மாறாக இது ஒரு முட்டாள்தனமான செயலேயன்றி வேறில்லை...

    அவர்செய்த முதல் குற்றமே, நாட்டின் சட்டத்திற்கு முரணாக அவரின் வயதை கூட்டி கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டது... {இதுதான் தேசத்தின் புதல்வியின் செயலா...?}

    இஸ்லாம் தவறுகளை வன்மையாக கண்டிக்கின்றது... உறவுமுறை பார்த்தோ அல்லது தகுதி அந்தஸ்து பார்த்தோ தண்டிப்பதில்லை... இஸ்லாமிய சட்டத்தின் முன் அனைவரும் சமமே... எனவேதான், எம்பெருமானார் {ஸல்} அவர்கள் கூட, என் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் கையை வெட்டியிருப்பேன் என்று கூறியிருக்கின்றார்கள்...

    இந்த நாட்டிற்காக பாரிய பணி புரிந்தவர்கள் எத்தனையோ பேர் இலைமறைகாயாக இருக்கின்றாகள்...

    ReplyDelete

Powered by Blogger.