முஸ்லிம் காங்கிரஸ் ஜம்மியத்துல் உலமாவோடும் ஒத்துழைக்கும்..!
(எஸ்.அன்சப் இலாஹி)
சிலர் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக முன்னுக்குப் பின் முறணாக, ஒரு கட்டத்தில் ஹலால் சான்றிதழை மீளப்பெறக்கூடாது என்றும் மீளப்பெற்றதற்குப் பிறகு மீளப்பெற்றது பிழை என்றும் அதற்கு பிறகு ஜம்மியத்துல் உலமா சரி என்றும் பக்குவமற்ற அறிக்கைகளை விட்டு முஸ்லிம் மக்களையும் குழப்பி அவர்களும் குழம்பி இருக்கிறார்கள் ஆகவே சமூகத்தலைவர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தை நிதானமாக நடத்தியது போன்றும் ஜம்மியத்துல் உலமா என்கின்ற அந்த அமைப்பு இதுவரைக்கும் செய்துவந்திருக்கின்ற கடமைகளை தொடர்ந்தும் செய்ய வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் முஸ்லிம் மக்களுக்கு பொது பலசேனாவால் ஏற்படுத்தப்பட்டுவருகின்ற நியாயமற்ற செயற்பாடுகள் தொடர்பாக நேற்று (18.03.2013) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- கடந்த காலங்களில் பொது பல சேனா ஹலால் உணவை ஒரு விடயமாக கையில் எடுத்து கொண்டது போன்று ஹிஜாபையும், முகத்தை மூடிக்கொள்வதனையும் ஒரு பிரச்சினையாக இப்போது கையில் எடுத்துக்கொண்டு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். பொதுபலசேனா ஹலால் தொடர்பான விடயத்தினை பிரச்சாரம் செய்து முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்று முகத்தினை திறக்க அல்லது ஹிஜாபை அகற்றவேண்டும் என்கின்ற விடயமும் அதிகமாக விழிப்புணர்வையே ஏற்படுத்தும் என்பதே உண்மை இதனால் முஸ்லிம் மக்களிடத்தில் விழிப்புணர்வுகள் ஏற்பட்டு வருவதனை நாம் பார்க்கிறோம். உலகில் இருக்கின்ற பௌத்த மதம் என்பது சகிப்புத்தன்மையோடும், மனிதபிமானத்தோடும் தொடர்பிருக்கின்ற ஓர் மதம்; என்ற அடிப்படையில் ஏனைய மதங்களுடைய அடையாளங்களை மதிக்கின்ற ஒரு மதத்தில் இருக்கின்ற பௌத்த குருமார்கள் அந்த மதத்தை கண்ணியப்படுத்தவேண்டுமே தவிர இழிவுபடுத்துவதற்கு ஒரு நாளும் முற்படக்கூடாது.
இலங்கையிலே கடந்த 30 வருடங்களாக இடம்பெற்றுவந்த யுத்தத்திற்கு பின்பு கொஞ்சம், கொஞ்சமாக இப்போதுதான் இன சௌஜன்யமும் இன ஒற்றுமையும் வளர்ந்துவரும்போது, மிகக் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தங்களுடைய கைகளிலே இனவாதத்தையும் அதே போன்று மதவாதத்தையும், கையில் எடுத்திருக்கின்ற பொதுபல சேனா போன்ற அமைப்புக்களை சிங்கள மக்கள் ஒரு நாளுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதற்கு கண்டியிலே நடந்து முடிந்திருக்கின்ற அவர்களுடைய மாநாடு மிகச் சிறந்த சாட்சியமாகும். இலங்கை பூராகவும் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் அழைத்துவந்து கண்டி மாநாடு நடாத்தியபோதும் அங்கே ஆயிரத்திற்கும் குறைவானவர்களே கலந்துகொண்டு அதனை நடாத்தி முடித்த விடயம் என்பது சிங்கள மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மிக வெளிப்படையான ஓர் முன் உதாரணமாகும். அந்த அடிப்படையில் பொதுபல சேனா மற்ற இனங்களை மதிக்கின்றவரைக்கும்தான் சிங்கள மக்கள் அவர்களோடு இருப்பார்களே தவிர, அதற்கு மாற்றமானால் அவர்களோடு சிங்கள மக்கள் இருக்கமாட்டார்கள். அதே போன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் மார்க்கத்தலைவர்கள், சமூகத்தலைவர்கள் இந்த விடயத்திலே இதுவரைக்கும் காட்டிவந்த பொறுமை பாராட்டத்தக்கது. வெறுமென தங்களது ஒரு நிகழ்ச்சி நிரலுக்காக இவர்கள் பொதுபலசேனாவோடு முண்டிக்கு முண்டி நின்று ஒரு பெரிய கலவரங்கள் ஏற்படுவதனை விட அல்லது இந்த நாட்டில் ஓர் இன முறுகல் ஏற்படுவதை விடவும்; முஸ்லிம் மதப்பெரியார்கள் அதே போன்று சமூகத்தலைவர்கள் இதுவரைக்கும் சாதித்திருப்பது பாராட்டத்தக்க விடயமாக இருக்கிறது.
அரசியல் கட்சிகளிடம்; அல்லது நிறுவனங்களிடம் இந்த விடயங்களை கொடுக்கின்ற போது அவர்கள் தங்களுடைய சொந்த நிகழ்ச்சி நிரலுக்கேற்றவாறு விடயங்களை நகர்த்தி அங்கு மிகப் பெரிய ஒரு பூகம்பம், பூதாகரமான நிகழ்வுகளை அரங்கேற்றி இந்த முஸ்லிம் சமூகத்தை இக்கட்டான நிலைக்கு உட்படுத்திவிடுவார்கள் என்கின்ற அச்சம் எம்மத்தியில் உள்ளது.
ஆகவே தொடர்ந்து நிதானமான போக்கொடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதனுடைய தலைமையையும், ஜம்மியத்துல் உலமாவோடும், பொதுவான அமைப்புக்களோடும் ஒத்துழைக்குமே தவிர தனியாக கையில் எடுத்து இதனை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றாது. எமது மதத்திற்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற ஒரு தீவிரவாத அமைப்பாகிய பொதுபலசேனா அமைப்பால் கொண்டு செல்லப்படுகின்ற விடயத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பினை வெளிகாட்டுவதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எல்லா சக்திகளையும் ஒன்றுதிரட்டி இவ்வாறான அமைப்புகளை தோற்கடிப்பதற்கு இந்த பிரச்சினையை அரசியலுக்கு அப்பால் நின்று முன் கொண்டு செல்கின்ற பொது அமைப்புக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று மேலும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Whatever your reports and Haa Hoos you make, HE the President and Co is doing whatever they planned already. Shame on all of you that you were not able to open your mouth in the parliament when they said ‘No mosque were attacked’. And also, Mahinda ignored our so called Islamic Monks in the opening ceremony. Looks the President doesn’t need your blessings any more. You can say BBS is small number in Kandy but failed to understand the hands behind them. Anyway, you can have a Tasty Briyani and nice sleep until next election comes then foolish people will vote for a merely gain.
ReplyDeleteநன்றி எங்கே முஸ்லிம்காங்க்றேஸ் தளைவர் ஏன் செத்த பிணம் போல் இருக்கிறார் அவர் அரசியல் மேடையில் கத்திவிட்டு இப்ப சொகுசு வாழக்கை வாழ்றார
ReplyDeleteNolimit தாகபட்டதுக்கு கத்தினாரு அவருட கொள்ளுபிடிய icecream கடய்க்கு ஆப்பு அந்துரும் என்றி
அரசியல் இசை வள்ளல்கள்,ஆரோகணத்தை அவரோகணமாகவும்,அவரோகணத்தை ஆரோகணமாகவும்,தாளம் போடுகின்றனர்.தாளத்தின் அந்தம் விரல்சுழுக்கின் ஆதி.
ReplyDeleteஹலால் ஹராம் அறியாமல் அரசியல் நடத்துபவர்களில் ஒருவர் நீங்கள் தயவு செய்து இந்த விடயத்தில் கை வைத்து இதையும் மாசு படுத்தாதீர்!!!
ReplyDeleteவாங்கோ! வாங்கோ!!
எங்கடா எல்லாரும் ஹலாலுக்குள்ள நனையிறாங்களே! வழமையாக இதுகளுக்குள் நனையிறவரக் காணவில்லையே? என்றெண்ணினேன்! வந்துவிட்டார்! மற்றோர் ஓடு மீன் பிடிப்பவர்கள், இவரோ உறுமீன் வருமட்டும் இருந்து பிடிப்பவர். மட்டுமல்ல குழம்பிய குட்டை மீன் பிடி வல்லுனர்! எந்த மீன் மாட்டிரிக்கோ தெரியவில்லை.
மற்றவர்கள் பக்குவமற்ற அறிக்கை விடுகிறார்களாம், பக்குவம் பற்றி நீங்கள் பேசக்கூடாது! அக்கரைப்பற்று சின்னப்பள்ளி வாயல் மரைக்கார் தெரிவு விடயத்தில் நீங்கள் ஆடிய அரசியல் காடைத்தனம் எந்த விதத்தில் பக்குவமாகும்? அதிலும் பள்ளிக்குள்ளேயே மாற்றி மாற்றி சிகரட் புகைத்துக்கொண்டு சண்டையிட்டீரே! தூஷண வார்த்தைகளை தணிக்கை இல்லாமல் சாமான்யமாகச் சொன்னேர்களே! பள்ளியின் சங்கையைக் குறைத்தீரே!
குழப்பியும் குழம்பியும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர், இவைகளை நாங்கள் உங்களிடம்தான் அதிகம் கண்டிருக்கிறோம்!
முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறதாகக் கூறுகிறீர்கள்! நீங்கள்தான் இன்னும் உணர்வில்லாமல் இருக்குறீர்கள். எங்ககளுக்கு எப்போவோ வந்துவிட்டது. நீங்கள் எல்லாம் பள்ளி உடைப்பைக் காரணம் காட்டி வாக்கு எடுத்து விட்டு மீண்டும் அரசாங்கத்தின் அடிவருடிகளான போதே, நாங்கள் விழித்து விட்டோம்!
மற்றவர்கள் குறுகிய அரசியல் லாபத்துக்காக என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள் – உண்மைதான் அனால் உங்கள் லாபமோ இதில் குறுகியதல்லாமல் நெடியதாய் இருக்கும்!
இந்தக் கட்டுரையும் உங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்றே! அதோடு “அரசியலுக்கு அப்பால் நின்று” சொல்வதாக எழுதி இருக்குறீர்கள்.
இதற்குப் பதில்! வடிவேலு சொல்வது போல்: “எங்கள வெச்சி காமடி கீமடி ஒண்ணும் பண்ணல்லையே?”
Agreed Ok, why can't you sit with opposition members in the council???????
ReplyDeleteCan you do that and show your protest????????
Kamran!
Yes.. that's normal for them jumping parties only if they think that it will bring success in the next election or any favour to get a seat otherwise never for the sake of Community. At least do they have any mission & vision??? Are they aware of it???
ReplyDeleteவாய பொத்திக்கிட்டு இருந்தாலே போதும். அரசியல் வாதிகளே! கிட்டத்தட்ட நீங்கள் எல்லோருமே இஸ்லாத்தை விட்டும் மிகத்தூரமாக இருப்பதால் இஸ்லாமிய விடயங்களில் உங்களின் கெடுபிடி வேண்டாம்! முடியுமாக இருந்தால் நீங்கள் அணைவரும் ராஜினமா செய்து விட்டு தூய்மையான இஸ்லாத்தை தெரிந்தவர்களுக்கு உங்கள் ஆசனங்களை கொடுத்து விட்டு ஒதுங்குங்கள் இல்லாது போனால் அமிர்தலிங்கத்துக்கு ஏற்பட்ட நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
ReplyDeleteLoosup payale losup payale . . . . . . . . . . . . Neengallum ungal thalivarum Minister NIMAL SIRIPALA DE SILVA vin pinnale nintru kondu Ilankail engaum pallikal udaikkappadavillia entru sonnapothe nangakl ellarum viliththukkonda thudan nanku thelivakittom. athu eppadinge arasu pallikalai udaikkirathu enru maedaikalil solluvinge udaikkavillai enru parliament il solluvinge
ReplyDeleteஒரு கூட்டம் ஆழ்ந்த உறக்கத்தில். இன்னொரு கூட்டம் தம்மைப் பிரபல்யப் படுத்திக்க இந்த பிரச்சனைகளை பயன்படுத்துது. சமூகம்....!!!
ReplyDelete