ஜெனீவாவில் இலங்கை தோல்வியடைந்தது
ஐக்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 26 நாடுகள் வாக்களித்ததுடன் 13 நாடுகள் எதிராக வாக்களித்தன. அத்துடன், 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
இந்தியா சில திருத்தங்களை முன்வைத்த நிலையில், வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment