இலங்கை முஸ்லிம்கள் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு சரியானதா..?
இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பியிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ மக்கள் உரிமை இதழுக்கு அளித்த பேட்டி.
கேள்வி: இலங்கையில் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கொன்றவர்கள். அதை மறந்துவிட்டீர்களா?
பதில்: நாங்கள் மறக்கவில்லை. புலிகளின் பல தவறுகளில் அதுவும் ஒன்று. அதேசமயம், அச்சம்பவம் குறித்து 2002ல் நடைபெற்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபாகரன், பகிரங்க மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பிரபாகரனுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் குழு கிளிநொச்சியில் புரிந்துணர்வு சந்திப்பை நடத்தினார்கள். அதேசமயம், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவதில்லை. அவர்கள் இப்போது களத்தில் இல்லை.
நாங்கள் இலங்கையில் போரினாலும், சிங்கள பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமானத்தோடு வாதாடுகிறோம். நாங்கள் முள்ளிவாய்க்கால் போருக்குப் பிந்தைய புதிய சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுகிறோம்.
கேள்வி: விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும், ராஜபக்சே தமிழ் மக்களைக் கொன்று குவித்ததையும் சமப்படுத்தி இலங்கையிலும், தமிழகத்திலும் சிலர் பேசுகிறார்களே...
பதில்: அவர்களுக்காக நாம் பரிதாப்படுகிறோம். இப்போது இலங்கை அரசும் இதேபோல் கருத்துக்களைப் பேசி தங்களின் தவறுகளை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். கொத்துக் கொத்தாய் சொந்த பந்தங்களை இழந்தவர்கள், மயானத்தில் நின்றுகொண்டு ஓலமிடும்போது, ‘பார்த்தாயா... எங்களை அவர்கள் கொன்றது நினைவில்லையா? இப்போது தெரிகிறதா? எங்களைக் கொன்றது என்ன நியாயம்?’ என்றெல்லாம் பேசுவது மனிதாபிமானமற்றது. புலிகள் செய்த தவறுகளுக்கு அப்பாவித் தமிழ் மக்களைப் பொறுப்பாக்கக் கூடாது.
“...எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம்; (எவ்வளவு விரோமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள்...” என்ற திருமறை வசனம் (திருக்குர்ஆன் 5:8) நம்மைக் கடுமையாக எச்சரிக்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் சிலர் இதுபோன்ற மனநிலையில் பொறுப்பற்ற முறையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள். அரசியல் தெளிவு, சமூகப் பொறுப்பு, நல்லிணக்கம் குறித்து புரிதல் இல்லாதவர்கள் இப்படி செய்கிறார்கள். புலிகளின் விவகாரத் தையும், அப்பாவி தமிழ் மக்களின் வாழ் வுரிமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.
பெரும்பான்மையான தமிழக முஸ்லிம்கள் எங்களது கருத்தோட்டத்தில் தெளிவாக இருக்கிறார்கள். முஸ்லிம்களை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்தும், எமது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் களத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து வருகிறது. சிறுவன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முதலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது மனித நேய மக்கள் கட்சி தான். அதன்பிறகுதான் மற்ற கட்சிகள் களத்துக்கு வந்தன. இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடு வதற்கு உத்வேகத்தைத் தந்தது மமக நடத்திய முதல் போராட்டம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.
கேள்வி: இலங்கை முஸ்லிம்களின் நிலைப் பாடு என்ன?
பதில்: இங்கு தமிழகத்தில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், இம்மண்ணில் பூர்வகுடிகளாக வாழும் அனைவரும் நம்மைத் தமிழர்கள் என்கிறோம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழி இணைக்கிறது.
இலங்கையில் சூழல் வேறு. அங்கு இந்துக்கள், சைவ மதத்தினர் உள்ளிட்டவர்கள் தங்களைத் தமிழர்கள் என்கிறார்கள். இந்திய வம்சாவழியினர் தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களை ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்கிறார்கள். அதாவது, தங்களை மற்றொரு தனித்த தேசிய இனமாகக் கருதுகிறார்கள்.
இப்போது இலங்கையில் கோயில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என சிறுபான்மையினருக்குச் சொந்தமான 65 வழிபாட்டுத் தலங்களை சிங்கள வெறியர்கள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். பௌத்த குருமார்கள் மத வெறிப் பிடித்து அலைகிறார்கள். அங்கு ‘பொது பல சேனா’ என்ற புத்த மதவெறி அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை களைத் தூண்டி வருகிறது. இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அவர்கள் குறிவைக்கிறார்கள்.
முஸ்லிம்கள் முறைப்படி உண்ணும் ‘ஹலால்’ முத்திரையிடப்பட்ட உணவு கலாச்சாரத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்கு (முகத்திரை) தடைவிதிக்க முனைகிறார்கள்.
முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி செயல்படுகிறது.
கேள்வி: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து?
பதில்: இது ஐ.நா. சபை முடிவெடுக்க வேண்டிய ஒரு சர்வதேச விவகாரமாகும். அங்கு ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலை யகத் தமிழர்கள் என்று மூன்று பெரும் இனங் களின் உரிமைகள் அடங்கியிருக்கிறது. இதை கவனமுடனும், மனிதாபிமானத்தோடும் அனைவரும் அணுக வேண்டும்.
இவ்விவகாரம் என்பது ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து, தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டித்த பிறகு பேசவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வாகும்.
கேள்வி: இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன?
பதில்: முன்பு வடக்கிலிருந்து விரட்டியடிக் கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் கண்டு வருகிறார்கள். அவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்கள் மீண்டும் கிடைக்க துணை நிற்க வேண்டும். தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இரத்த பந்தங்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். இதில் இரண்டு சமூகங்களின் தலைமையும் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக இணைவது குறித்து வரும் காலங்களில் இருதரப்பும் விவாதத்தை தொடங்க வேண்டும்.
கேள்வி: இதுகுறித்து நீங்கள் முயற்சிகள் ஏதும் எடுப்பீர்களா?
பதில்: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து யாரும் பேசுவ தில்லை. அவர்களில் பலர் இன்னமும் அகதிகளாக உள்ளனர். நாங்கள் பல மேடைகளில் அதைப் பேசி வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் தலைமையும், தமிழர் தலைமையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் தலைமையும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோளாகும். இதை நாங்கள் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறோம். சகோதரர்கள் நமக்குள் உறவு வலுப்பட வேண்டும் என
Post a Comment