பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா
கோதுமை சத்துடன் கூடிய ஒரு கப் பாஸ்தாவுடன், இரண்டு கப் காய்கறி, பழக்கலவை சேர்த்து உட்கொண்டால், பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பினைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த உணவானது 7கிராம் நார்ச்சத்தை உடலுக்கு அளிப்பதாகவும், நாம் தினமும் உண்ணும் உணவில் இந்த அளவு நார்ச்சத்து இருந்தால், அது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பில் 7 சதவிகிதத்தைக் குறைக்கின்றது என்றும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நார்ச்சத்தினை உடலுக்குத் தரக்கூடிய முக்கியமான பொருட்கள் முழுத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பருப்பு வகைகள் ஆகும்.
முந்தைய ஆராய்ச்சி முடிவானது, நார்ச்சத்து, உயர் ரத்த அழுத்தம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பினைக் குறைக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதைய ஆராய்ச்சியில், நாம் எடுத்துக்கொள்ளும் 7 கிராம் அளவு, முதன்முதல் பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பினையே 7 சதவிகிதம் குறைப்பதாக தெரியவந்துள்து.
இதுமட்டுமில்லாமல் அதிக எடை கொண்டோர், புகைப்பிடிக்கும் பழக்கம் உடையோர், உயர் ரத்த அழுத்தம் கொண்டோர் ஆகிய அனைவருக்கும் இந்த வகையான உணவுமுறை நன்மை பயக்கும் என்கிறார் லீட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தியான் த்ரிப்ளிடன்.
Post a Comment