கடாபியின் கப்பல் சுற்றுலா கப்பலாகிறது...!
(Tn) லிபிய முன்னாள் தலைவர் கடாபிக்காக வாங்கப்பட்ட சொகுசு கப்பலை சுற்றுலா கப்பலாக மாற்றப்பட்டுள்ளது.
லிபிய தலைவராக முவம்மர் கடாபி பதவி வகித்தபோது, அவரது கேளிக்கைக்காக சொகுசு கப்பல் ஒன்றை தயாரிக்க மெடிட்டேரனியன் கப்பல் கட்டும் தொழிற்சாலையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
697 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வாங்கப்பட்ட இந்த சொகுசு கப்பலில் 1751 தனியறைகள் உள்ளன. 69 சிறப்பு அரங்கங்கள், மசாஜ் வசதி, சுடுநீர் நீச்சல் குளம் ஆகிய நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பலை லிபிய அரசு சமீபத்தில் விற்றுவிட்டது. இதை வாங்கிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொது பயன்பாட்டிற்கு இந்த கப்பலை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.
Post a Comment