சம்மாந்துறையில் பிரதம நீதியரசர்
(முஹம்மட்)
நீதிமன்றங்களில் நீதிபதிகள் தமது பணிகளை சிறப்பாக செய்வதனாலும் சட்டத்தரணிகள் தமது சட்டத்திறமைகளால் மக்களுக்கு பணியாற்றுவதனாலும் மாத்திரம் நீதிமன்றங்களின் பணிகள் முழுமை பெற்றுவிட முடியாது அங்கு பணியாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களினதும் சிறந்த அற்பணிப்புக்களும் சேவைகளும் உள்வாங்கப் படுகின்ற போதே நீதித்துறையின் பணிகள் முழுமை பெறுகின்றது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் அழைப்பை ஏற்று அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று (20) மாலை விஜயம் செய்த போதே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்த கருத்த தெரிவிக்கையில் இங்கு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை மாத்திரம் கருத்தில் கொண்டு எனது கருத்தப் பரிமாறல்களைச் சொல்லாமல் இங்கு பணியாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களினதும் பணிகளையும் இவ்விடத்தில் எடுத்துக் கூறுவது பொருத்தமாகும் விஷடமாக நிதிமன்றங்களைப் பொறுத்தவரையில் அங்கு கடமையாற்றுகின்ற சுருக்கெழுத்தாளர்களின் பணிகள் பாராட்டத்தக்கதாகும் தம்மால் மேற் கொள்ளப்படகின்ற வழக்குகள் அனைத்தையும் ஆவணப்படுத்தி கோப்பிடுவதற்கு அவர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
நீதிபதிகள் நிதிமன்றங்களுக்கு வருகின்ற மக்களுக்கு கரிசனையுடன் பணியாற்ற வேண்டும் அதே போன்று சட்டத்தரணிகளும் மக்களை தம்மைப் போன்று கருதி பணியாற்ற வேண்டும் அது எமக்குப் பெரும் பாக்கியமாகும்.
அதே போன்றுதான் சம்மாந்துறைப் பிரதேசத்தில் முதாலாவதாக குவாஷp நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு நீதிமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டு அதற்குரிய நீதிபதியும் இங்கு இருந்து மக்களுக்கு பணிபுரிவது இப் பிரதேச மக்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும் எனவும் பிரதம நீதயரசர் தெரிவித்தார்.
சம்மாந்துறை சட்டத்தரணிகள் குலாமின் தலைவர் சிரேஷட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் சிசிர ரத்னாயக்கா, கல்முனை மேல் நீதிமன்ற ஆணையாளர் பீ.சுவர்ணராஜ், கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.முகைதீன், சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணகரெத்தினம் ஆனந்தி, கல்முனை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உட்பட சிரேஷ;ட சட்டத்தரணிகள்,சட்டத்தரணிகள், நீதிமன்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment