Header Ads



மட்டக்களப்பு நகர சபை உறுப்பினர் ரம்ழானின் கடிதம் பார்க்கக்கிடைத்தது.


அறியாத விடயத்தை அறிந்தோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற குர்ஆன் வார்த்தைக்கிணங்க அவர் கேள்விகள் கேட்டிருந்தது பாராட்டத்தக்கது. ஆனாலும் சில விடயங்களில் அவரே சுயமாக பதிலும் தந்துள்ளது அவரது அறியாமையை காட்டுகிறது. இனி நான் பதிலுக்கு வருகிறேன். 

இந்த நாட்டில் ஆண்மீக கடமை செய்ய வேண்டிய உலமா, அரசியல் அறிக்கை விடலாமா என்பது போல் கேட்டுள்ளார்.  ஆண்மீகம் என்பது அரசியலையும் சேர்த்துத்தான் என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவருக்கு தெரியாது போனது விந்தையல்ல. ஏனென்றால் அக்கட்சியை சேர்ந்தோருக்கு இஸ்லாம் சரியாக தெரியாது.

நாங்கள் லெட்டர் ஹெட் கட்சி என்றும் என்னை நானே தலைவர் என கூறிக்கொள்வதாகவும் சிறுஎ பிள்ளை தனமாக கூறியுள்ளார். இவருக்கு ஸ்ரீ. மு. காவின் வரலாற கூட தெரியாது என நினைக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களை இந்த முழு முஸ்லிம் சமூகமும் இணைந்து தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை. காத்தான்குடியில் கூடிய நாலு பேர் சேர்ந்து அவரை தலைவராக்கினார்கள். அந்த வேளை அவரை அவர் ஊரான கல்முனையிலும் நாலுபேரை தவிர யாரும் தலைவராக ஏற்கவில்லை. அந்த நாலுபேரில் நானும் ஒருவன். அதன் பின் அவர் 88 ம்ஆண்டு கட்சி பதிவு பெறும் வரை லெட்டர் ஹெட்டில்தான் கட்சி நடத்தினார். அவர் கல்முனையிலிருந்து இரவோடிரவாக கொழும்புக்கு அகதியாக சென்றபோது அவருக்கு இருக்க இடங்கொடுக்க கல்முனையிலோ காத்தான்குடியிலோ எவரும் இருக்கவில்லை. பின்னர் 88ம் ஆண்டு கட்சி பதியப்பெற்று அதற்கு தென்னிலங்கை மக்கள் வாக்களித்த பின்தான் கல்முனை மக்களும் காத்தான்குடி மக்களும் அவரை திரும்பிப்பார்த்தார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நானும் நாலு பேர் அல்ல அதை விட அதிகமானோரால் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது என்னுடன் இருந்தவர்கள் மௌலவி பத்ருத்தீன் கபூரி (குருனாகல்) மௌலவி இப்றாகீம் உமர் (அட்டாளைச்சேனை), மௌலவி அஸ்வர் பாக்கவி (கொழும்பு), மௌலவி முஸம்மில் (ஏறாவுர்), மௌலவி றாஸிக் (மன்னார்), மௌலவி லியாகத் அலி (புத்தளம்). ஆக நான் என்னை தலைவர் என சுயமாக அறிவிக்கவில்லை என்பதுடன் தேசிய மட்டத்தினாலானவர்களால் தெரிவு செய்யப்பட்டேன்.

மக்கள் முன் எமது கட்சியை நிறுத்த கால நேரம் இன்னமும் வரவில்லை. ஆனாலும் ஒரு கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு பெற அது களத்தில் ஆறு வருடங்கள் அரசியல் செய்திருக்க வேண்டும் என்ற சட்டமிருப்பது அரசியல் கட்சியின் அங்கத்தவரான உங்களுக்கு தெரியவில்லை என்பது தெரிகிறது. நாம் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பேச  யாரும் அதிகாரம்  தரத்தேவையில்லை. அது ஒரு முஸ்லிமின் தார்மீக கடமை. 

எமது அறிக்கையினால் சமூகம் நன்மையடைந்துள்ளதா என தேடி பார்த்ததாகவும் எதுவும் இல்லை என்று பொய் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் தேடிப்பார்க்கவே இல்லை. காத்தான்குடி மஞ்சந்தொடுவாயில் உள்ள 45 குடும்பங்களுக்கு 2005ல் சுனாமி நஷ்டஈடு கிடைக்காத போது புலிகளின் பாரிய முட்டுக்கட்டையை எமது பத்திர்கை அறிக்கை (சுடர் ஒளி) உடைத்தெறிந்து ஒரு குடும்பத்துக்கு  இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் வீதம். அன்றைய ஜனாதிபதி மூலம் பெற்றுக்கொடுத்தோம். அதற்கு சாட்சி காத்தான் குடி அப்துல் ரஹிம் மௌலவி. தற்போது கட்டாறில் உள்ளார். அத்தோடு மௌலவி ஆசிரிய நியமனத்தை எமது அறிக்கைகளால் வெளிக்கொணர்ந்தவர்கள். இது போல் பல.

இன்ற முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பஜிரோக்களுக்கு விலை போவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மைதான். இவ்வாறு சோரம் போயுள்ள கட்சியின் அங்கத்தவர்தான் நீங்கள் என்பதை மறந்து போனது ஏன்? இந்த நேரத்தில் ஒரு உலமாவான நாம் எம்மோடு ஒற்றுமைப்படும்படி சமூகத்தை அழைக்கிறோம். சோரம் போன, சமூகத்தை காட்டிக்கொடுத்த, போக்கிரிகள் நிறைந்த உங்கள் கட்சியில் ஒன்று படுங்கள் என ஒரு உலமாவான நாம் மக்களை ஏமாற்றலாமா? அதனால்தான் மாற்றீடாக எமது கட்சியில் ஒன்று படும்படி அழைக்கிறோம். அதனால்த்தான் ஊடகங்கள் மூலமாக எமது இஸ்லாமிய அரசியலை சமூக மயப்படுத்தகிறோம். அதனை சமூகம் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் என எண்ணுவது மடமை. ஆணானப்பட்ட நபியவாகளுக்கே 13 வருட பிரச்சாரத்தில் சுமார் 70 பேரே அன்னாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். நாம் அவர்களுக்கு முன் ஒரு அற்பம். உலமாக்கள் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கட்சி மூலமே இந்நாட்டு மக்கள் சுயநலமற்ற அரசியல் பயணத்தில் வெல்ல முடியும் என்ற எமது கருத்தை சமூகம் அங்கீகரிக்க இன்னுமம் 20 வருடங்கள் செல்லலாம் என்பது எனது கணிப்பு. 

தற்பாதைய ஜனாதிபதியை வெல்ல வைத்த எனக்கும் ஒரு கதிரை கிடைத்திருக்க வேண்டுமே என நீங்கள் கூறுவதன் மூலம் உங்கள் இரத்தத்தில் ஊறிப்போயுள்ள சுயநலம் தெரிகிறது. ஜனாதிபதி 2005ம் ஆண்டு வென்றவுடன் எல்லோரும் ஓடிப்போய் பதவி கேட்டார்கள். நான் மட்டும்தான் எமக்கு எந்த பதவியும் வேண்டாம் எமது கோரிக்கையான மௌலவி ஆசிரியர் நியமனத்தை கொடுங்கள் என கூறினேன். கடிதமும் கொடுத்தேன். வேண்டுமானால் உங்கள் கட்சிதானே இப்போது நக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லி ஜனாதிபதியை கேட்கச்சொல்லுங்கள் உண்மையா என்று. இதைத்தான் 2008ம் ஆண்டு ஜனாதிபதி அவர்கள் மஹரகமை கூட்டம் ஒன்றில் 'என்னிடம் எந்தவொரு பிரதிபலனையும் எதிர் பார்கக்மல் எனக்கு ஆதரவு தரும் ஒரேயொரு முஸ்லிம் கட்சித்தலைவர் இவர்தான்' என என்னை மேடையில் நின்றவாறே சுட்டிக்காட்டினார். அப்போது ஆளுனர் அலவி மௌலவானா, அஸ்வர் ஹாஜியார், அமைச்சர் அமீரலி ஆகியோரும் இருந்தனர். கேட்டுப்பாருங்கள். இதன் பொருள் உங்களுக்கு பரிகிறதா?

பெதுபலசனாவுக்கு எதிராக என்ன அதற்க முன்பே தம்பள்ள பள்ளி தாகக்ப்பட்ட போது அதற்கெதிராக ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடாத்த முன் வர வேண்டும் என பகிரங்க அறிக்கை மூலம் கோரினோம். இதற்காக சி ஐ டி பொலிசாரால் விசாரணை செய்யபப்பட்டோம். எமது கட்சி மக்கள் வாக்குகள் பெற்ற கட்சியல்ல. அப்படி இருந்தால் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை செய்திருப்போம். உங்கள் கட்சிக்கு நாடு முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒரு இடத்திலாவது சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்றாவது செய்தீர்களா? பயம். பதவிகளுக்கான பயம். 

எங்கள் கட்சியன் தேசிய மாநாடு கொழம்பு, கல்முனை என நடந்துள்ளது. பாவம் உங்களுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இல்லை என நினைக்கிறேன். உங்கள் முகவரியை அனுப்புங்கள். இது பற்றி போட்டோக்களுடன் வந்த எமது புத்தகத்தை அனுப்புகிறேன். 

இறுதியாக மழை பெய்வது பொது நலம் அதற்காக குடை பிடிப்பது சுயநலம் என்பது உண்மை. ஆனால் மழையில் நனையும் மக்களை பாதுகாக்க முனவருவதுதான் குடையையும் உதறி விட்டு உண்மையான பொது நலம். 

மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கபூரி, நத்வி, மதனி, பீ. ஏ. ஜேர்னலிசம், தலைவர், முஸ்லிம் மக்கள் கட்சி 

11 comments:

  1. sabas very good reply

    ReplyDelete
  2. மௌலவி,

    இது அவ்வளவு “ஹொண்த நே”

    மற்றைய மாவட்டங்களில் உள்ள எம் முஸ்லிம் சகோதரர்களுக்காக ஏதாவது செய்வோமே!

    சிங்களவர்களும் நம்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நாமும் ஆளுக்காள் காழ்புணர்சியோடு செயற்படுவதென்பது நிச்சயமாக ஷெய்த்தானின் வேலை.

    தடியெடுத்தவன் எல்லாம் சண்டியன் ஆயிற்றாங்க.

    ReplyDelete
  3. மௌலவி முபாரக் அவர்களின் கூற்றுக்கு நான் உடன்படுகிறேன். தலைவர் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் உருப்படாது. தலைவரின் குற்றத்தை கூறினால் தொண்டனுக்கு என்னமா சூடு வருது....

    ReplyDelete
  4. mr:Mubarak are you actually studied in madrasa? what the hell are you talking about prophet.? (ஆணானப்பட்ட நபியவாகளுக்கே 13 வருட பிரச்சாரத்தில் சுமார் 70 பேரே அன்னாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்)..are you equaling your dirty business with prophet..

    ReplyDelete
  5. truly now I am feeling when you are coming to politics,you will just throw Islam..do not compare ur bloody politics with Islam(Prophet and companion life)..

    ReplyDelete
  6. Eadkanava erihirathu inthaneram parththu neengalveru ebathirunthum idea

    ReplyDelete
  7. MUTHALAWATHU NAMMUDAYYA PIRACHCHINAYYA PARPPOM..EPPADY ODRUMAY ELLATHA KARANATHALTHAN NANKAL EWALAU KASDAPADUTHU NAMTHU SAMUTHAYYAM..NANKAL ODUMAYYAY KURAL KODUPPOM ISLATHUKKAHA.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Mamathai yum thalaikkanamum ullavarkal talaivar anaal samuthayaththikku alivu than

    ReplyDelete
  10. adai muthadevi you are always you are the person should treated as person no veiw and wisdom about muslim . will you please stop about talking muslims

    ReplyDelete
  11. அட க...ள நா...களே! இதிலிருந்து என்ன விளங்குது அரசியல் வாதிகள் இஸ்லாத்தை விட்டும் மிகத்தூரமாக இருப்பதால் இஸ்லாமிய விடயங்களில் அவர்களின் கெடுபிடி வேண்டாம் என்பதே! ஆக நீங்கள் அணைவரும் ராஜினமா செய்து விட்டு தூய்மையான இஸ்லாத்தை தெரிந்தவர்களுக்கு உங்கள் ஆசனங்களை கொடுத்து விட்டு ஒதுங்குங்கள் இல்லாது போனால் அமிர்தலிங்கத்துக்கு ஏற்பட்ட நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

    ReplyDelete

Powered by Blogger.