Header Ads



கதிர்காமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பாதை யாத்திரை யாழ்ப்பாணத்தில்



இலங்கையில் உள்ள சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்கும் நோக்குடன் கடந்த 6ஆம்திகதி கதிர்காமத்திலிருந்து வடக்கு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பாதை யாத்திரை குழு இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. 

இக்குழுவினரை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தலைமையிலான குழுவினர் வரவேற்றதுடன், ஆரியகுளச் சந்தியில் அமைந்துள்ள சிறிநாகவிகாரையில் விசேட பூஜை வழிபாடுகளிலும்; கலந்து கொண்டனர்.

திபெத்து நாட்டைச் சேர்ந்த ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய தேரர் ஜிக்மி பேமா வங்சன் தலைமையில் நேற்று வவுனியாவிற்கு வந்திருந்த இந்த யாத்திரைக் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை 31 யாழ்.நகரை வந்தடைந்தனர். இப்பேரணியில் வருகைதந்த இருபத்து நான்கு நாடுகளைச் சேர்ந்த 270 சமாதான விரும்பிகள்;, மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளடங்கியயோரை வடமாகாண ஆளுநர் சந்திரிசிறி 
தலைமையிலான குழுவினர் யாழில் வரவேற்றனர.;


1 comment:

  1. These are the black sheeps behind bbs they gave instruction how to attack and now they are visiting all areas to check.if they are real peace team they have to stop all bbs meetings and tell those monks not to teach bad things in daham pasals.
    Many incedints have recorded all they said last our sadu said these to us in dham pasal.
    This is a virus been spred in the temples.

    ReplyDelete

Powered by Blogger.