முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாடு தொடர்ந்தால் பொருளாதாரத்திற்கு பேரிடி
As-Sheikh A.L.A. Hafin (Hami)
இன்றைய அரசியல் களத்திற்கும் மத சார்ந்த விடயங்களுக்கும் இடையில் தொடர்பு படுத்தி இருக்கின்ற அனாச்சார செயல்பாடுகள் இன்று இலங்கை மக்களுக்கு இன்னலை உண்டுபண்ணும் என்பதை பிரச்சினைக்குரிய பகுதியினர் உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணமாக பொது பலசேனவின் செயற்பாடுகள் இன்னும் அப்பாவி சிங்கள மக்களையும் ஒன்னும் அறியா ஏனைய மக்களையும் மாக்களாக மாற்றும் ஓர் அபாய நிலமை தோன்றியுள்ளது.
பர்மாவில் நடக்கின்ற முஸ்லீம்கள் சுத்திகரிப்பு பள்ளிவாசல் உடைப்பு இன்னோரன்ன ஏனைய அனியாயங்கள் போல் இந்நாட்டில் உள்ள முஸ்லீம்களை சற்று முருகல் நிலைக்கு அழைத்து வரும் பொதுபல சேனாவின் செயல்பாடுகள் நிறுத்தப்படாவிட்டால் நாடு பாதாள குழியை நோக்கி செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
உதாரணமாக இம்மாதம் 17ம் திகதி மடவள, மாவில்மடு ஆகிய ஏனைய அனைத்து பிரதேசங்களிலிலும் புர்கா, தொப்பி முஸ்லீம்களின் கலாச்சார விடயங்களில் கைவைக்க துவங்கியுள்ள இச் செயற்பாடுகள் இலங்கையினுடைய பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை முன்னோக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு சவுதி அரேபிய அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்லில் 'ஹையத்துல் இஹாதத்துள் இஸ்லாமியா' உடைய தலையீடும் இதில் ஒன்றாகும்.
பொது பல சேனாவின் செயற்பாடுகள் தொடருமாயின் சுமாராக சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிகின்ற வேலையாட்கள் அதிவேகமாக இன்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்களாயின் நாடு சுமாராக, சாதரண, மாதம் ஒன்றுக்கு 21 கோடி இலங்கை ரூபாவிற்கு மேல் வீழ்ச்சியை சந்திக்க வேண்டி நேரிடும், இவ்வாறு ஏனைய அரபு நாடுகளும் ஆரம்பித்துவிட்டால் ஐயோ பாவம் அப்பாவி மக்கள் எங்கே செல்வார்கள் விலைவாசிகள் உயரும் மக்கள் இன்னல்களை வாழ்க்கையாக கொண்டிருப்பார்கள். பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது போல் மீண்டுமொர் இனப்பிரச்சினையை துவககுவதற்கான ஆரம்ப படிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது போல் தென்படுகின்றது.
இதை அரச தரப்பினர்களும் முஸ்லிம் செல்லாக்காசிகளான அமைச்சர்களும் இலங்கையின் எதிர்கால தலைவிதியை சிந்திக்க வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளனர். இல்லையேல் கடந்த கால முஸ்லீம்களின் கசப்புணர்வுகள் மறக்கப்படாத வேளையில் இதை துவக்குவது பற்றுகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுகின்ற ஒரு செயல்பாடாகும். குட்டக்குட்ட குட்டுபவனும் மடையன் குட்டு வாங்குவதும் மடையன்.
Alhamdu lillah it's great idea welcome
ReplyDelete