Header Ads



மன்னார் சிலாபத்துறையில் உதைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மரணம்


(அத) மன்னார் சிலாபத்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் உதைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் விபத்தின் போது உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவத்தின் போது 10 வயதான சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

விளையாட்டு மைதானத்தில் அலங்கார வேலைப்பாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குளாய் ஒன்று சிறுவனின் மீது விழுந்தமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. 

சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளார். 

No comments

Powered by Blogger.