Header Ads



இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் பேஸ்புக் முதலிடம்


19 வயதுடைய இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் பேஸ்புக் முதலிடம் வகிப்பதாக லண்டனில் இயங்கும் நோ தி நெட் என்ற நிறுவனம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த நிறுவனம் கூறுகின்றது.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தருவதில் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. 87 சதவீதம் பேர் பேஸ்புக்கினால் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றனர். டுவிட்டர் தளத்தினால் 19 சதவீதம், பிளாக் பெர்ரியால் (பிபிஎம்) 13 சதவீதம், ஆஸ்க் எப்.எம். மூலம் 9 சதவீதம, பிபோ மூலம் 8 சதவீதம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 4 சதவீதம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரச்சினைக்கு உள்ளாகும் இளைஞர்கள் இதனை தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து புகார் செய்ய வலைத்தளங்கள் வழிமுறைகள் வைத்திருக்கும் போதும், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. பெரியதாக எந்த மாற்றமும் நடந்துவிடாது என்ற எண்ணத்துடன் மவுனமாக இருந்து விடுகிறார்கள். மிகச் சிலர் தான் இப்பிரச்சினைகள் குறித்து தங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ பகிர்ந்து கொள்கின்றனர். இது குறித்து அந்த பேஸ்புக் வலைத்தளத்தின் நினைவுப் பக்கங்களில் 21 சதவீத இளைஞர்கள் பதிந்துள்ளனர். 

பருவ வயதின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஆண்கள் தம்மைப் பற்றி அறிந்து கொள்வதாகவும், தம்முடைய விவேகத்தை வெளிப்படுத்துவதாகவும் எண்ணிக்கொண்டு, தனியே இப்பிரச்சினைகளை சமாளிக்க நினைத்து, முடியாமல் தற்கொலை நிலைக்குக் கூட தள்ளப்படுகின்றனர். இது தவறான வழிமுறையாகும் என்று இந்த ஆய்வு நிறுவனத்தின் மனோதத்துவ நிபுணர் ஆர்தர் காசிடி தெரிவிக்கிறார்.

தங்கள் பிள்ளைகள் போனிலும் சமூக வலைத்தளங்களிலுமே மூழ்கியுள்ளனர் என்ற வேதனையை பெற்றோருக்கு அளிக்கிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

No comments

Powered by Blogger.