இன்னும் அனாதைச் சமூகமா..?
(நாகூர் ழரீஃப்)
இலங்கை முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றில் கண்டிராத அளவிற்கான இனவாதத்தின் உச்சகட்ட விரோதச் செயற்பாடுகளை அன்றாடம் கண்டுவருகிறது. இவ்வினவாதச் செயற்பாட்டின் மூலம் எமது சமூகம் பல மறந்து போன பாடங்களை நினைவு படுத்தும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுதலும் ஓரணியில் ஒன்றுபடுதலும் என்ற இரண்டு முக்கிய பாடங்களில் எமது சமூகம் சித்தியடையத் தவறியள்ளது. இவ்விரண்டு பாடங்களின் தேவை பற்றி பலரும் பாடம் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களும் இப்பாடங்களில் தேறாதவர்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பதுதான் வியப்பானது.
அரசியல் தலைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்களை விட்டுவிடுவோம். ஆன்மீகம் பேசுபவர்கள் கூட இப்பாடங்களில் இன்னும் முன்னேற்றம் காணவில்லை. அவரவர் பக்க நியாயங்களை வலுப்படுத்துவதில் மாத்திரம்தான் இன்னும் அவர்கள் கவணம் செலுத்துகின்றனர்.
சிலர் இன்னும் தமது இயக்க வெறியைத் தியாகம் செய்யவில்லை. மற்றும் சிலர், கூட்டு துஆவிற்றும் ஸுப்ஹு குனூத்திற்கும் ஆதாரம் தேடுவதிலும் அவை பற்றி தமது பக்க நியாயங்களை மக்கள் மன்றங்களில் போடுவதிலும், மற்றும் சிலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை ஒரு பக்கச் சிந்தனையில் இருந்து கொண்டு விமர்சிப்பதையும் வஹ்ஹாபி மற்றும் ஸலஃபிகள் பற்றி ஜனாதிபதிக்கும் மாற்று மதச் சகோதரர்களுக்கும் மொட்டைக் கடிதம் அனுப்புவதில் மற்றும் சிலரும் தீவிர ஈடுபாடு காட்டிவருகின்றனர்.
இவைகளுக்கு மத்தியில் சாத்வீகப் போராட்டத்திற்கான ஓர் அழைப்பு விடுகப்பட்டது. ஆனால் இது ஒரு சமூக அங்கீகாரம் பெற்ற தலைமைத்துவத்தினால் விடுக்கப்படவில்லை. எனவே, இதுவும் ஒரு கேலிக்கூத்தாகவே காணப்பட்டது. ஓட்டுமொத்த சமூகமும் இதனை அங்கீகரிக்கவுமில்லை, ஏற்றுக் கொள்ளவுமில்லை.
மற்றுமொருவர் இச்சாத்வீகப் போராட்டத்தைக் கைவிடுமாறு மக்களைக் கேட்டிருந்தார். எனினும் அவரும் மொத்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டவரோ அல்லது நிராகரிக்கப்பட்டவரோ அன்று.
மற்றும் சிலர் சூரா சபையின் அவசியம் பற்றிப் பேசி எஞ்சியிருக்கும் தலைமைத்துவத்தையும் பலஈனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
சிதறிக்கிடக்கும் இயக்கங்களையும் ஜமாஅத்துக்களையும் ஓரணியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளைச் செய்வதும், அவ்வோரணி திராணியோடு சமூக விடயங்களில், குறிப்பாக இனவாதிகளின் சமய சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க முன்வரவேண்டும்.
தொடர்ந்தும் ஆதரவற்ற அனாதைச் சமூகமாகவே நாம் செத்து மடிவதா? ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்பார்களே அதைப் பற்றி அவசரமாகவும் அவசியமாகவும் சிந்திப்போம்.
காலத்துக்கும்,சமூகத்திற்கும் பொருத்தமானதும் மிகத்தேவையானதுமான அருமையான கருத்துக்கள்.என்மனார்ந்த நன்றிகள்.
ReplyDeleteWhat is your suggestion br?
ReplyDelete