Header Ads



மேக்க ஓகொல்லன்ட ஹலால் த..?

(Rifan Hussain)

மாவனல்லையில் நடந்ததொரு சம்பவம். முச்சக்கர வண்டி செலுத்தும் சகோதரர் ஒருவர் எங்காவது ஹயர் சென்றால் தான் வளர்க்கின்ற ஆடுகளுக்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இலை குழைகளை வெட்டி வருவது வழக்கம். அன்றும்  சிங்கள சமுகத்தவர்கள் வாழ்கின்ற பிரதேசத்திலிருந்து திரும்பும் போது பாதையோரத்தில் இருந்த பலா மரமொன்றில் கொப்புகளை வெட்டிக் கொண்டிருந்தார். அந்நேரம் அத்தோட்ட உரிமையாள் அவ்விடம் வந்து  மேக்க ஓகொல்லன்ட ஹலால் த? இது உங்களுக்கு ஹலாலா? என வினயமாக கேட்டுள்ளார். பின்னர் அவர் அனுமதியுடன் கொப்புக்களை எடுத்து வந்தள்ளார் அந்த சகோதரர்.

இது உண்மையில் நடந்ததொரு சம்பவம். இவ்வாறான நிகழ்வுகள் எமது சமுகத்தில் நடக்காமல் இல்லை. முன்பு போலன்றி ஹலால் ஹராம் பற்றிய கருத்துத் தாக்கம் பெரும்பாண்மை சமுக மத்தியில் தாராளமாக காணப்படுகின்றது. எமது ஒவ்வொரு நடவடிக்கையும் முஸ்லிம் சமுகத்தைப் பற்றி சரியான மற்றும் பிழையான கருத்தை அந்நிய சமுகம் மத்தியில் உருவாக்குகின்றன. எனவே நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எமது சமுகத்தையும் இஸ்லாத்தையும் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவதாக இருத்தல் வேண்டும்.

குறிப்பாக எமது பெண்கள் இவ்விடயத்தில் மேலும் அறிவூட்டப் படல் வேண்டும். மருந்து எடுப்பதற்காக பலர் வரிசையில் நிற்கும் போது திடீரென வந்து இடையில் உள்ளே செல்வது. பஸ் வண்டிகளிலே பிரயாணம் செய்யும் போது சத்தம் போட்டு கதைப்பது. அந்த வாகணத்தில் 50 பேர் அந்நியர் இருவர் முஸ்லிமாக இருப்பர். ஆனால் 50 பேரும்; அமைதியாக இருக்க இந்ந இரு முஸ்லிம்களின் சத்தம் தான் அங்கு மேலோங்கும்.  பாதையில் நடக்கும் போதும் கூட அடுத்தவர்கள் பாதையில் வருகின்றார்கள். அப்பாதைக்குறிய ஒழுங்குகளை நாங்கள் பேண வேண்டும்.

இவ்வாறு ஏராளமான விடயங்களில் நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். எமது அஹ்லாக்குகள் தான் எமது சமுகத்தைப் பற்றி நல்ல அபிப்ராயங்களை அந்நியர் மத்தியில் ஏற்படுத்தும்.

2 comments:

  1. Oru Hadeesin karuththavathu "Islam paraviyathu valai kondu alla narkunaththal"

    ReplyDelete
  2. This is a example please in future don't do this and not only this any thing any where keep safe of all muslims. Thanks

    ReplyDelete

Powered by Blogger.