Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களுக்கு பகிடிவதை..!!


(ஒலுவிலான்)

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகமானது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  ஸ்தாபக தலைவரும் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த தலைவருமான மாமனிதர் மர்ஹூம் அல்ஹாஜ்  அஷ்ரப் அவர்களின் அயராத  முயற்சியினால் 1995 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இது இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரத்தையும் பெருமையையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. தற்போது இப்பல்கலைக்கழகமானது குவைத் அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் இலங்கையில் உள்ள தலைசிறந்த  பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு எடுட்டுக் காட்டாக அண்மையில் அதிமேதகு ஜனாதிபதியவர்களால் இங்கு பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டதை கூறலாம்.

இப்பல்கலைக்கழகத்தில் தற்போது பொறியியல் பீடத்துடன் சேர்ந்து மொத்தமாக 5 பீடங்கள் அமையப்பெற்றுள்ளன. இங்கே தான் இலங்கையில் தனித்துவமான இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் அமையப்பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகமானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கிடைக்கப்பெற்ற ஒரு மிகப்பெரிய சொத்துஇமைல் கல் என்றால் மிகையாகாது. இப்பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் கடந்த் காலங்களில் நடாத்திக் காட்டிய ஒலுவில் பிரகடணம் மூலம் உலகுக்கு இலங்கை முஸ்லிம்களின் வகிபாகத்தை வெளிக்கொணர்ந்து முஸ்லிம் தேசியத்தை உலகுக்கே பறை சாட்டியது.

இலங்கை பல்கலைக்கழகங்களிலேயே முஸ்லிம்களை அதிகளவு கொண்டுள்ளது தென் கிழக்கு பல்கலைக்கழகம் தான். அது மட்டுமல்லாமல் இதுவரை இப்பல்கலைக்கழகம் சமூகத்துக்கு செய்த சேவைகளானது இனவாதி சம்பிக்க இது ஜிஹாதின் தொட்டில் என கூறும் அளவுக்கு இஸ்லாமிய பணி செய்துள்ளது.

ஆனால் தற்போது இதன் கலாச்சாரம் எங்கே போகிறது தெரியுமா?. உயர் கல்வி அமைச்சினால் உறுதியாக தடை செய்யப்பட்ட பகடிவதையின் மைதானமாக ஒலுவில் வளாகமும் விளையாட்டு வீரர்களாக முக்கியமாக முஸ்லிம் பெண்களும் மாறியிருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இதற்காக அம்பாறை மாவட்ட கரையோர வதிவிடமொன்றின் சிரேஷ்ட பெண் மாணவிகள் தனது இளைய மாணவிகளை காலை முதல் மாலை வரை வைத்து இட்ட நிபந்தனைகள் என்ன தெரியுமா? இவை பொதுவான நிபந்தனையாம்.. எல்லா மாணவிகளுக்கும் உரியதாம்...

1. கறுத்த ஹபாயாவுடன் old fashion  லேஸ் வைத்த ஸ்காப் கறுப்போ வெள்ளையோ மட்டுமே அணிய வேண்டும். அத்துடன் ஸ்காபிற்கு 5 pin குத்த வேண்டும். அதை ஒவ்வொரு நாளும் எண்ணுவார்களாம்.

2. old fashion  செருப்பு அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் குதி உயர்ந்த் செருப்பு அணியவே கூடாது.

3. எக்காரணம் கொண்டும் குடை பிடிக்க கூடாது. எடுத்து வரவும் கூடாது.

4. மட்டையிலான 5 ரூபா பெறுமதியான பைல் உடன் 2 வெள்ளை பேப்பர் மட்டுமே எடுத்து வர வேண்டும்.

5. ஒரு பேனை மாத்திரமே எடுத்து வர முடியும். அதற்கு முக்கியமாக மூடி இருக்கவே கூடாது.

6. மாணவர்கள் வீட்டிலிருந்து வருவதாயினும் பகலுணவு எடுத்து வர கூடாது. Canteen ல் மட்டுமே சாப்பிட வேண்டும்.

7. மாணவிகள் கைப்பை எடுத்து வர முடியாது. காசை கையிலேயே எடுத்து வர வேண்டும்.

8. மாணவிகள் கைலேஞ்சு பாவிக்க முடியாது.

இவ்வாறு இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சிரேஷ்ட  மாணவர்களிடம் இது சம்பந்தமாக விசாரித்த போது மேலும் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் வெளிவந்தன. பகடிவதையில் கூடுதலாக ஈடுபடுவது வீடுகளில் இருந்து வரும் பெண் மாணவிகள் தானாம். அத்தோடு அவர்கள் மாணவிகளுக்கு வேப்பிலை, மருந்து வகைகளை உண்ண கொடுப்பதாகவும் அறிய முடிந்தது. 

அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள senior களுக்கும் தனித்தனியாக அவ்வூரை சேர்ந்த இளைய மாணவர்கள் இணைந்து party  வைக்க வேண்டுமாம். அதிலே ஆண் மாணவர்கள் முன்னால் பெண்மாணவிகள் பாடி ஆட வேண்டும். இது தான் தற்போதைய நிலை. எங்கே செல்கிறது நமது முஸ்லிம் பெண் குலம்.? 

தாய்  தந்தை பிள்ளைகளை பல்கலைக்கழகம் சென்று படித்து வா என்று சொல்லி அனுப்பினால் மாணவிகள் செய்யும் கேலிக்கூத்து எத்தனை பெற்றோருக்கு தெரியும்? ஒரு சமூகத்தில் படித்து நண்ணெறி உடையவராக வருவார்கள் என நினைத்து பெற்றோர்இ பாடசாலை, சமூகம் என அனைவரும் எதிர்பார்த்திருக்கும் போது மாணவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் தகர்த்து  இஸ்லாத்தையும் புதைக்கிறார்கள்.

தனது இளைய மாணவர்கள் என்றால் அவர்களுக்கு தன்மானம்இ சுய மரியாதை இல்லையா? மாணவிகளே இவ்வாறான கேவலமான செயல்களை செய்ய உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? நீங்கள் யாராவது ஒருவரை அவமானப்படுத்தினால் அல்லாஹ் நிச்சயமாக உங்களை அவமானப்படுத்துவான். பாதிக்கப்படும் மாணவிகளின் துஆவிற்கு நீங்கள் பயப்படவில்லையா?

பொது பல சேனா சிங்கள ராவய ஹெல உறுமய போன்ற தீவிரவாத அமைப்புக்கள் ஹிஜாபுக்கு எதிராக பேசும் இத்தருணத்தில் நீங்கள் அதற்கு எண்ணெய் ஊற்றுகிறீர்களா? இவ்வாறான வேலைகளை நீங்கள் செய்வீர்களாயின் உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் நாளை மறுமையிலே உங்களுக்கு எதிராக சமூகத்தை காட்டி கொடுத்தவராக உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பான்மை சமூகத்தவர்கள் முண்ணிலையில் இஸ்லாமிய முண்மாதிரிகளை காட்டாவிடினும் பரவாயில்லை அதனை கொச்சப்படுத்தாதீர்கள்.

அன்பான பெற்றோர்களே! பல்கலைக்கழகங்களில் படிக்கும் உங்களது பிள்ளைகள் செய்யும் வேலைகளை நீங்கள் அறிவீர்களா? உங்களது பிள்ளைகளை கவனிக்கிறீர்களா? முஸ்லிம் பெண் பிள்ளைகள்தான் இங்கே கூடுதலாக பகடிவதை செய்பவர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பகடிவதையில் உங்கள் பிள்ளைகள் கைது செய்யப்படக்கூடும். அதற்கான உயர்கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை இங்கு கிளிக் செய்து பாருங்கள். http://www.ugc.ac.lk/attachments/706_Circular919t.pdf

எனவே இந்த விடயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், பல்கலைக்கழக நிருவாகம், புத்திஜீவிகள், சிவில் சமூகம் இணைந்து பகடிவதையற்ற  சகோதரத்துவமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்க முன்வர வேண்டும். அத்துடன் அங்கே நடைபெறும் பகடிவதை உடனுக்குடன் இனிமேல் வெளிக்கொண்டு வரப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவும்.



17 comments:

  1. Shame on us. This is the clear proof to know where our younger generation is heading to. I have seen and heard many more stories that even worries from the day one this university was started. It's always true that our people won't appreciate and understand the responsibilities when they get something very easily on their doorstep. Rather than we as Muslims being an example of good manners and ethics, we lack miserably on moral and religious values. This is why we are being targetted and humilitated elsewhere. Unless we correct ourselves, our existence is a question.

    ReplyDelete
  2. DEAR JAFFNA MUSLIM.. enakum SEUSL kidythathu. only 3 weeks than senren.. ithu mattum alla ityum vida miha kevalamaana pahidi vathyhaly enaku seythaarhal.. so,, ivatrukku eedu koduka mudiyaamal veetileye thangi vitten.. ithetkellam ivarhal allah vidathil pathil solliyaaha vendum.. ALLAHU AKBAR..!inru enathu Digree eny ilanthirupathu kaatu miraandi thanamana intha sammanthurai faculty miruhangalin pahidi vathyaalthan..!

    ReplyDelete
  3. ஆமை ஆயிரம் முட்டைகளை விட்டுட்டு சும்மா இருக்குமாம், ஆனால் கோழி ஒரு முட்டையை விட்டுட்டு ஊருக்கே கேட்கும் அளவுக்கு கத்தி திரியுமாம்..

    இந்த கதை போலதான் இன்று எமது பல்கலைக்கழகத்தில் உள்ள சிமுஸ்லிம் மாணவியர்களின் நிலைமை, எதோ நாங்களும் படிக்கிறம் என்பதை காட்டுவதற்கு இவ்வாறான மானம் கேட்ட, முட்டாள்தனமான வேளைகளில் ஈடு படுவது ஒரு வெட்கக் கேடான விடயம்...

    இன்று இந்த பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் ஏனைய மதத்து பெண் மாணவர்களுக்கும் இவர்களும் என்ன வித்தியாசம்?

    முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய உம்மத்தின் அடையாளமாக இருக்கவேண்டுமே தவிர, அதை கேவலப்படுத்தக்கூடாது ..

    ReplyDelete
  4. ஒரு சில மாணவர்களின் முட்டாள் தனமான நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மாணவிகள் சமுதாயத்தையும் குறை கூறும் வகையில் இக்கட்டுரை அமைந்திருப்பது சுட்டிக் காட்டத்தக்க விடயம்.
    மேலும் மாணவிகள் மாத்திரமே அதிகமாக பகிடிவதையில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் தவறான கருத்து.
    நான் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது ஒரு வருட கற்கை நெறஇயினைப் பூர்த்தி செய்துள்ள மாணவி என்ற வகையில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்பஉகிறேன்.

    ReplyDelete
  5. இதுதான் படித்த சமூகம் இங்கு மட்டும் அல்ல இந்த நாட்டில் உள்ள அணைத்து பல்கலைகழகங்களின் நிலை இதுதான் படித்துவிட்டு நல்ல கொழுத்த சீதனத்தில் வாழ்கையில் செட்டாகி விடுவார்கள் பிறகு அவர்கள் படித்தவர்களாம் வைத்தியர்கள் எஞ்சினியர்கள் பட்டதாரிகளாம் அவர்கள்தான் சமூகத்தின் புத்திஜீவிகளாம் சமூகத்தை வழிநடத்த தகுதியானவர்களாம்??? ஸுபுஹானல்லாஹ் இவர்களின் வழி நடத்தல்கள் எப்படி இருக்கும்???

    ReplyDelete
  6. மற்ற இனத்தவர்களுடன் நாம் போராடிக்கொண்டிருக்கும் இதறுவாயில் தாய் தகப்பன் கஸ்டப்பட்டு உழைத்து பிழ்ழைகளை படிக்க அனுப்பினால் இப்படிப்பட்ட கேவலமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தனிப்பட்டமுறையில் கொடுக்கும் அடியில் இனிமேல் பகிடிவதை என்ற சொல் கேட்டாலே நடுக்கம் பிடிக்குமளவுக்கு அவர்களுக்கு மாணவர்கள் என்றும் பாராமல் கண்டிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  7. பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதை நாம் நோக்கும் விதத்தில் தான் அதன் அர்த்தம் உண்டு. உண்மையில், மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தையும், விட்டுக்கொடுப்பையும், மூத்த மாணவர்களுக்கு மரியாதை செலுத்தும் குணத்தையும் ஊட்டி மமதை, தன்னலம், அதீத கூச்ச சுபாவம் போன்ற குணங்களை குறைப்பதற்காகவே இருபாலாருக்கும் இவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இதை நாம் பகிடிவதையாக மாத்திரம் பார்த்தால்தான் தப்பு. நாம் பகிடிவதையை ஆதரிப்பவனோ, அதற்கு எதிரானவனோ அல்ல. ஆனால், இது பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு துணைக்கலாசாரம். எத்தனையோ மாணவர்கள் கூச்சசுபாவம் இழந்து, மமதையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுடனும் சுக துக்கங்களில் கலந்து கொண்டு, விட்டுக் கொடுப்புடன் நடப்பதற்கு இது துணைபுரிந்துள்ளது என்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள். நீங்கள் சொல்லும் இஸ்லாமிய கலாசார விழுமியங்களுக்கு இந்த நடைமுறையால் எவ்வாறான தடைகள் ஏற்பட்டுள்ளன என்பதை சொல்லுங்கள். ஒரு விடயத்தை எதிர்க்கோணத்தில் மாத்திரம் ஏன் பார்க்கின்றீர்கள்? என்னைப் பொறுத்தவரை இந்த பல்கலைக்கழக நடைமுறை பலரில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர, நீங்கள் சிந்திப்பதைப் போல் நமது கலாசாரம் சீரழிவதற்கு இடமளிக்கவில்லை. இது மாணவர்களின் வேறுபாடுகளைக் கலைந்து ஒற்றுமையுடன் செயற்பட வழிவகுக்கின்றது என்பது எனது அபிப்பிராயம்.

    ReplyDelete
  8. சகோ,பாத்திமா சமீகா,நீங்கள் கவலைப்படக்கூடிய தருணம் இதுவல்ல.கவலையோடு படிப்பை விட்ட சமூகம்...

    ReplyDelete
  9. உண்மையான தகவல், a shame to the whole muslim community,

    ReplyDelete
  10. A shame to the whole muslim community

    ReplyDelete
  11. காரிஸ் உங்க அனுபவமா இது ஆண்களின் முன்னே பெண்களை ஆடவைத்து மகிழ்வது இஸ்லாமிய கலாசாரமா ஆண்களை நிர்வானமாக்கி உடல் முழுக்க சிக்னல் பூசி அடுத்தவனை அதனை நக்கவைப்பது இஸ்லாமிய கலாசாரமா??? கூச்சம்,வெட்கம்,இஸ்லாமிய ஈமான்ய பண்பு அதனை போக்கவைக்க நீயார்??? மனிதர்கள் வேற்றுமையில்தான் இருப்பார்கள் மனதையும் பெருமையும் இருக்கவே செய்யு அது ஈமானை கொண்டுதான் மாற்றமடையுமே ஒழிய இந்த இழி செய்லகளை கொண்டல்ல நிர்வானமாக்கி மகிழ்வதட்கு பெயர் பகிடி வதையா வெக்க கேடு இதையெல்லாம் வக்காலது வாங்க ஒரு கூட்டம் சீ,,சீ,,, முகத்திலேயே காரி உமிழனும் இந்த ஜென்மங்களுக்கு

    ReplyDelete
  12. சகோதரி சமீஹா! ஏன் அந்த சில மாணவர்களை பல மாணவர்கள்(நீங்கள் சொல்வது போல்) தடுக்க முடியாமல் போகிறது? திராணியற்ற முஸ்லிம் மஜ்லிஸையா நீங்கள் வைத்துள்ளீர்கள்?உங்களால் முடியாது என்றால் முஸ்லிம் சமூகம் தடுத்து நிறுத்தும்.

    ReplyDelete
  13. சகோதரர் ரமீஸ்: நபியவர்கள் காட்டித்தராத, கண்டுபிடிக்காத காரியங்களை செய்கிறீர் போல..... வெட்கம் போக்க பாடவிதானத்தில் நிறையவே உள்ளது. ஏன் புதிதாக இஸ்லாம் ஏற்றவர்களுக்கு பகடிவதை செய்து சகோதரத்துவம் வளர்ப்பீர்கள் போல?

    ReplyDelete
  14. intha katuriyeal unmaiyai vida poi thaan athiham.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைகும் இங்கு சொல்லப்பட்ட விடயம் எந்த விதத்திலும் உண்மைகிடையாது. ஏனெனில் நானும் தற்பொழுது இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என்ற அடிப்படையில் இந்த செய்தியை முற்றாக மறுக்கிறேன். இங்கு சொல்லப்பட்ட விடயம் சுமார் 5வருடங்களுக்கு முன்னால் நடந்த செய்தியாகும். இப்பொழுது இது போன்ற எந்த விடயமும் நடப்பதில்லை. நடப்பதற்கு சந்தர்ப்பமும் வாய்ப்பும் கிடையாது. இப்பல்கலைக்கழக நிருவாகமும் இதனை முழுமையாக தடைசெய்துள்ளது. இக்கட்டுரையை வரைந்த சகோதரர் தான் சொல்லும் செய்தி உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அதனை வரையவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் தற்பொழுது முஸ்லிம்களுக்கு நடக்கும் விரோத செயற்பாடுகளுக்கு மத்தியில் காட்டிக்கொடுக்கும் வகையில் இவ்வாறான ஒரு கட்டுரை தேவைதானா சகோதரரே சற்று சிந்தியுங்கள். எம் முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  16. சானியா! அல்லாஹ்வின் பெயரை கொண்டு கூறுங்கள் இவ்வாறான விடயங்கள் நடைபெறவில்லை என்று? கடந்த 19.03.2013 அன்று இதில் குறிப்பிட்ட விடயங்களில் 3/4 நடைபெற்றுள்ளது. இன்னும் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் குறிப்பிடவில்லை. உங்கள் மஜ்லிஸ் தலைவரிடம் நான் உடனடியாக இது குறித்து முறைப்பாடு செய்தேன். இனிமேல் பொலீஸிலும் உங்களது SSC யிடமும் உயர் கல்வி அமைச்சிலும் உடனடியாக முறைப்பாடு செய்யப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.