நீதிபதி வரும்போது எழுந்து நின்றதை இழிவாக உணர்ந்தேன் - முன்னாள் ஜனாதிபதி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் பதவி இழந்த பின், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்து இருந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தான் திரும்பினார்.
முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்று உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக முஷரப் இன்று சிந்து மாகாண ஐகோர்ட்டுக்கு வந்தார். அவர் ஜாமீனை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க அனுமதி கேட்டு இருந்தார். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்நிலையில் அவர் இன்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது வாழ்க்கையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்தது இதுவே முதல் முறை. அந்த நேரத்தில் எனது உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், வெளிப்படையாகக் கூற வேண்டும். நீதிபதி வரும் போது எழுந்து நிற்க வேண்டும் என்ற விதியை பின்பற்றியபோது, அவமானமாகவும் இழிவாகவும் உணர்ந்தேன்.
ஆனால் அதற்கு பின், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்று நான் சொன்னதை நினைத்துக் கொண்டேன். எனக்கும் இது பொருந்தும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
ஷூ எறியப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. எதுவும் என் மேல் விழவில்லை. நான் அந்த சம்பவத்தை பார்க்கக் கூட இல்லை. யார் எரிந்தது என்பதும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment