Header Ads



பைபிளில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு..!


(நிதுர்) சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.

போப் பெனெடிக் XVI பார்க்க விரும்பிய, கடந்த 12 ஆண்டுகளாக துருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் கோஸ்பல் பரனபாஸ் என்பவரால் எழுதப்பட்ட பைபிள் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

தங்க எழுத்துக்களால் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பைபிள், 2000 ஆம் ஆண்டு துருக்கியில் ஒரு கடத்தல் நடவடிக்கையின்போது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆரம்ப கால போதனைகளில் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பிரபல மேற்கத்திய ஆங்கில நாளிதழ் டெய்லி மிர்ரர் - DAILY MIRROR செய்தியாக வெளியிட்டுள்ளது.

2100ஆம் ஆண்டுவரை காவலர்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் அதற்குப்பிறகு அங்காராவிலுள்ள (ethnographic museum) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கையால் எழுதப்பட்ட அந்த நூலின் ஒருபக்கத்தின் ''ஜெராக்ஸ் காப்பி''யின் மதிப்பு 1.5 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

கோஸ்பல் எழுதிய இந்த பைபிள் இஸ்லாமுடன் தொடர்புடையதாக இருப்பதால் கிறிஸ்தவ தேவாலயங்கள் அதனை அடக்கி வைத்தன என்கிறார் துருக்கியின் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சர் எர்த்துக்ருல் குனே.

மேலதிக விபரங்களுக்கு இங்கு இடம்பெற்றுள்ள ஆங்கில தகவல்களை பார்வையிடவும்.





5 comments:

  1. Plrasr every body must analyse these matter particularly cristianity peopleotherwise you will have great loss


    ReplyDelete
  2. Ok why don´t publish this old bible?Why should hide somewhere?

    ReplyDelete
  3. LET SOMEONE TAKE THE INITIATIVE TO PUBLISH THIS BIBLE FULLY AS IT IS IF THIS NEWS IS TRUE!

    ReplyDelete
  4. "இருக்கிறவரும் இருந்தவரும் இனி வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர், நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்" வெளி 1:8
    யூதர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்:
    அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார். யோவான் 8:58.
    இந்த மேற்கோள்கள் எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது ஏனென்றால் முகமதுவும் இதை போல "நான் எல்லா படைப்பிற்கும் முந்தினவன் மற்றும் கடைசி நபியாக இருக்கிறேன் (I am the beginning of all creation and the last prophet)." என்று கூறியிருந்தார்.

    மேலும் "ஆதாம் கலிமண்ணால் உருவாக்கப்படும் போதே நான் அல்லாவின் நபியாக இருந்தேன் (I was a prophet of Allah while Adam was still being molded in clay)." என‌ கூறுகிறார்.

    எல்லாவற்றுக்கும் மேலாக நியாயத்தீர்ப்பின் நாளில் இஸ்லாமியர்களுக்காக பரிந்து பேசுபவராகவும் முகமது தன்னைப் பற்றி கூறிக் கொள்ளுகிறார். தானே கடைசி தீர்க்கதரிசி மற்றும் இரட்சகர் என்று கூறுகிறார்.

    இந்த காரியங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தின ஏனென்றால் முகமது தன்னை இரட்சகர் என பிரகடப்படுத்தினால் பின்னர் இயேசு என்பவர் யார், அவரும் தன்னை இரட்சகர் என்று அல்லவா கூறுகிறார் என எண்ணினேன். இரண்டு மீட்பர்கள் இருந்தால் ஏதோ ஒன்று நிச்சயம் பொய்யாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான் மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவோ அல்லது முகமதுவோ ஆக இரண்டுபேரில் ஒருவர் தான் மீட்பராகவோ அல்லது பரிந்துபேசுபவராகவோ இருக்க முடியும். பைபிள் அல்லது குர்‍ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இரண்டில் ஒன்று சுத்த தங்கம் மற்றொன்று போலி ஆனால் எது?


    Read more: http://waytoheaven2011.blogspot.com/2012/07/blog-post.html#ixzz2OAfKTUL6

    ReplyDelete
  5. அலாஹ் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தனது தூதர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான்.அந்த வரிசயிலயே ஈசாவும்,முஹம்மதும் தூதர்களாவர்.ஈசாவுக்கு பிறகு இறுதியானவராக வந்தவர்தான் முஹம்ம்த்.ஒரு தூதருக்கு பின்னால் இன்னொரு தூதர் வந்தால் முந்திய தூதரின் வழிகாட்டி நூலை பின்பற்ற முடியாது.அது வழக்கொழிந்து போய்விடும்.இதுவே அல்லாஹ்வின் போதனை.இந்தெ வகையில் இறுதி வேதம் அல் குரான் இதனயே ஈசாவும் உறுதி செய்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.