Header Ads



யாழ்ப்பாணத்தில் காசோலை மோசடி அதிகரிப்பு - பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் ஜெப்ரி


யாழ். மாவட்டத்தில் காசோலை மோசடி தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார்.  யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வாரம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதிப் பகுதியில் இரண்டு இலட்சம் ரூபா காசோலை மோசடி செய்துவிட்டு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன்  வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவில் 8 இலட்சம் ரூபா காசோலை மோசடி செய்ததாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த கால புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் காசோலை மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. எனவே காசோலை கொடுத்து வாங்கும் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.