Header Ads



முசலிக்கு தனியான குடிநீர்த்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்..!


(முசலியூர் கே. சி.எம்.அஸ்ஹர்)


மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் குடிநீர்ப்பிரச்சினை காணப்படுகிறது. உ.ம்  4ம் கட்டை, சவேரியார்புரம், சிலாவத்துறை, கூளாங்குளம், வெளிமலை, மறிச்சுக்கட்டி , பாலைக்குளி ,வாரிவெளி, அரிப்பு இப்பிராந்தியத்தில் நிலத்தடிநீரையே பெரும்பாலான மக்கள் ஆழ்கிணறுகள் முலமாகப் பெற்றுக்கொள்கின்றனர்.கோடைகாலங்களில் கிணறுகள் வற்றுதல் மாரிகாலங்களில் வெள்ளப்பெருக்கு போன்றவற்றாலும் நீர்மாசு ஏற்படுகின்றது

கிராமங்களில் கிணற்றுநீர் உவர்த்தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது.இந்நீரைக்கொண்டு குளிக்கவோ, ஆடைகளைக்கழவவோ  குடிநிர்ப்பிரச்சினையைத்  தீர்த்துக்கொள்ளவோ முடியாதநிலை காணப்படுகிறது. இவ்வாறான கிராமங்களுக்கு முசலிப்பிரதே சபைத்தலைவர் தேசமான்ய  அ.வ.எஹ்யான் அவர்களின் வழிகாட்டலில் பௌசர்கள் முலம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள கிணற்றுநீர்களில் இரசாயனப்பொருட்கள் கலந்திருக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.இங்கு நீரைச்சுத்திகரித்துப் பாவிக்கும் எவ்விதப்பொறிமுறையும் இல்லை.நீரின் முலம் தொற்றக்கூடிய நோய்களைத்தடுக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

சுத்தமான குடிநீர் வழங்கப்படின் இங்குள்ள பெண்கள் பாடசாலைச்சிறார்கள்  முதியோர்கள் போன்ற அனைவரும்  நன்மையடைவர் என்பது தெளிவு.

No comments

Powered by Blogger.