Header Ads



விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அறிக்கை



(அப்துல்சலாம் யாசீம்)

நமது நாட்டில் உள்ள சட்டங்கள்' சீர் செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிறை தண்டனையை எதிர்கொள்வது மிகவும் குறைவு மாறாக அவர்கள் சிறை செல்லும் முன்பே முன்கூட்டிய பினையை பெற்றுக் கொள்கின்றனர்.இந்த நிலை மாறவேண்டும் என ச்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.2013 விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில் இடம் பெற்ற ஊடகவியளாலர் மாநாட்டின் போது இங்கு வெளியிட்ட ஊடக அறிக்கையில் 

-விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும்  திருகோணமலை பெண்கள் சமாச பிரதிநிதிகள் தெரிவித்தனர் அவர்களால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு-

சர்வதேச மகளீர் தினமானது ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 8ம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு கடந்த நூற்றாண்டுகளில் பெண்கள் எடுத்த முயற்சிகளின் வெற்றியையே இன்று பல பெண்கள் அனுபவிக்கின்றோம்.

பெண்களின் உரிமைகள் மற்றும் சம வாய்ப்புக்கள் பற்றி கதைப்பதற்கும், கொண்டாட்டங்களுக்கும் உரிய ஒரு நாளாக மட்டும் இதைப் பார்ப்பதை பெண்கள் எவருமே விரும்பமாட்டார்கள். அதற்கு மாறாக, பெண்கள் எப்போதுமே தன் நிலையையும் தான் அடைய வேண்டிய வெற்றியை பற்றி சிந்திப்பவளாக அதனை நோக்கி செயற்படுபவளாக இருக்க வேண்டியதே இன்றைய தேவை.

ஆனால் இன்றைய நிலைமை என்னவென்றால், பெண்களின் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஒரு சில அரசார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே செயற்படுவதும் அவர்கள் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் நம்மில் பலர் மனதில் ஆழ வேருன்றிய விடயமாகி விட்டது.

இன்று உலகலாவிய ரீதியில்16 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகள் ஜம்பது வீதமானோர் பாலியல் துஷபிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும் 603 மில்லியன் பெண்கள் உலகலாவிய ரீதியில் வீட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.இதனைவிட 70 வீதமான பெண்கள் தமது வாழ் நாளில் ஏதேனும் ஒரு முறையாவது உளவியல் தாக்கத்தை அல்லது பாலியல் வன்முறைக்கு முகம்கொடுத்திருப்பார்.என பல்வேறு ஆய்வுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. 

இன்நிலையில் கடந்த 11ம் மாதம் ஓடும் பஸ்ஸில் ஆறுபேரினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட டெல்லி மாணவியின் சம்பவம் மற்றும் தொழிலுக்காக சவுதி சென்று சிறைச்சேதம் செய்யப்பட்ட மூதூர் றிசானா நபீக் மற்றும் அன்றாடம் நமது வைத்திய சாலைகளுக்கு வரும் சிறுமிகளுக்கு எதிரான மிலேட்சத்தனமான வன்முறைச் சம்பவங்கள் நமக்கு சான்றாக உள்ளது. 

இலங்கையில் யுத்தம் முடிவடைந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குறைந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களாகியும் இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லையே குழந்தை முதல் முதியவர் வரை நாளுக்கு நாள் வன்முறைக்கு  உள்ளாவதை நம்மால் அவதானிக்க முடிகிறது. 

' பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை முற்றிலும் நிறுத்துவதற்கான ஒரு நேரம் ' என்பது இந்தாண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மையக்கருத்து.  

யார் இதனை முன்னெடுப்பது? என்ற கேள்வி மீண்டும் மனதில். எழுகிறது இதற்கு நமது 

 யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும்  பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரணம் மற்றும் நஸ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும் இவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.போன்ற விடயங்கள் அமுல்படுத்துவதன் மூலமே எமது நாட்டின் பெண்களின் நிலையில் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.என இவ் ஊடக அறிக்கை அமைகிறது.



No comments

Powered by Blogger.