Header Ads



ஊருக்கொரு அஷ்ரப் இருந்தால் பீதி ஏனடி..?


(Bahurudeen Jasa)

எம் நாட்டில் தற்காலத்தில் நடந்து வரும் இனஒடுக்கல் மெதுமெதுவாக  சர்வதேசத்தை நோக்கி மணம் வீசத்தொடங்கும் இத்தருணத்தில் நாங்கள் எதைக்களைய வேண்டும், என எழுதிய நான் இன்று உங்களுக்கு தெரிந்தவற்றைக்கொண்டே யாரை நாங்கள் வேண்டி நிற்கிறோம் என்பதை எழுதவுள்ளேன்.

ஒரு நாட்டின் சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் இதில் நாங்கள் வைத்திருக்கும் அங்கத்துவம் கிட்டத்தட்ட இருபது. இவை இருபதின் இயலாமையையோ, அல்லது போனால் சாதனைகளையோ ஊடகங்கள் இகழ்ந்தும், புகழ்ந்தும் புதினங்களை வெளியிடும் இக்காலகட்டத்தில் எதிர்கால சட்டஇயற்றுனர்கள் நிலமை என்ன? அவர்கள் எங்கே ? அவர்களையும் சமூகம் நிகழ்காலத்தில் உள்ளவரைப்போன்று காணுமா? இல்லாவிடில் வேண்டிநிற்பது யாரை? என்பதை எனது  சிறிய அறிவுக்குட்பட்ட வரை எடுத்தியம்பலாம் என நினைக்கின்றேன்.

நாங்கள் கடந்த 2000ஆம் ஆண்டு ஒர் மாமனிதரையும் இழந்தோம். அம்மனிதரின் சாணக்கியத்திறனையும், சமூகப்பற்றையும், இனவுறவுகளைப் பேணும் முறமையையும், பெற்றுத்தந்த உரிமைகளையும் நன்கு தெரிந்துள்ளோம். இந்நிலமையில் ஒவ்வொரு முஸ்லிம் ஊரும்  அவரின் மீள் உருவாக்கத்தை வேண்டி நிற்கிறது.

இன்று பேரினவாத அமைப்பின் பலம் எங்களின் பலவீனமாகவுள்ளது என்பது மறுப்பற்ற உண்மை. அவ்வமைப்புகள் எது நாட்டின் சக்தியை தீர்மானிக்கப்போகின்றதோ அதை தங்களுடய அம்புகளாக எடுத்துள்ளத்து.எமது சமூகத்தில் அந்த அம்புகள் திட்டமிட்டு உறக்கச்செய்யப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக பொதுபலசேன அமைப்பு தனது காடைத்தனமான மற்றும் இலக்கு நோக்கிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் இளைஞர்களை உள்வாங்கி திட்டமிட்டு செயற்படுத்துவதை காணலாம்.

முஸ்லிம் இளைஞர்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டோருக்கு தற்போது நாட்டில் எதை நோக்கி பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்கின்றன, எந்த நோக்கத்தை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்பது சற்றுந்தெரியாமல் இருக்கின்றது என்பது வருந்தத்தக்கது.அதேநேரம் பிரச்சினைகள் பற்றி தெரிந்த இளைஞர்கள் அதனை இளைஞர்களுக்கு மத்தியில் கொண்டுசெல்ல கிராக்கி அற்றவர்களாகவும் இருப்பது எதிர்கால சமூகத்தின் பலவீனத்தை காட்டுகிறது.

எம்சமூகம் பல அஷ்ரப்களை இளைஞர்களுக்கு மத்தியில் புதைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் இன்றை வரை வெளி வந்தது ஒரே ஒரு அஷ்ரப்f  மாத்திரமே. புதிதாக அஷ்ரப்fகள் வெளிவராத பட்சத்திலும் தற்போதுள்ள நிலவரம் குறித்து சமயோசித சிந்தனை கையாளப்படாத பட்சத்திலும் நாங்கள் பர்மா முஸ்லிம்களின் வரலாறை தனதாக்கிக்கொள்வோம் என்பதில் சற்றும் ஐயமில்லை.

காலத்தின் கட்டாய தேவை கருதி ஊர்களில் உள்ள புத்திஜீவிகள் உடனடியாக கூடி எந்தவிதமான அரசியல் இலாபங்களையும் எதிர்பாராது ஊருக்கோர் அஸ்ரப் வெளிக்கொணருவோம்..!!


1 comment:

  1. நல்லதொரு அபிப்பிராயம் தந்தமைக்கு நன்றி. ஆனால் எல்லோருமே நான் தான் அந்த அஷ்ரப் என்று சொல்லி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.