Header Ads



நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம் (படங்கள்)



(சுலைமான் றாபி + ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரர் மொஹான் விஜே விக்ரம அவர்கள் இன்று 26.03.2013ம் திகதி செவ்வாய்க்கிழமை நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வீதியின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தார் 

நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் வை.எல்  சுலைமா லெப்பை அவர்களின் முயற்சியின் கீழ் JICA திட்டத்தின் நிதி ஓதிக்கீட்டு அனுசரணையுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள  நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வீதியின் நிர்மாணப்பணிகளை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம் எஸ்  உதுமாலெப்பை, அமைச்சின் செயலாளர் ஏ.எம்  அன்சார், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வீ . கருணா நாதன்,   நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு அப்துல் ஜலீல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்  தாஹிர், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம் றியாஸ், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அதாஉல்லா அவர்களின்  இணைப்புச்செயலாளர் அல் ஹாஜ் எம்.ரி.எம் முனீர்,  நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி  எஸ்.எல்.எம் சலீம் மற்றும் நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி பாடசாலையின் பிரதி அதிபர் எம் அச்சி முகம்மட் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பொது மக்கள் என அனைவரும்  கலந்து சிறப்பித்தனர். 


No comments

Powered by Blogger.