Header Ads



பொதுபல சேனா பௌத்ததேரர் முஸ்லிம் கடையில் பெருமளவு பொருள் கொள்வனவு


(இ. அம்மார்)

குருநாகல் மாவட்டத்தில் பொதுபல சேன அமைப்பின் தீவிர ஆதரவாளராக செயற்பட்ட பௌத்த தேரர் ஒருவர் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் பெருந்தொகையான கட்டடப் பொருட்கள் கொள்முதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பௌத்த தேரர் பௌத்த விஹாரைக்கு கட்டடப் பொருட்கள் வாங்குவதற்காக முஸ்லிம் வர்த்தக நிலையம்  சென்று அந்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் பொருட்களின் விலை சம்மந்தமாக உரையாடியுள்ளார்.

அந்த முஸ்லிம் வர்த்தக நபர் தற்போதைய சூழலைக் கருத்திற்கு கொண்டு அங்கு வருகை தந்த தேரரை மிக அன்புடன் வரவேற்று மிக்க மரியாமையுடன் அவரை அமரச் செய்து நல்ல பண்புடன் நடந்துள்ளார். 

அந்த தேரர் விஹாரைக்கு கட்டடப் பொருட்கள் தேவை எனக் கூறியதும் அக்கடை வியாபாரி  தான் பெற்ற விலையிலிருந்து எந்த இலாபமும் அறவிடவில்லை எனவும் தன்னுடைய வியாபாரத்தின் உண்மைத் தன்மையையும் அவருக்கு  நன்கு விளக்கியுள்ளார். அதன் பின்  அக்கடையில் அந்த தேரர் இலட்சக் கணக்கில் பொருட்கள் வாங்கி சம்வம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இது போன்று நமது முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் எமது முஸ்லிம்கள் நடந்து கொண்டால் முஸ்லிம்களுக்கு எதிராக தீய எண்ணத்துடன் செயற்படும் பௌத்த தேரர்களின் மனதை மிக இலவாக வெற்றி கொள்ள முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை

நன்மை  கருதி இடம் கடை என்பவற்றை சுட்டிக்காட்டவில்லை.

10 comments:

  1. This is the way Prophet (SAL) taught to us. May Allah bless that particular business man.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்!
    Assalamu Alaikkum WW!அன்பான சகோதரர்களே,
    நாம்,நமது எல்லா காரியங்களிலும் இது போன்று தான் நடக்க வேணும், மார்க்கத்துக்கு முரணாகாதவாறு, விட்டுக்கொடுப்புடனும்,மரியாதையாகவும் உதவி மனப்பான்மையுடனும் நடந்து கொண்டால் INSHA ALLAH அந்நிய மதத்தாரும் நமது மார்க்கத்தை தழுவ சந்தர்ப்பம் அதிகரிக்கும்.

    ReplyDelete
  3. This type of approach only needed not only temporarily but fore ever for any worship places we also mu do our contribution generously easy you can win their heart due to jealous of business some Sinhala business proprietors only created this type of situation by organising and funding to BBS and others
    Congratulations and our best wishes try to be everyone as pioneer like this real Muslim gentleman

    ReplyDelete
  4. முஸ்லிம் மக்களின் நன்மை குருதி செயற்பட்ட இந்த வியாபாரியுடைய செயலை அல்லாஹ் ஏற்றுக்கொள்வகனாக! அல்லாஹ் அந்த வியாபாரிக்கு பரகத் செய்வானாக! அவருக்கு பல மடங்கு அதிகரித்துக் கொடுப்பானாக!

    ReplyDelete
  5. இலாபம் அறவிடாமல் விற்பனை செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. குறைந்த இலாபத்தில் விற்றிருக்கலாம்.

    1.வியாபாரம் என்பதால் இலாபமில்லாமல் விற்க வேண்டிய அவசியமும் இல்லை. அது குறித்து யாரும் கேள்வியும் கேட்க முடியாது.
    2.நாளை இன்னொரு சிங்கள சகோதரரை அனுப்பி பொருள் வாங்கிவிட்டு "பார்த்தீர்களா சிங்களவர்களுக்கு அதிக விலையில் விற்கிறார்கள். எனக்குப் பயத்தில் (முஸ்லிம்களுக்குக் கொடுக்கும்) குறைந்த விலையில் தந்தார்கள்" என்று கூறினால் என்ன செய்வீர்கள்?
    3.இவ்வளவு சிங்கள சகோதரர்களின் கடைகள் இருந்தும், அவர் ஒரு இனவாதியாக இருந்தும் எதற்காக இங்கு வர வேண்டும்?
    a. ஒன்று நமது பயத்தைப் பயன்படுத்தி குறைந்த விலையில் பொருட்கள் வாங்க எத்தனித்திருக்கலாம்.
    b. அல்லது முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதற்கு இந்த கைங்கரியத்தை செய்திருக்கலாம்.
    4.மேற்கூறிய எல்லா மாங்கைகளையும் ஒரே கல்லில் அடிக்கக் கூட வாய்ப்புண்டு.

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சகோதரர்களே;
    நமது "நியாயமில்லாத பயம்" நம்மை மேலும் மேலும் இக்கட்டுக்கே கொண்டு செல்லுமே ஒழிய வேறெந்தப் பயனையும் தராது. நாணயமான வியாபாரியாக இருங்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யுங்கள். அது பிரச்சினை இல்லை. ஆனால் இது போன்ற மடமைகள் நம்மை வம்பில் மாட்டிவிடும். மியன்மாரில் நடக்கும் பிரச்சனைகளை உற்று நோக்குங்கள். உங்களுக்குப் புரியும் பிரச்சினைகளின் யதார்த்தம். அங்கும் இங்கும் உள்ள ஒற்றுமை. கதையை நன்றாக இயக்கி கலவரத்தின் பக்கம் இழுத்துச் செல்வார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். இன்றைக்கு கடை அடைப்பதாய் சமயோசிதமில்லாமல் முடிவெடுத்த சகோதரர்கள் போல ஆகி விடாதீர்கள். இவை பொருளாதாரத்தில் அடி வாங்கியுள்ள நம்மை மேலும் மேலும் அடி வாங்க வைக்கும் செயல். இதன் விளைவுகள் எதிரிகளுக்கு "ஐஸ் கிரீம்" கொடுத்த கதை தான்.

    ReplyDelete
  6. 100 வீதம் உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன் காரணம் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் நடந்து கொள்ளும் முறைகேட்டால் அனைவரும் பாதிக்கப்படுகின்றார்கள்
    உதாரணத்துக்கு அடுலுகம போன்ற பகுதிகளில் இருந்து சிங்கள ஊர்களில் போய் அப்பாவி சிங்களவர்களை ஏமாற்றும் சில முஸ்லிம் வியாபாரிகள் பல வருடங்களாக இருக்கின்றார்கள் வெட்கம் ஜும்மா தினத்தில் பள்ளிவாயலுக்கு முன் வழமையாக சில சிங்கள சகோதர சகோதரிகள் இருப்பதை அவதானிக்களாம் காரணம் தம்மை ஏமாற்றியவர் எப்படியாவது வெள்ளிக்கிழமையில் அகப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் ஆனால் அவர் பின்னால் போய் விடுவார்
    இவ்வியாபாரம் சம்பந்தமாக ஒரு முஸ்லிம் சகோதரர் சில வருடங்களுக்கு முன் அடித்துக் கொள்ளப்பட்டார் என்பது ஊா் அறிந்த விடயம்

    ReplyDelete
  7. Romba santhosam than but evvalvo seithittom ennamum seigirom ethatku piragum seyvom evvalvuthan seithalum PBS kum Mr. Champikai kum Moola thirappaduthu ellaye Sari ellurum dua seyvom evargalukku nat panbukagavum, Mmelana HIDAYATHU kagavum allah udavi seyvanaga evarud entha sathaka vai kondavathu engada nattil ottrumai yodu valvathatku

    ReplyDelete
  8. Simply we have give free stuff to stay in motherland.... Wow

    ReplyDelete
  9. Excellent job. We respect you and hope all our brothers will do the same!

    ReplyDelete
  10. SO.... U MEAN BEND DOWN SERVE THEM AS THEY PLEASED?....

    ReplyDelete

Powered by Blogger.