Header Ads



பௌத்த கொள்கைக்கு எதிராக போராடும் பொதுபல சேனா..!


(ஆசிரியர் - ஏக்கூப் பைஸல்) 

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார  ஹலால் பிரச்சினைக்கு  அல்குர்ஆனை வாசித்துக்காட்டி பிழையான விளக்கம் வழங்கினார். அவருக்கு நாங்கள் தம்மபதத்தின் படி விளக்கம் சொல்வோம். 

தம்ம பதத்தினை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தலைவர் விமலஜோதி மேலும் பொது பல சேனா தேரர்கள் பிக்குகள் அல்ல பிக்குவேடமிட்டவர்கள். ஏன் ஏனின் அல் குர்ஆனை தூக்கி வாசித்துக்காட்டுவதற்கு முன்னால் அவர்கள்   பௌத்த மதத்தின் அடிப்படையில் செயற்படவில்லை என்பதை தம்மபதத்தின் அடிப்படையில் சிங்களவர்களுக்கும் அந்த அமைப்புக்கும் நாம் விளக்குவோம்.

 பிக்குகள் தம்மபதத்தின் அடிப்படையில் பின்வறுமாறு  இருக்க வேண்டும். 

01.கண்ணை அடக்குவது நல்லது. காதை அடக்குவது நல்லது. மூக்கை அடக்குவது நல்லது நாவை அடக்குவது நல்லது. உடம்பை அடக்குவது நல்லது. வாக்கை அடக்குவது நல்லது. எல்லாவற்றிலும் அடக்கமாக இருக்கிற பிக்வானவர். எல்லாத் துக்கங்களிலிருந்தும் நீங்குகிறார். (தம்மபதம்) 

02 கைகால்களையும் வாக்கையும் அடக்கி, எல்லாவற்றிலும் அடக்கத்தை உடையவராய் தியானத்தில் இன்பம் அடைந்து,திருப்தியாகவும் அமைதியாகவும் தனிமையாகவும் இருக்கிறவர் உண்மையான பிக்கு ஆவர். (தம்மபதம் ) 

03.நாவடக்கம் உள்ளவராய் இனிய சொற்களைப் பேசுகிறவராய் ,அடக்கமுள்ளவராய், தர்மோபதேசங்களைப் பாடம் சொல்லி உரைகூறுகிற பிக்குவின் வார்த்தைகள் இனிமையைத் தருகின்றன. ( தம்மபதம் ) 

04.தர்மோபதேசப்படி நடந்து, தர்மோபதேசத்தில் மனம் மகிழ்ந்து, தர்மோபதேசத்தை என்னேரமும் சிந்தித்துக் கொண்டு, தர்மத்தை மறவாமல் இருக்கிற பிக்கு. உண்மையில் தர்மத்திலிருந்து தவற மாட்டார். ( தம்மபதம் ) 

05. பிக்குவாக உள்ள ஒருவர் தமது சொந்த லாபத்தை அலட்சியமாக எண்ணக்கூடாது.பிறருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப்படவும் கூடாது. மற்றவருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப்படுகிறவர் சமாதி பெறமாட்டார. ( தம்மபதம் ) 

06.பிக்குகளே ! 'நான்' என்கிறதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.அதை நீங்களே நீக்குங்கள் பிறகு, நீங்களே உங்களைக் காத்துக்கொண்டு சுகமாக வாழ்வீர்கள். (தம்மபதம் ) 

07. ஒருவர்தானே தனக்குப் புகலிடமாம், ஒருவர்தானே தனக்கு எதர்கால வாழ்க்கையை நியமிக்கிறார் . ஆகையழனாலே, குதிரை வாணிகர் உயர்ந்த இனத்துக் குதிரையை அடக்குவது போல , நீ உன்னிடமுள்ள 'நான்' என்பதை அடக்கு ( தம்மபதம் ) 

மேற்குறிப்பிடப்பட்ட தம்மபதத்தின் அடிப்படைகளை பிக்குகள் பின்பற்றவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம், கலசாரத்திற்கு எதிராக பிரச்சாரம், வியாபாரத்திற்கு எதிராக பிரச்சாரம், தூய்மையான உணவுக்கு எதிராக பிரச்சாரம், ஏனைய மதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள். இவ்வாரான நடவடிக்கைகளை புத்த தர்மத்தின் படி புத்தர் தடுத்து இருக்கின்றார். 

ஆனால் பொது பல சேனா மற்றும் சில அமைப்புக்கள் மக்களை திரட்டி போராட்டமும், அப்பாவி மக்களுக்கு காலக்கெடுவும் விதிக்கிறது இதன் காரணமாகத்தான் இலங்கையில் பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது . புத்தரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது செயற்படுவதுதானா? 

புத்த தர்மம் சேனா தேரர்களால் பௌத்தம் அழியக் கூடிய சாத்தியக் கூறு இருக்கின்றது. எனவே இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் அமைப்புகளின் தலைவர்கள் முதலில் புத்தரின் கொள்கையினையும். தம்மபதத்தினையும் பின்பற்றுங்கள்.  முஸ்லிம்கள் தம்மபதத்தினை மதிக்கின்றார்கள். பௌத்த மதத்தை பாதுகாக்கின்றோம் என்று சொல்லும் பொது பல சேனா அமைப்பிலுள்ளவர்கள் புத்த தர்மத்தை பின்பற்றாமல் மிதிக்கின்றார்கள். எனவே இலங்கையை இஸ்லாமிய நாடாக மற்ற நினைப்புது முஸ்லிம்கள் அல்ல பொது பல சேனா அமைப்பு . 


6 comments:

  1. Yes, These kind of people ( Mr. champika some Monks) insult and give bad name to Buddha Aagama. If they follow properly the Aagama then they never speaks in a trrible manner.

    ReplyDelete
  2. Why we the Muslim are not trying to convey the Islamic thoughts or the best thoughts of Buddhism about the coexistences and the behaviour with other religion of real Buddhists through Sinhala Medias, posters, hands out or publication because this is a good opportunity that Allah is giving us to expose the Islam and its good practices among other communities and most of noble Singhalese and others are searching for knowing Islam, this is written from my experience

    ReplyDelete
  3. அன்பின் ஆசிரியர் பைசல்அவர்களுக்கு,
    சிறந்ததொரு ஆக்கம். தயவுசெய்து நீங்கள் அல்லது JM ஆசிரியர் சரி இந்த கட்டுரையை பூரணமாக சிங்களத்தில் மற்றும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து தரவும். இவ்வாறன ஆக்கங்களே எமது மாற்று சிங்கள சகோதரர்களுக்கு போய் சேர வேண்டும். தயவு செய்து இதற்கு உதவவும்.

    ReplyDelete
  4. Why we the Muslim are not trying to convey the Islamic thoughts or the best thoughts of Buddhism about the coexistences and the behaviour with other religion of real Buddhists through Sinhala Medias, posters, hands out or publication because this is a good opportunity that Allah is giving us to expose the Islam and its good practices among other communities and most of noble Singhalese and others are searching for knowing Islam, this is written from my experience

    ReplyDelete
  5. Can you please translate in to Sinhala and English.

    ReplyDelete
  6. Please translate above article to English & Sinhala. Pls brother

    ReplyDelete

Powered by Blogger.