Header Ads



ஈராக் மீது போர் தொடுத்தது தவறான செயல் - ஒபாமா


ஈராக் மீது போர் தொடுத்தது சரியான நடவடிக்கை அல்ல என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அங்கு அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொய் கூறிக் கொண்டு போர் தொடுத்தார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.

ஆனால், அங்கு அணு ஆயுதங்களே இல்லை என்பது போர் தொடுத்த சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது. இருப்பினும் சதாம் ஹூசேனை ஆட்சியிலிருந்து அகற்றும் பணியில் இறங்கி வெற்றியும் பெற்றார். பின்னர் போர்க் குற்றங்களைக் காரணம் காட்டி சதாம் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார்.

இந் =நிலையில், போர் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈராக் மீது போர் தொடுத்தது தவறான செயல் என்பதில் அதிபர் பராக் ஒபாமாவுக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அதே நேரத்தில் அமெரிக்கப் படைகளின் தியாகத்தால் ஈராக் இப்போது நல்ல நிலையில் உள்ளது, மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றார்.



2 comments:

  1. நீங்கள் சொல்லுவது உண்மை அப்படியானால் ஜோர்ஜ்புஷ் ஐ உங்களால் தூக்கில் போடமுடியுமா? என்னையா உங்கள் நீதி !

    ReplyDelete
  2. So why dont you take action against him. Not only him who supported for the war UK and other should be punished. When King of the Asia Satham Hussain was ruled the country peace is there but after the war there is no peace because of u America He is the person who can control the country u all killed a the real president who need for IRAQ.

    ReplyDelete

Powered by Blogger.