'முஸ்லிம் சகோதரிகளே தனித்துவத்தை அடையாளப்படுத்த ஹபாயாவை அணியுங்கள்'
(எம்.எம்.ஏ.ஸமட்)
இஸ்லாமிய வரையறையை மீறாது, இஸ்லாம் ஆடையணிவதில் கூறியுள்ள விதிகளுக்கமைய இந்நாட்டில் வாழும் சகல முஸ்லிம் மாதரும் தங்களது தனித்துவத்தை அடையாளப்படுத்தும் ஆடையாக ஹபாயாவை அணியுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொது பல சேனாவின் அண்மைக்கால விசமத்தனமான அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் அவர் முஸ்லிம் பெண்களிடம் விடுத்துள்ள பகிரங்க வேண்டுகோளில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முஸ்லிம்களின் கலை, கலாசார பண்பாட்டு, மார்க்க விடயங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து, முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் அப்பாவி இளைஞர்களைத் தூண்டி, அமைதி நிலவும் இத்தேசத்தில் மீண்டுமொரு அசாதாரண சூழலைத் தோற்றுவித்து, இலங்கை அரசாங்கத்தை சர்வதேசத்தில் தர்மசங்டகடமான நிலைக்குத் தள்ளிவிட பொது பல சேனாவும் அதன் ஆதரவாளர்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்தாலும் முஸ்லிம்களும் இந்ந நாட்டில் சகல உரிமையுடன் வாழக் கூடிய பிரஞைகள். முஸ்லிம்கள் வந்தேறுகுடிகளல்ல. பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் இந்நாட்டிலேயே நாட்டுப்பற்றுடன் வாழ்வார்கள். நாட்டின் தேசிய தனித்துவ இனமென்ற ரீதியில் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுடன் வாழுமு; உரிமை முஸ்லிம்களுக்குண்டு என்பதை பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்துக்கே சவால்விடும் இவர்களின் செயற்பாடுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இத்தகையவர்களின் நடவடிக்கைளுக்கு அவர்கள் வழியில் பதிலளிப்பது பொறுத்தமல்ல. அது நாகரியமுமல்ல. மாறாக இந்நாட்டில் வாழுகின்ற மதங்களையும் மனிதத்துவத்தையும் மதிக்கின்ற மக்களோடு ஒன்றினைந்து அவர்களின் சமூக விரோத நடவடிக்கைகளை ஓரங்கட்டுவதே சரியான பதிலாக அமையும்.
ஹலால் உணவு உண்பதைத் தடுத்துவிட்டோம் என்று மார்பு தட்டி, பெருமை கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பொது பல சேனா இந்த நாட்டு மக்கள் ஆரோக்கியமான, சுத்தமான உணவுண்வதைத் தடுத்து இந்நாட்டு மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளதை உணரவில்லை. இந்த அடிப்படைவாதிகளின் சமூகவிரோத செயல்களை இந்நாட்டு மக்கள் இப்போது உணர ஆரம்பித்துள்ளனர். பெரும்பான்மையான மனித நேயமுள்ள, மதங்களை நேசிக்கின்ற, மத விடயங்களுக்கு மதிப்பளிக்கின்ற மக்கள் உணர்ந்ததன் விளைவாக, இந்த சிறிய கூட்டத்துக்கெதிராக குரல் கொடுக்க முற்பட்டுள்ளனர். 'பொது பல சேனா என்ற அடிப்படைவாத அமைப்பு சொற்ப நாட்களில் மரணித்துவிடும்' என்று பேராசிரியர் தம்பர அமில தேரர் குறிபபிட்டுள்ளதை இதற்கோர் நல்ல உதாரணமாகக் கொள்ளலாம்.
இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாகக் கட்டியெழும்பும் முயற்சியில் ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அத்தகையதொரு ஆற்றலும் திறமையுமிக்க ஒரு ஜனாதிபதியின் தலைமையிலுள்ள அமைச்சரவையின் அமைச்சர்களை மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு அண்மையில் கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் விரோதக் கூட்டத்தில் பொது பல சேனாவினர் கூறியுள்ளனர். இந்த வார்த்தைப் பிரயோகம் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் ஜனாதிபதியை இழிவுபடுத்தும் வார்த்தைப் பிரயோகமாகவே கருதவேண்டியுள்ளது. ஜனாதிபதியையும் அமைச்சரவையும் இழிவுபடுத்தியுள்ள இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இந்த அரசாங்கத்தை நேசிக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்
ஏதிர்பார்ப்பாகும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறன்.
இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை. கூறுபோடவுமில்லை. மாறாக இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்த நாட்டின் ஒவ்வொரு விடயத்திலும் முஸ்லிம்கள் நாட்டுப்பற்றோடு பங்குபற்றியிருக்கிறார்கள். அந்த நாட்டுப்பற்றுடன்தான் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற யதார்த்த வரலாறுகள் இவர்களுக்கு சாட்சிகளாகவுள்ளன. இவற்றையறியாது செயற்படும் இந்த பொது பல சேனா போன்ற அடிப்படைவாதக் குழுக்களின் கூச்சல்களுக்கு நாம் அடிபணியவேன்டிய அவசியமில்லை என்று கூறிக்கொள்ள விரும்புவதுடன் ஏனைய மதத்தவர்களின் உரிமைகளைப் பாதிக்காதவண்ணம் நாம் நமது தனித்துவ உரிமைகளுடன் வாழும் உரிமையுடையவர்கள். அந்தவகையில், இஸ்லாமிய வரையறைக்குள் இன்று இஸ்லாம் ஆடையணிவதில் கூறியுள்ள விதிகளுக்கமைய இந்நாட்டில் வாழும் சகல முஸ்லிம் மாதரும் தங்களது தனித்துவத்தை அடையாளப்படுத்தும் ஆடையாக ஹபாயாவை அணியுமாறு வேண்டுகோள் விடுகின்றேன் என ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Not only BBS. We are muslim community saying all the Muslims politicians "ruling party" are DOGS
ReplyDeleteஇலங்கையை ,ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்க ஜனாதிபதி அவர்கள் முயற்சி எடுக்கின்றார் என்றால் அது பாராட்டப்பட வேண்டியதே.ஆனால் நாடு கட்டிடக்கலாச்சாரத்தில் அபிவிருத்தி அடைந்து ஆகப்போவது என்ன?இலங்கை எதனை சாதிக்க முடியும்.முதலில் நிர்ணயக்கொள்கைகள் ,பண்புகள் ரீதியிலான கலாச்சாரம் மேம்படவேண்டும்.அப்போதுதான் பண்பாடான சமூக அமைப்பு தோற்றம் பெறும்.பல் சமூக மயம் கொண்ட நாடொன்றில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதி பேணப்படல் வேண்டும்.அந்த நியதிகளை உலகுக்கு முதன் முதலில் முன் வைத்த பெருமை இஸ்லாமிய ஷரீஆவையே சாரும்.பிக்ஹுல் அகல்லிய்யாதில் முஸ்லிமா அல்லது பிக்ஹுல் இஃதிறாப் என அழைக்கப்படுகின்றது,ஆக மனிதப்பண்பாடுகளற்ற பொது பல சேன போன்ற மிருக வெறியர்களின் கோமாளித்தனமான பேச்சுகளுக்கும் ,அறிக்கைகளுக்கும் அதற்கு தரை மரைவில் ஆதரவு வழங்கும்அரசுக்கும் ,அதற்கு வக்காலத்து வாங்கும் அரசியல் வாதிகளுக்கும் பயந்தவர்களாக முஸ்லிம்களை, எவரும் எடை போட்டு அரசியல் இலாபம் தேடும் வேலையை செய்யக்கூடாது.எங்களிடம் பாரிய ஆயுதம் இருக்கிறது .அதுவே துஆ.பிரார்த்தனை ஒரு விசுவசியின் ஆயுதம் என நபி(ஸல்)கூறினார்கள்.
ReplyDeleteவேண்டுகோள் நல்ல விடயம் தான், ஆனால் உம்மை போல் தங்களின் அரசியல் சுயநலத்துக்காக உண்மையை விளங்காமல் ( மறைத்து) மக்களை பிழையாக வழி நடத்துவது தான் சமூகத்துக்கு செய்யும் பெரும் துரோகம். நீர் ஒரு சட்டம் படித்தவராய் இருந்தும் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி கையாளப்படுகிறது என்பது விளங்கவில்லையா..! இந்த நாட்டில் நடக்கும் அத்தனை கூத்துக்கும் ராஜபக்க்ஷ அன் கம்பனி தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளமுடியாமல் பேசுகிறீர்கள்..!!
ReplyDelete